’அமெரிக்கா எங்கள் எதிரி நாடு’ - முதன்முறையாக அறிவித்த ரஷ்யா! பின்னணி இதுதான்!

அமெரிக்கா எங்க எதிரி நாடு என ரஷ்யா முதன்முறையாக தெரிவித்துள்ளது.
ஜோ பைடன், புடின்
ஜோ பைடன், புடின்எக்ஸ் தளம்

நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு, பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும் ரஷ்யாவுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது.

russia - ukraine war
russia - ukraine wartwitter

இந்த நிலையில், தங்கள் எல்லைக்குள் தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள் அளிப்பதற்குப் பதிலடியாக, அந்த நாடுகளின் எதிரிகளுக்கு அதே போன்ற ஆயுதங்கள் விநியோகிக்கப்படும் என்று ரஷ்ய அதிபா் விளாடிமிர் புதின் எச்சரித்துள்ளாா்.

இதையும் படிக்க: “விவசாயிகள் ரூ.100-க்கு போராடுறாங்களா?” - கங்கனா அறையப்பட்ட விவகாரத்தில் பெண் காவலர் சொன்ன விளக்கம்!

ஜோ பைடன், புடின்
ரஷ்யாவின் இன்னொரு போர்க் கப்பல் தகர்ப்பு.. ட்ரோன் மூலம் தாக்கிய உக்ரைன் ராணுவம் தகவல்!

வடகிழக்குப் பிராந்தியமான காா்கிவில் அண்மைக் காலமாக தாக்குதல் நடத்தி ரஷ்யா முன்னேறிவரும் நிலையில், அந்தத் தாக்குதலை முறியடிக்க காா்கிவ் எல்லைக்கு மிக அருகே உள்ள ரஷ்ய பகுதியில் மட்டும் தங்கள் ஆயுதங்களைக் கொண்டு உக்ரைன் படையினா் தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் அனுமதி அளித்ததாக தகவல்கள் வெளியாகின. அதைப் பின்பற்றி, தங்கள் ஆயுதங்களைக் கொண்டும் ரஷ்ய எல்லைக்குள் தாக்குதல் நடத்தும் உரிமை உக்ரைனுக்கு உள்ளது என்று ஜொ்மனி அண்மையில் அறிவித்தது. அதற்குப் பதிலடியாகவே, மேற்கத்திய நாடுகளின் மீது தாக்குதல் நடத்துவதற்காக அவற்றின் எதிரி நாடுகளுக்கு ஆயுதங்கள் அளிக்கப்போவதாக விளாடிமிர் புதின் எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில், விளாடிமிர் புட்டினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், அமெரிக்காவை முதன்முறையாக எதிரி நாடு எனக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர், “இப்போது நாங்கள் அவர்களுக்கு எதிரியாக இருக்கிறோம். அதுபோல், அமெரிக்கா எங்களுக்கு எதிரி நாடாக உள்ளது” எனத் தெரிவித்திருப்பது உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக, அமெரிக்க முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஸ்காட் ரிட்டர் ரஷ்யாவிற்கு பயணம் செய்ய இருந்தார். இவர், அமெரிக்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவர், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மன்றத்தில் கலந்துகொள்ள புறப்பட்டபோது அவருடைய பாஸ்போர்ட் அமெரிக்க காவல் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்குப் பதிலளித்தபோதுதான் டிமிட்ரி, அமெரிக்காவை எதிரிநாடு எனக் குறிப்பிட்டார். இது அமெரிக்க-ரஷ்யா உறவுகளில் மேலும் சிக்கல்களுக்கு வழிவகுத்துள்ளது.

இதையும் படிக்க: அக்னிவீர் திட்டத்திற்கு ஆப்பு.. ஆட்டத்தைத் தொடங்கிய நிதிஷ்குமார்.. அழுத்தத்தில் பாஜக தலைவர்கள்!

ஜோ பைடன், புடின்
ரஷ்யா விடுத்த எச்சரிக்கை... கண்டுகொள்ளாமல் அதிரடி நடவடிக்கை எடுத்த அமெரிக்கா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com