தொடரும் விரிசல்: இந்தியாவுக்கு ஆதரவு.. திடீர் பல்டி அடித்த மாலத்தீவு அதிபர்.. என்ன காரணம்?

மாலத்தீவு மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கிடையே தொடர்ந்து விரிசல் ஏற்பட்டு வந்த நிலையில், மாலத்தீவு அதிபர் முய்சு தங்களின் கடன் சுமையைக் குறைக்க இந்தியாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முகம்மது முய்சு
முகம்மது முய்சுட்விட்டர்

இந்தியா - மாலத்தீவு உறவில் தொடரும் விரிசல்!

சில மாதங்களுக்கு முன்னர் பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை குறிப்பிட்டு மாலத்தீவு அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் விரிசல் அதிகரித்தது. அந்த நேரத்தில், மாலத்தீவின் புதிய அதிபர் முகம்மது முய்சு, அரசுமுறை பயணமாக சீன நாட்டிற்குச் சென்றிருந்தது இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படி, இந்தியா - மாலத்தீவு இடையே உரசல் போக்கு தொடர்ந்து வந்த நிலையில், சீனாவுடன் இணைப்பைப் பலப்படுத்த மாலத்தீவு அதிபர் பல்வேறு யுக்திகளை முன்னெடுத்தார். அப்போது இருநாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

முகம்மது முய்சு
சீனாவுடன் ஒப்பந்தம்.. இந்தியாவுக்கு எதிராக மீண்டும் களத்தில் குதித்த மாலத்தீவு அதிபர்! நடந்தது என்ன?

அதன் அங்கமாக மாலத்தீவில் இருந்து இந்தியா தனது படைகளை வாபஸ் பெறுமாறு, அந்நாட்டு அதிபர் முய்சு காலக்கெடு விதித்தார். அதன்படி இந்திய ராணுவ வீரர்கள் மார்ச் 10க்குள் அந்நாட்டைவிட்டு வெளியேறியாக வேண்டும் என அவர் அறிவித்திருந்தார். இதுதொடர்பாக இருதரப்பிலும் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அதன்பின்னர் நாடாளுமன்றத்தில் பேசிய முய்சு, ’ஒரு விமானத் தளத்தில் இருந்து இந்திய வீரர்கள் 2024 மார்ச் 10ஆம் தேதிக்குள் திருப்பி அனுப்பப்படுவார்கள். மீதமுள்ள இரண்டு விமான தளங்களில் இருக்கும் வீரர்கள் 2024 மே 10ஆம் தேதிக்குள் அனுப்பப்படுவார்கள்’ என்றும் அறிவித்தார்.

இதையும் படிக்க: 2009-ல் தொடங்கிய பயணம்..தவிர்க்க முடியாத இடத்தில் 'நாம் தமிழர் கட்சி’ - சிக்கலாகுமா சின்னம் பிரச்னை?

திடீர் பல்டி அடித்த மாலத்தீவு அதிபர் முய்சு!

மாலத்தீவில் உள்ள மூன்று விமானத் தளங்களை இந்திய ராணுவம் நிர்வகித்து வந்தது. மாலத்தீவுக்கு மருத்துவ உதவி மற்றும் மனிதாபிமான சேவைகளுக்காக இரண்டு ஹெலிகாப்டா்கள், ஒரு டாா்னியா் சிறிய ரக விமானம் ஆகியவற்றை இந்தியா வழங்கியது. அவற்றை அந்நாட்டில் பராமரித்து, இயக்குவது உள்ளிட்ட பணிகளில் சுமாா் 88 இந்திய ராணுவ வீரா்கள் ஈடுபட்டனா். இந்த நிலையில், மாலத்தீவு அதிபர் கேட்டுக் கொண்டதன்படி, அந்நாட்டில் இருந்து இந்திய ராணுவ வீரா்களின் முதல் குழு கடந்த சில நாள்களுக்கு முன்னா் தாயகம் திரும்பியது. மேலும், வரும் மே 10ஆம் தேதிக்குள் மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரா்கள் முற்றிலும் திரும்பப் பெறப்படுவாா்கள் என்று மாலத்தீவு வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

முகம்மது முய்சு
முகம்மது முய்சுபுதிய தலைமுறை
இந்த நிலையில், ”மாலத்தீவுக்கு இந்தியா கடன் நிவாரணம் அளிக்க வேண்டும்” என்று அந்நாட்டு அதிபா் முகம்மது முய்சு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுதொடர்பாக கடந்த மார்ச் 21ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மாலத்தீவின் தேசிய பாதுகாப்பு கருதியே இந்திய வீரா்கள் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தினேன். இந்தியா மட்டுமின்றி வேறு எந்தவொரு நாட்டின் ராணுவம் மாலத்தீவில் இருந்திருந்தாலும், இதைத்தான் எனது அரசு செய்திருக்கும். இதில் வேறு எந்த தனிப்பட்ட காரணமும் இல்லை. மாலத்தீவுக்கு உதவிகள் வழங்குவதில் இந்தியா முக்கியப் பங்காற்றியுள்ளது. மாலத்தீவில் ஏராளமான திட்டங்களை இந்தியா அமல்படுத்தியுள்ளது. அந்த வகையில், மாலத்தீவின் நெருங்கிய கூட்டாளியாக இந்தியா தொடா்ந்து நீடிக்கும்.

இந்தியாவிடம் மாலத்தீவு கடன் பெற்றுள்ள நிலையில், அந்தக் கடன் சுமையை மாலத்தீவு பொருளாதாரத்தால் தாங்க முடியாது. எனவே கடனை குறைத்தல் அல்லது கடனுக்கான வட்டி விகிதங்கள், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலத்தைத் திருத்தியமைத்தல் போன்ற வழிகளில் மாலத்தீவுக்கு இந்தியா கடன் நிவாரணம் அளிக்க வேண்டும்.

இவற்றை இந்திய அரசு செய்யும் என்று நம்புகிறேன். மாலத்தீவின் பொருளாதார நிலைக்கு ஏற்ப கடனைத் திருப்பிச் செலுத்துவது குறித்து இந்திய அரசுடன் பேச்சுவாா்த்தை மேற்கொண்டு வருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: கல்லூரியில் பாஜக மீட்டிங்.. கலந்துகொள்ள மாணவர்கள் எதிர்ப்பு.. ஐடி கார்டுகளைப் பறித்து கண்டிப்பு!

முகம்மது முய்சு
மாலத்தீவு: நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் எம்.பிக்கள் தாக்குதல்.. வைரல் வீடியோ!

கடந்த ஆண்டு இறுதி நிலவரப்படி, சுமாா் 400.9 மில்லியன் டாலா்களை (ரூ.3,348 கோடி) இந்தியாவுக்குக் கடனாக மாலத்தீவு திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது. இதற்கு முன்பு இந்தியாவின் ஆதரவைப் பெற்றிருந்த முன்னாள் அதிபர் இப்ராஹிம் முகமது சோலி ஆட்சியின்போது, இந்தியா 1.4 மில்லியன் அமெரிக்க டாலர்களைக் கடனாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாலத்தீவு எங்கு உள்ளது? பொருளாதாரப் பிரச்னைக்கு என்ன காரணம்?

இந்தியாவின் தென்மேற்கில் அமைந்துள்ளது, மாலத்தீவு. இந்திய நகரமான கொச்சியில் இருந்து மாலத்தீவு, சுமார் ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இது 1,200 தீவுகளைக் கொண்டது. பெரும்பாலான தீவுகள் மக்கள் வசிக்காதவை. மாலத்தீவின் பரப்பளவு 300 சதுர கிலோமீட்டர். அதாவது, டெல்லியைவிட இது 5 மடங்கு சிறியது. மாலத்தீவின் மக்கள்தொகை சுமார் 4 லட்சம். மாலத்தீவு, 1965இல் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம்பெற்று, நவம்பர் 1968இல் குடியரசாக மாறியது. மாலத்தீவின் பொருளாதாரம் பெரும்பாலும் சுற்றுலாத் துறையை நம்பியே உள்ளது. மாலத்தீவுக்கு அதிகம் சுற்றுலா செல்பவர்களில் இந்தியர்களே முதல் இடத்தில் உள்ளனர். 2021இல் மூன்று லட்சம் பேரும், 2022இல் இரண்டரை லட்சம் பேரும், 2 லட்சம் பேரும் சென்றுள்ளனர்.

முகம்மது முய்சு
மாலத்தீவு நோக்கி விரையும் சீனக் கப்பல்.. இந்தியாவுக்கு முற்றும் நெருக்கடி - பின்னணி என்ன?

சுற்றுலா வருவாயைப் பெரிதும் நம்பியிருக்கும் மாலத்தீவுக்கு, கடந்த காலங்களில் இந்தியர்கள் அதிக அளவு சென்றார்கள். இது அந்த நாட்டிற்கு கணிசமான வருவாயை கொடுத்தது. அதுபோக, இந்தியா ஏகப்பட்ட கடனுதவியையும் மாலத்தீவுக்கு வழங்கி வந்தது. தற்போது இந்தியாவுடனான மோதலால் மாலத்தீவு சீனாவுடன் அதீத நெருக்கம் காட்டியது. தொடர்ந்து இந்தியா - மாலத்தீவு உறவு விரிசலால் இந்தியர்களின் சுற்றுலா வருவாய் குறைந்துள்ளது. இதனால் அந்த நாடு பொருளாதாரத்தில் கடுமையாகச் சிக்கியுள்ளது. சீனாவிலிருந்து அதிகளவில் சுற்றுலாப் பயணிகளில் வருவார்கள் என எதிர்பார்த்த நிலையில், தற்போது அதில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இந்தச் சூழலில்தான் அந்த நாட்டு அதிபர் கடன் விவகாரத்தில் இந்தியாவிடம் பல்டி அடித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: ஆயுதங்களுடன் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள்.. அடித்து விரட்டிய தாய், மகள்.. வைரல் வீடியோ!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com