நிதிஷ்குமார்
நிதிஷ்குமார்எக்ஸ் தளம்

அக்னிவீர் திட்டத்திற்கு ஆப்பு.. ஆட்டத்தைத் தொடங்கிய நிதிஷ்குமார்.. அழுத்தத்தில் பாஜக தலைவர்கள்!

நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், அக்னிவீர் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

18வது மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மைக்கான இடங்களை பாஜக கைப்பற்றாததால், அதன் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க முடிவு செய்துள்ளது. இதற்கான ஆதரவை ஆந்திராவின் தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடுவும், பீகாரின் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமாரும் வழங்கியுள்ளனர். எனினும், இதுதொடர்பான பேச்சுகளே தற்போது விவாதத்தை ஏற்படுத்தி வருகின்றன. சந்திரபாபு நாயுடு, சபாநாயகர் பதவியுடன் சில முக்கியமான துறைகளுக்கு கேபினெட் அமைச்சர் பதவிகளைக் கேட்டிருப்பதாகவும், நிதிஷ்குமாரும் துணை சபாநாயகர் பதவியுடன், சில முக்கிய துறைகளுக்கு கேபினெட் மற்றும் இணையமைச்சர் பதவிகளைக் கேட்டிருப்பதாகவும் குறிப்பாக, இரு மாநிலங்களுக்கும் சிறப்பு அந்தஸ்து கேட்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இதில் சிலர், ஒரே துறைகளைக் குறிவைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இது ஒருபுறமிருக்க, மறுபும் இதையும் தாண்டி சில விசயங்களை செய்து தர வேண்டும் என சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் விரும்புவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், அக்னிவீர் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டபோது பீகாரில் வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டன. இது, அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பதாலேயே இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நிதிஷ்குமார் கட்சி விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இளைஞர்கள் மத்தியில் எழுந்த கொந்தளிப்பை சமாதானம் செய்யும் வகையில், அக்னிவீர் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: உ.பி.|16 இடங்கள் பாஜகவுக்கு தாரைவார்ப்பு.. I-N-D-I-A கூட்டணியின் வெற்றியைப் பறித்த பகுஜன் சமாஜ்!

நிதிஷ்குமார்
'முக்கிய கேபினேட் இலாக்காக்கள், சபாநாயகர் பதவி'..பாஜகவுக்கு சந்திரபாபு, நிதிஷ் வைக்கும் நிபந்தனைகள்!

இதுகுறித்து ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் கே.சி. தியாகி, "அக்னிவீர் திட்டத்தை மறுபரிசீலனை செய்வது அவசியம். இந்த திட்டத்திற்கு ஏராளமான எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் தாக்கம் தேர்தலில் பார்க்க முடிந்தது. நாங்கள் இதை வலியுறுத்தமாட்டோம். அக்னிவீர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது ஆயுதப்படைகளின் பெரும் பகுதியினர் மத்தியில் அதிருப்தி நிலவியது. அவர்களது குடும்பத்தினரும் தேர்தலின்போது எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே, இதுகுறித்து விவாதிக்க வேண்டிய அவசியம் உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

கூட்டணிக் கட்சிகள் அடுத்தடுத்து வைத்திருக்கும் நிபந்தனைகளால் பாஜகவின் மூத்த தலைவர்களான மோடி, அமித் ஷா, ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர் அழுத்தத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. காரணம், கடந்த காலங்களில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் இடங்களைப் பெற்று ஆட்சியமைத்திருந்தது. அதனால், அக்கட்சி உறுப்பினர்களின் ஆதரவாலேயே தாம் நினைத்த சட்டங்களையும், திட்டங்களையும் எளிதாக நிறைவேற்ற முடிந்தது. ஆனால், இந்த முறை பாஜகவுக்குப் பெரும்பான்மை இல்லாததால் எந்த மசோதாக்களையும் நிறைவேற்ற வேண்டுமானால், கண்டிப்பாக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு வேண்டும். இதனாலேயே பாஜக அழுத்தத்தில் உள்ளது. இதையடுத்தே, இப்போதே கூட்டணிக் கட்சிகள் நிபந்தனைகளை வைக்கத் தொடங்கிவிட்டன.

நிதிஷ் குமார்
நிதிஷ் குமார்புதிய தலைமுறை

அக்னிவீர் திட்டத்தின் மூலம் ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படைக்குத் தேர்வு செய்யப்படும் வீரர்கள், 4 வருட வேலை என்ற அடிப்படையில் அவர்கள் நியமனம் செய்யப்படுவர். அதன்பின் 15 வருடத்திற்கு நிரந்தர கமிஷன் என்ற அடிப்படையில் 25 சதவீத சம்பளம் வழங்கப்படும். இதனால் பென்சன் வழங்கும் தொகை மிச்சமாகும். இத்திட்டத்தைத்தான் கடந்த முறை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த பாஜக, 2022ஆம் ஆண்டு நிறைவேற்றியது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக, பீகார் மாநிலத்தில் இளைஞர்கள் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்தியதுடன், ரயில்களுக்கு தீ வைத்து எரித்த சம்பவங்களும் அரங்கேறின.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, அக்னிவீர திட்டத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ”பஞ்சாப்பில் தீவிரவாதிகள் அதிகரிப்பு” - பாதுகாப்பு காவலர் கன்னத்தில் அறைந்ததாக கங்கனா ரனாவத் புகார்!

நிதிஷ்குமார்
I-N-D-I-A கூட்டணியிலிருந்து விலகல் ஏன்? நிதிஷ்குமார் விளக்கம்.. உண்மையான காரணம் என்ன?
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com