“விவசாயிகள் ரூ.100-க்கு போராடுறாங்களா?” - கங்கனா அறையப்பட்ட விவகாரத்தில் பெண் காவலர் சொன்ன விளக்கம்!

சண்டிகரில் பெண் காவலர் ஒருவர், கங்கனா ரனாவத்தை அறைந்தது ஏன் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
குல்விந்தர் கவுர், கங்கனா ரனாவத்
குல்விந்தர் கவுர், கங்கனா ரனாவத்எக்ஸ் தளம்

இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகை கங்கனா ரனாவத் அமோக வெற்றிபெற்றுள்ளார். இந்த நிலையில், இன்று சண்டிகர் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் காவலர் ஒருவர், அவரை அறைந்ததாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து கங்கனா ரனாவத்தும் வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், “பாதுகாப்புச் சோதனையின்போது இந்தச் சம்பவம் நடைபெற்றது. அப்போது, அந்தப் பெண் காவலர் நான் கடக்கும்வரை காத்திருந்தார். பிறகு வந்து என்னை அறைந்தார். ’ஏன் என்னை அடித்தீர்கள்’ என்று நான் அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், 'நான் விவசாயிகளை ஆதரிக்கிறேன்’ எனத் தெரிவித்தார். எனினும், நான் தற்போது பாதுகாப்பாக இருக்கிறேன். ஆனால், பஞ்சாபில் தீவிரவாதம் அதிகரித்து வருகிறது என்பதுதான் எனது கவலையாக இருக்கிறது” என அதில் தெரிவித்திருந்தார். அத்துடன் உள்துறை அமைச்சகத்திடமும் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில், கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த அந்தப் பெண் காவலரின் பெயர் குல்விந்தர் கவுர் என தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இதையும் படிக்க: அக்னிவீர் திட்டத்திற்கு ஆப்பு.. ஆட்டத்தைத் தொடங்கிய நிதிஷ்குமார்.. அழுத்தத்தில் பாஜக தலைவர்கள்!

குல்விந்தர் கவுர், கங்கனா ரனாவத்
”பஞ்சாப்பில் தீவிரவாதிகள் அதிகரிப்பு” - பாதுகாப்பு காவலர் கன்னத்தில் அறைந்ததாக கங்கனா ரனாவத் புகார்!

இதுகுறித்து ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, “குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள ஒருவர் இதில் ஈடுபட்டது வருத்தமளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்

கங்கனா ரனாவத்தை அறைந்ததாகக் கூறப்படும் பெண் காவலரான குல்விந்தர் கவுர், ”விவசாயிகள் போராட்டத்தின்போது கங்கனா கருத்து ஒன்றைக் கூறியிருந்தார். 100 ரூபாய்க்காக விவசாயிகள் அங்கே (போராட்டத்தில்) உட்கார்ந்திருக்கிறார்கள். இதற்கு என் அம்மா அங்கே உட்கார்ந்தபடியே அப்போது எதிர்ப்புத் தெரிவித்தார்” எனத் தெரிவித்துள்ளார். இந்த ஆத்திரத்தால் அவர் அறைந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, பாஜக அரசு கொண்டுவந்த வேளாண் சட்டத் திருத்தத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தை நடத்தினர். டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் உலகையே திரும்பிப் பார்க்கவைத்தது. இதற்கு எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பியது. இந்தப் போராட்டம் குறித்து நடிகை கங்கனா ரணாவத் தனது எக்ஸ் தளத்தில், வயதான பெண்மணி ஒருவரின் படத்தைப் பகிர்ந்து, ‘ரூ.100 கிடைக்கிறது’ என கிண்டலாகப் பதிவிட்டிருந்தார். இது விவசாயிகள் மத்தியில் அதிர்வலைகளைக் கிளப்பியது.

இதையடுத்து தனது பதிவை கங்கனா ரனாவத் உடனே நீக்கினார். தொடர்ந்து அவர், ’போராடும் விவசாயிகளை பயங்கரவாதிகள்’ எனவும் குறிப்பிட்டிருந்தார். இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பின்னர், அந்தப் பதிவையும் நீக்கியிருந்தார். இந்த எதிர்ப்பு அலை, சமீபத்தில் அவர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டபோது எதிரொலித்தது. கங்கனா ரனாவத் பரப்புரை வாகனத்தை சண்டிகர் விவசாயிகள் தடுத்து எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: தேர்தல் தோல்வி| அதிருப்தியில் அஜித் பவார்.. தாய் கட்சிக்கு திரும்ப தயாராகும் 18 எம்.எல்.ஏக்கள்!

குல்விந்தர் கவுர், கங்கனா ரனாவத்
விவசாயிகளை தீவிரவாதிகளாக விமர்சித்ததாக புகார்: நடிகை கங்கனா ரனாவத் மீது வழக்குப்பதிவு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com