சட்டவிரோதம் என கண்டறியப்பட்டால் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த நடைமுறை ரத்து செய்யப்படும் என தேர்தல் ஆணையத்தை உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.
பீகார் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான விஜய்குமார் சின்ஹா இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் வைஷாலி மாவட்டத்தில் உள்ள மஹுவா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடப் போவதாக தேஜ் பிரதாப் யாதவ் அறிவித்துள்ளார்.
பீகாரில் வாக்காளர் திருத்தத்தின்போது ஆதார், வாக்காளர் அட்டை, குடும்ப அட்டையை ஆவணமாக ஏற்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த நிலையில் வழக்கை ஒத்திவைத்தது.