இந்த வார ஓடிடி தியேட்டர் லிஸ்ட்
இந்த வார ஓடிடி தியேட்டர் லிஸ்ட் fb

Retro|Captain America: Brave New World|Karate Kid: Legends .. இந்த வார ஓடிடி தியேட்டர் லிஸ்ட் இதோ..!

Retro|Captain America: Brave New World|Karate Kid: Legends ...உள்ளிட்ட படங்கள் இந்த வாரம் வெளியாக இருக்கின்றன.

1. Series

Katha Sudha: Naathi Charaamai (Telugu) etv WIN - May 25

வெகேஸ்னா சதிஷ் இயக்கியுள்ள சீரிஸ் `Katha Sudha: Naathi Charaamai'. ஆந்தாலஜியாக ஒவ்வொரு வாரமும் வரும் குறும்படத்தின் இந்த  வார ரிலீஸ் இது.

2. Criminal Justice: A Family Matter (Hindi) Jio Hotstar - May 29

ரோஹன் சிப்பி இயக்கத்தில் பங்கஜ் திரிபாதி நடித்துள்ள சீரிஸ் `Criminal Justice: A Family Matter'. முன்பு இரண்டு சீசன்களுக்கு நானல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இப்போது முன்றாவது சீசன் வெளியாகவுள்ளது. வழக்கம் போல் ஒரு கோர்ட் ரூம் டிராமாதான்.

3. Kankhajura (Hindi) SonyLIV - May 30

சாந்தன் அரோரா இயக்கியுள்ள சீரிஸ் `Kankhajura'. அதிகாரத்தை மையப்படுத்திய கதையாக இருக்கும்.

4. Post Theatrical Digital Streaming

Sikandar (Hindi) Netflix - May 25

முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடித்த படம் `Sikandar'. சிக்கந்தர்  தன் மனைவிக்காக செய்யும் விஷயங்களே கதை.

5. Chaurya Paatham (Telugu) Prime - May 27

நிகில் இயக்கிய படம் `Chaurya Paatham'. அமைதியான ஒரு கிராமத்தில் கொள்ளையிட திட்டமிடும் ஒரு குழுவின் கதை.

6. Agnyathavasi (Kannada) Zee5 - May 28

ஜனார்தன் சிக்கன்னா இயக்கியுள்ள படம் `Agnyathavasi'. கிராமம் ஒன்றில் நடக்கும் கொலையும், அதை பற்றிய விசாரணைகளும் கதை.

7. Captain America: Brave New World (English) Jio Hotstar - May 28

Julius Onah இயக்கியுள்ள படம் `Captain America: Brave New World'. சர்வதேச பிரச்சனை ஒன்றின் காரணத்தை கண்டுபிடிக்க போராடும் புது கேப்டன் அமெரிக்காவின் முயற்சிகளே கதை. 

8. Hit 3 (Telugu) Netflix - May 29

சைலேஷ் இயக்கத்தில் நானி நடித்த படம் `HIT 3'. அர்ஜுன் சர்க்கார் எடுக்கும் வழக்கும், அதை தீர்க்க அவர் எடுக்கும் முயற்சிகளுமே கதை.

9. Thudarum (Malayalam) Jio Hotstar - May 30

தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால் நடித்த படம் `Thudarum'. டிரைவர் ஷண்முகம், தன்னுடைய அம்பாசிட்டர் காரின் மேல் முகுந்த பாசம் வைத்திருக்கிறார். அது காணாமல் போன பின்பு என்னாகிறது என்பதே கதை.

10. Retro (Tamil) Netflix - May 31

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் `ரெட்ரோ'. தன் பழைய வாழ்க்கையை காதலிக்காக கைவிட நினைக்கும் ஹீரோவுக்கு என்ன ஆகிறது என்பதே கதை.

11. A Complete Unknown (English) Jio Hotstar - May 31

James Mangold இயக்கத்தில் Timothée Chalamet நடித்துள்ள படம் `A Complete Unknown'. பாப் டைலன் என்ற இசைக் கலைஞனின் பயணமே கதை.

12. Theatre

Manidhargal (Tamil) - May 30

ராம் இந்திரா இயக்கியுள்ள படம் `மனிதர்கள்'. சில இளைஞர்களின் ஒரு த்ரில்லிங்கான இரவு பற்றிய கதை.

13. The Verdict (Tamil) - May 30

கிருஷ்ணா ஷங்கர் இயக்கத்தில் வரலக்ஷ்மி - ஸ்ருதி ஹரிஹரன் நடித்துள்ள படம் `தி வெர்டிக்ட்'. பெண் ஒருவர் கொலை செய்யப்பட, சந்தேக பார்வை நம்ருதா நோக்கி திரும்புகிறது. அவர் நடத்தும் சட்டப்போராட்டமே கதை.

14. Raja Puthiran (Tamil) - May 30

மஹா கந்தன் இயக்கத்தில் பிரபு, வெற்றி நடித்துள்ள படம் `ராஜ புத்திரன்'. கிராமத்தில் வசிக்கும் தந்தை - மகன் பற்றிய கதை.

15. Jinn - The Pet (Tamil) - May 30

டி ஆர் பாலா இயக்கத்தில் முகேன் ராவ் நடித்துள்ள படம் `ஜின்'. வாழ்க்கையில் ஆசைப்பட்டதெல்லாம் நடக்க மாந்திரிகத்தை தேர்ந்தெடுக்கும் இளைஞனுக்கு என்ன நடக்கிறது என்பதே கதை.

16. Bhairavam (Telugu) - May 30

விஜய் இயக்கத்தில் பெல்லாம் கொண்டா ஸ்ரீனிவாஸ், மஞ்சு மனோஜ், நர ரோஹித் நடித்துள்ள படம் `பைரவம்'. தமிழில் வெளியான கருடன் படத்தின் தெலுங்கு ரீமேக் இது.

17. Moonwalk (Malayalam) - May 30

வினோத் இயக்கியுள்ள படம் `Moonwalk'. நடன போட்டி ஒன்றில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் பற்றிய கதை.

18. Sister Midnight (Hindi) - May 30

கரண் இயக்கத்தில் ராதிகா ஆப்தே நடித்துள்ள படம் `Sister Midnight'. புதிதாக திருமணமான பெண்ணின் கதையை காமெடி கலந்து சொல்லும் படம்.

19. Karate Kid: Legends (English) - May 30

Jonathan Entwistle இயக்கத்தில் ஜாக்கி சான் நடித்துள்ள படம் `Karate Kid: Legends'. கராத்தே போட்டிகளில் Li Fong எப்படி ஜெயிக்கிறான் என்பதே கதை.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com