LSG vs KKR
LSG vs KKRcricinfo

IPL வரலாற்றில் பதிவான நீளமான ஓவர்.. மோசமான அறிமுகம் பெற்ற ஷமர் ஜோசப்! சால்ட் அதிரடியால் KKR வெற்றி!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
Published on

2024 ஐபிஎல் தொடரானது பாதிகடலை தாண்டி பிளேஆஃப் சுற்றுக்கான மோதலில் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. முதல் 4 இடங்களை பிடிப்பதற்கான போட்டியில் 10 அணிகளும் யுத்தமே நடத்திவருகின்றன. பல்வேறு எமோசன்களோடு பரபரப்பாக நடந்துவரும் ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

தொடர்ச்சியாக 3 போட்டிகளில் வெற்றிபெற்று 3வது இடத்தில் இருந்த LSG அணி, ஒரு தோல்விக்கு பிறகு டாப் 4 (Four) பட்டியலில் தங்களுடைய இடத்தை தக்கவைக்கும் முயற்சியில் களமிறங்கியது. கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.

LSG vs KKR
இவரை வச்சிக்கிட்டா தோத்திங்க DC.. உலககிரிக்கெட்டை ஆட்டிவைத்த Fraser! LSG-ஐ வீழ்த்திய உலகசாதனை வீரர்!

கம்பேக் கொடுத்த மிட்செல் ஸ்டார்க்..

முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணியில் , தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேஎல் ராகுல் மற்றும் டி-காக் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அடுத்தடுத்து டி-காக் 2 பவுண்டரிகளை விரட்ட, 3 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய கேஎல் ராகுல் ரன்களை எடுத்துவந்தார். ஆனால் டி-காக்கை 10 ரன்னில் வெளியேற்றிய வைபவ் முதல் விக்கெட்டை எடுத்துவர, அடுத்தடுத்து களத்திற்குவந்த தீபக் ஹூடா மற்றும் ஸ்டோய்னிஸ் இருவரும் சொற்ப ரன்களில் நடையை கட்டினர்.

மிட்செல் ஸ்டார்க்
மிட்செல் ஸ்டார்க்

உடன் நிலைத்து நின்று ரன்களை எடுத்துவந்த கேஎல் ராகுலை 39 ரன்களில் வெளியேற்றிய ஆண்ட்ரே ரஸ்ஸல் முக்கியமான விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தை கொல்கத்தாவின் பக்கம் திருப்பினார். 95 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி தடுமாற, அடுத்து கைக்கோர்த்த ஆயுஸ் பதோனி மற்றும் நிக்கோலஸ் பூரன் இருவரும் அணியை மீட்க போராடினர்.

நிக்கோலஸ் பூரன்
நிக்கோலஸ் பூரன்

ஆனால் மிடில் ஓவர்களை சிறப்பாக வீசிய சுனில் நரைன் ரன்களை கட்டுப்படுத்த, தரமான கம்பேக் கொடுத்த மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை எடுத்துவந்தார். ரன்களை எடுத்துவர முடியாமல் லக்னோ அணி போராட 2 பவுண்டரிகள் 1 சிக்சர் என விளாசிய பதோனி 29 ரன்கள் எடுத்து வெளியேறினார். கடைசிநேரத்தில் அதிரடி காட்டிய நிக்கோலஸ் பூரன் 2 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என பறக்கவிட்டு 45 ரன்கள் குவிக்க, 20 ஓவர் முடிவில் 161 ரன்களை எடுத்துவந்தது லக்னோ அணி.

LSG vs KKR
“ஓய்வா.. உலகக்கோப்பை வெல்லவேண்டும் என்ற பசி இன்னும் இருக்கு”- 2027 WC வரை விளையாட விரும்பும் ரோகித்!

89 ரன்கள் குவித்த சால்ட்..

162 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி, எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் எளிதாக ரன்களை எடுத்துவந்தது. தொடக்கத்தில் 2 விக்கெட்டுகளை கொல்கத்தா அணி இழந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்று அதிரடி காட்டிய பிலிப் சால்ட் விக்கெட்டையே விட்டுக்கொடுக்காமல் 47 பந்துகளில் 14 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டி 89 ரன்கள் குவித்து மிரட்டிவிட்டார்.

பிலிப் சால்ட்
பிலிப் சால்ட்

ஒருமுனையில் நிலைத்துநின்ற கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 38 ரன்கள் அடிக்க, 16 ஓவரிலேயே இலக்கை எட்டிய KKR அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியை பதிவுசெய்தது. 89 ரன்கள் குவித்த பிலிப் சால்ட் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

LSG vs KKR
'Umpires Indians' ஆன MI? சர்ச்சை முடிவுகளால் ரசிகர்கள் அதிருப்தி! முதல் அணியாக வெளியேறுகிறதா RCB?

மோசமான அறிமுகம் பெற்ற ஷமர் ஜோசப்!

ஆஸ்திரேலியா மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒரு வரலாற்று வெற்றிக்கு அழைத்துச்சென்ற ஷமர் ஜோசப், லக்னோ அணியில் தன்னுடைய முதல் ஐபிஎல் அறிமுகத்தை பெற்றார். ஆனால் அறிமுக போட்டியில் வீசிய முதல் ஓவரிலேயே 22 ரன்களை விட்டுக்கொடுத்த ஷமர் ஜோசப், 6 பந்துகளை வீசவேண்டிய இடத்தில் 10 பந்துகளை வீசி மோசமான அறிமுகத்தை பெற்றார்.

ஷமர் ஜோசப்
ஷமர் ஜோசப்

முதல் 5 பந்துகளை லீகல் டெலிவரியாக வீசிய ஷமர், 6வது பந்தை வீசுவதற்கு 5 டெலிவரிகளை எடுத்துக்கொண்டார். ஐபிஎல் வரலாற்றில் ஒரு வீரர் வீசிய அறிமுக ஓவரே மிக நீளமான ஓவராக அமைந்தது இதுவே முதல்முறை. இருப்பினும் ஷமர் ஜோசப்பின் ஓவரில் 3 கேட்ச்களை லக்னோ அணி வீரர்கள் கோட்டைவிட்டது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

4 போட்டிகளில் 3-ல் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திலிருந்த லக்னோ அணி, அடுத்தடுத்த இரண்டு தோல்விகளால் 5வது இடத்திற்கு சரிந்துள்ளது. கொல்கத்தா அணி 5 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது.

LSG vs KKR
6,6,6,6,6,6.. இரண்டு முறை 6 பந்தில் 6 சிக்சர்கள் அடித்த நேபாள் வீரர்! முதல் வீரராக வரலாறு!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com