பாகிஸ்தானில் மாகாணங்களைப் பிரிப்பதற்கான ராணுவத் திட்டம், அரசியல் மற்றும் பொருளாதார மையங்களை மாற்றும் முயற்சியாகவும், ராணுவத்தின் கட்டுப்பாட்டை வலுப்படுத்தும் நடவடிக்கையாகவும் விமர்சிக்கப்படுகிறது.
ஒரு ராணுவத் தலைவருக்கு இத்தகைய அதிகாரங்கள் வழங்கப்பட்டிருப்பது நாட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இது அண்டை நாடுகளுக்கு கிலியை ஏற்படுத்தும் என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
அசிம் முனீருக்கும் இம்ரான் கானுக்கும் இடையே கடந்த காலங்களில் என்ன பிரச்னை நிகழ்ந்தது? ஏன் அசிம், முனீர் இம்ரானைக் குறிவைக்கிறார் என்பது குறித்து ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளைக் காண்போம்.
பாகிஸ்தானின் ராணுவத் தளபதி அசிம் முனீரின் பதவி நீட்டிப்புக்கு ஏற்றவாறு அரசியல் சாசனத்தின் 243வது பிரிவில் 27வது திருத்தத்தை மேற்கொள்ளும் மசோதா அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.