மாலத்தீவு: நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் எம்.பிக்கள் தாக்குதல்.. வைரல் வீடியோ!

மாலத்தீவு நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தாக்கிகொண்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
மாலத்தீவு நாடாளுமன்றம்
மாலத்தீவு நாடாளுமன்றம்ட்விட்டர்

பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை குறிப்பிட்டு மாலத்தீவு அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் விரிசல் அதிகரித்தது. மேலும், மாலத்தீவின் புதிய அதிபர் முகம்மது முய்சு, அரசுமுறை பயணமாக சீன நாட்டிற்குச் சென்றிருந்தது இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இப்படி, இந்தியா - மாலத்தீவு இடையே உரசல்போக்கு தொடரும் நிலையில், சீனாவுடன் இணைப்பைப் பலப்படுத்த மாலத்தீவு அதிபர் பல்வேறு யுக்திகளை முன்னெடுத்தார். அப்போது இருநாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. அதன் அங்கமாக மாலத்தீவில் இருந்து இந்தியா தனது படைகளை வாபஸ் பெறுமாறு, அந்நாட்டு அதிபர் முய்சு காலக்கெடு விதித்துள்ளார்.

முய்சு, மோடி, ஜின்பிங்
முய்சு, மோடி, ஜின்பிங்ட்விட்டர்

அதன்படி இந்திய ராணுவ வீரர்கள் மார்ச் 15க்குள் அந்நாட்டை விட்டு வெளியேறியாக வேண்டும் என அவர் அறிவித்துள்ளார். மாலத்தீவு அதிபர் இந்தியாவுடன் விரோத போக்கை கடைபிடிப்பதற்கு சீனாதான் காரணம் என அந்நாட்டு எதிர்க்கட்சிகளே விமர்சனம் செய்து வருகின்றன. மேலும் அதிபர் முகமது முய்சுவின் நடவடிக்கையால் மக்கள்தான் பாதிக்கப்படுகின்றனர் என குற்றம்சாட்டும் எதிர்க்கட்சிகள் அதிபர் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்த நிலையில், மாலத்தீவு நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தாக்கிக்கொண்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மாலத்தீவு நாடாளுமன்றத்தில் இன்று (ஜன.29) அதிபர் முய்சு தலைமையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்க சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விவாதத்தின்போது, ஆளுங்கட்சி மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள், ஆளும் கட்சியின் ஆதரவு பெற்ற மாலத்தீவு முற்போக்கு கட்சி எம்.பிக்களுக்கும் எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி எம்.பிக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. கைகலப்பு மோதலாக மாறியது. இதனால் நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் மோதிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. அமைச்சர்கள் சேர்க்கப்பட்டதற்கு நடைபெறும் வாக்கெடுப்பை நிறுத்திவைக்க வேண்டும் என்று எதிர்கக்ட்சி கோரியது. இதனால், ஆளும்கட்சிக்கு எம்பிக்களுக்கும் எதிர்க்கட்சி எம்பிக்களுக்கும் கைகலைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com