ship
shiptwitter

ரஷ்யாவின் இன்னொரு போர்க் கப்பல் தகர்ப்பு.. ட்ரோன் மூலம் தாக்கிய உக்ரைன் ராணுவம் தகவல்!

ரஷ்யாவின் மற்றொரு ரோந்து கப்பலையும் அழித்திருப்பதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
Published on

நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு, பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும் ரஷ்யாவுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர் 2 ஆண்டுகளைக் கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவுக்குச் சொந்தமான படைக்கப்பலை கருங்கடல் பகுதியில் தாக்கி மூழ்கடித்துள்ளதாக உக்ரைன் கூறியுள்ளது

இதுகுறித்து உக்ரைன் நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்தியில், ’உக்ரைனின் சிறப்பு பிரிவான குரூப் 13, ரஷ்யாவின் ரோந்து கப்பலை தாக்கியது. இதில், ரூ.538 கோடி மதிப்பிலான செர்கெய் கொடோவ் என்ற அந்த கப்பலை, உக்ரைன் கடல்படையின் ஆளில்லா விமானங்களான மகுரா வி5 தாக்கியன. இதில், கப்பலின் விளிம்பு பகுதி, வலது மற்றும் இடது புறங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இனிமையான நாளின் தொடக்கம். வீரர்களே, சிறந்த பணியை செய்திருக்கிறீர்கள்’ என தெரிவித்திருந்தது. எனினும், இதுகுறித்து ரஷ்ய ராணுவம் எந்த அதிகாரப்பூர்வமான தகவலையும் வெளியிடவில்லை.

அதேநேரத்தில், கருங்கடலில் ரஷ்ய படைக் கப்பலை மூழ்கடித்ததாக உக்ரைன் கூறுவது கடந்த 35 நாட்களில் இது 3வது முறையாகும். ஏற்கெனவே, ரஷ்யாவின் 2 போர்க்கப்பல்களை ட்ரோன் மூலம் தாக்கி அழித்ததாக உக்ரைனின் ஜியுஆா் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com