ரஷ்யா விடுத்த எச்சரிக்கை... கண்டுகொள்ளாமல் அதிரடி நடவடிக்கை எடுத்த அமெரிக்கா

ரஷ்யா விடுத்த எச்சரிக்கை... கண்டுகொள்ளாமல் அதிரடி நடவடிக்கை எடுத்த அமெரிக்கா
ரஷ்யா விடுத்த எச்சரிக்கை... கண்டுகொள்ளாமல் அதிரடி நடவடிக்கை எடுத்த அமெரிக்கா

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முற்றிலும் தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

உக்ரைனில் ரஷ்யா மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக பல்வேறு நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இந்நிலையில் ரஷ்யா அதிக வருவாய் ஈட்டும் எரிவாயு ஏற்றுமதிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால் எரிவாயு இறக்குமதியில் வெளிநாடுகள் தடை விதித்தால் பேரழிவைச் சந்திக்க நேரிடும் என ரஷ்ய துணை பிரதமர் அலெக்ஸாண்டர் நோவாக் எச்சரிக்கை விடுத்திருந்தார். இத்தகைய சூழலில் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

அமெரிக்க நாள் ஒன்றிற்கு சுமார் 7 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருள்களை ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்து வந்த நிலையில் அவற்றிற்கு பைடன் முற்றிலும் தடை விதித்துள்ளார். இது ரஷியாவின் பொருளாதாரத்திற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவை விட மற்ற ஐரோப்பிய நாடுகள் அதிகளவில் ரஷ்யாவிடம் இருந்து எரிவாயு உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்து வந்த நிலையில், ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் ஆலோசித்த பிறகு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் பைடன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தொலைபேசி வாயிலாக செலன்ஸ்கியிடம் உக்ரைனின் நிலவரம் குறித்து கேட்டறிந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் நாட்டுக்கும் மக்களுக்கும் தொடர்ந்து ஆதரவு அளிக்கப்படும் என தெரிவித்தார். மேலும் பாதுகாப்பு தொடர்பான உதவிகளுக்காக ஒரு பில்லியன் டாலரையும் அமெரிக்க தரப்பில் ஜோ பைடன் வழங்கியுள்ளார்.

இதையும் படிக்க: உக்ரைனுக்கு 723 மில்லியன் டாலர் நிதியுதவி: உலக வங்கி ஒப்புதல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com