two year old bites cobra in bihar boy survives snake dies
model imagemeta ai

பீகார் | வீட்டுக்குள் நுழைந்த 2 அடி நீள நாகப் பாம்பு.. கடித்தே கொன்ற 2 வயதுக் குழந்தை!

பீகாரில் 2 அடி நீள நாகப் பாம்புவை, 2 வயது குழந்தை ஒன்று கடித்தே கொன்றிருப்பது அரிதினும் அரிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
Published on

கொடிய விஷமிகுந்த உயிரினங்களில் பாம்பும் ஒன்றாக உள்ளது. ஒருசில பாம்பு வகைகளைத் தவிர ராஜநாகம், கோப்ரா, நாகப் பாம்பு உள்ளிட்டவை விஷம் மிகுந்தவையாக இருக்கிறது. அப்படியான, பாம்புகள் கடித்து, அதற்கேற்ப உடனடியாகச் சிகிச்சை அளிக்காவிட்டால், அது உயிருக்கே ஆபத்தாக முடியும். பெரும்பாலும் பாம்பு கடித்து அதனால் விஷமேறிச் சாகும் உயிர்களை நாம் பார்க்க முடியும். இதில் கூடுமானவரை மனித உயிர்கள் காப்பாற்றப்பட்டாலும் ஐந்தறிவு விலங்குகள் அதன் தாக்குதலால் உயிர் இழப்பைச் சந்தித்து வருகின்றன. இந்த நிலையில், பீகாரில் 2 அடி நீள நாகப் பாம்புவை, 2 வயது குழந்தை ஒன்று கடித்தே கொன்றிருப்பது அரிதினும் அரிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

two year old bites cobra in bihar boy survives snake dies
model imagemeta ai

பீகார் மாநிலம் பெட்டியா மாவட்டத்தில் உள்ள பங்கட்வா கிராமத்தைச் சேர்ந்தவர் சுனில் சாவ். இவரது மகன் கோவிந்தா. இரண்டு வயது நிறைவடைந்த இந்தக் குழந்தை, தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்துள்ளது. அப்போது, வீட்டுக்குள் 2 அடி நீளமுள்ள நாகப் பாம்பு ஒன்று வீட்டுக்குள் நுழைந்துள்ளது. அந்தப் பாம்பை, பொம்மை என்ற நினைத்த குழந்தை தனது வாயில் வைத்து கடித்துள்ளது. பாம்பைக் கடித்த அந்தக் குழந்தை மயக்கம் போட்டு விழுந்துள்ளது. அதேநேரத்தில், அந்தக் குழந்தை தனது பற்களால் அந்தப் பாம்புவைக் கடித்துத் துப்பியதால், அது அங்கேயே இறந்துபோயுள்ளது. இதையறிந்த குடும்பத்தினர், உடனடியாகக் குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குழந்தை காப்பாற்றப்பட்டது.

இதையும் படிக்க: காத்மாண்டு | ஒரே மாதத்தில் 9 ராஜநாகம், ஒரு கோப்ரா கண்டுபிடிப்பு - எவரெஸ்ட் செல்வோருக்கு அபாயம்!

two year old bites cobra in bihar boy survives snake dies
மனிதனைக் கடித்த கொடிய விஷ பாம்பு 5 நிமிடத்தில் இறப்பு.. ம.பியில் நிகழ்ந்த அதிசயம்! இதுவும் காரணமா!!

மருத்துவக் குழுவின் கூற்றுப்படி, குழந்தை கடித்ததால் தலை மற்றும் வாயில் ஏற்பட்ட காயத்தால் நாகப்பாம்பு இறந்ததாகத் தெரிகிறது. இதற்கிடையில், கோவிந்தாவின் மீது விஷத்தின் தாக்கம் ஒப்பீட்டளவில் லேசானது. அவரை மயக்கமடையச் செய்யும் அளவுக்கு இருந்தது. ஆனால் மரணத்தை விளைவிக்கும் அளவுக்கு இல்லை. சரியான நேரத்தில் சிகிச்சை அளித்ததால் கோவிந்தாவின் உயிரைக் காப்பாற்ற முடிந்தது. குழந்தையின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. மருத்துவர்களின் மேற்பார்வையின் கீழ் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளது.

two year old bites cobra in bihar boy survives snake dies
model imagemeta ai

இதுகுறித்து வனவிலங்கு வட்டாரம், “கனமழை மற்றும் திட்டமிடப்படாத கட்டுமானம் ஆகியவை, இயற்கையான வாழ்விடங்களிலிருந்து பாம்புகள் வெளியேறி வீடுகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்து வருகின்றன. சமீபத்தில், குருகிராமில் மழைக்காலத்தின் மத்தியில் பாம்புகளைப் பார்ப்பது அதிகரித்துள்ளது. ஜூலை மாதம் நகரம் முழுவதும் 85 பாம்புகள் மீட்கப்பட்டன” எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: உலகிற்கு ராஜ நாகங்கள் தரும் அதிர்ச்சி செய்தி.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

two year old bites cobra in bihar boy survives snake dies
ம.பி. |ஒரே நபர் 30 முறை பாம்பு கடித்து இறந்ததாக போலிச் சான்றிதழ்.. ரூ.11 கோடி மோசடி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com