பிரியங்கா காந்தி, அமித் மாளவியா, அனுராக் தாக்கூர்
பிரியங்கா காந்தி, அமித் மாளவியா, அனுராக் தாக்கூர் pt web

பிரியங்கா காந்தியின் தோள்பை சர்ச்சை: “காங்.தான் புதிய முஸ்லீம் லீக்” - மொத்தமாக எதிர்க்கும் பாஜக!

பாலஸ்தீன ஒற்றுமையின் அடையாளமாக பார்க்கப்படும் தர்பூசணி மீது பாலஸ்தீன் என்று எழுதப்பட்டிருந்த பையை பாராளுமன்றத்திற்கு அணிந்து வந்திருந்தார் பிரியங்கா காந்தி. அது தற்போது சர்ச்சையாக உள்ளது.
Published on

செய்தியாளர் ராஜீவ்

பிரியங்கா காந்தி அணிந்து வந்த பை

கேரளா வயநாட்டில் இருந்து சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி, கடந்தாண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் - பாலஸ்தீன் போர் தொடங்கியதிலிருந்து, காசாவில் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் எழுப்பி வருகிறார். முன்னதாக, இஸ்ரேலின் தாக்குதலை, இனப்படுகொலை நடவடிக்கைகள் என்றும் காட்டுமிராண்டித்தனம் என்றும் குறிப்பிட்டிருந்த பிரியங்கா காந்தி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நடவடிக்கைகளையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், பாலஸ்தீன ஒற்றுமையின் அடையாளமாக பார்க்கப்படும் தர்பூசணி மீது பாலஸ்தீன் என்று எழுதப்பட்டிருந்த பையை பாராளுமன்றத்திற்கு அணிந்து வந்திருந்தார் பிரியங்கா காந்தி.

இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சாமா முகமது தனது எக்ஸ் பதிவில், “பிரியங்கா காந்தி பாலஸ்தீனுக்கான தனது ஆதரவை குறிக்கும் வகையில் பையை கொண்டு வருகிறார். இது கருணை, நீதி மற்றும் மனித நேயத்தின் மீதான அர்பணிப்பாகும். ஜெனிவா உடன்படிக்கையை யாரும் மீற முடியாது என்பதில் பிரியங்கா காந்தி தெளிவாக இருக்கிறார்” என்று பதிவிட்டு இருந்தார்.

பிரியங்கா காந்தி, அமித் மாளவியா, அனுராக் தாக்கூர்
ஒரே நாடு ஒரே தேர்தல்.. சாத்தியக் கூறுகளும் சிக்கல்களும்..!

பாஜக கடும் விமர்சனம்

இருப்பினும் பிரியங்காவின் இந்த செயலுக்கு எதிர்வினை ஆற்றியுள்ள பாஜக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. பாஜக எம்பி சம்பித் பத்ரா இதுதொடர்பாக கூறுகையில், “காந்தி குடும்பம் எப்போதும் சமாதானம் எனும் பையை சுமந்து வருகிறது. தேர்தல்களில் அவர்களது தோல்விக்கு இந்த சமாதானப்பையே காரணம்” எனத் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் அனுராக் தாக்கூர் பேசுகையில், “வங்கதேசம் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் பிரச்சனை குறைத்து ஏன் பிரியங்கா காந்தி வாய் திறக்கவில்லை என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்திய நாடாளுமன்றத்தில் 140 கோடி இந்தியர்களின் கவலைகளை எழுப்புவதற்காக நாடு முழுவதும் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இங்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சிகள் இரண்டு வாரங்களாக அவைகளை செயல்பட விடவில்லை. முதலில் ஜெய் பாலஸ்தீனம் கோஷத்தை எழுப்பியவர் அசாதுதீன் ஒவைசி. இப்பொழுது பாலஸ்தீன பையை நாடாளுமன்றத்திற்குள் பிரியங்கா காந்தி கொண்டு வந்துள்ளார்” இன்று விமர்சித்தார்.

பிரியங்கா காந்தி, அமித் மாளவியா, அனுராக் தாக்கூர்
திண்டுக்கல் ‘தீபாவளி சீட்டு’ மோசடி: ரூ 3 கோடி பணத்தை மீட்டுத் தரக்கோரி இருதரப்பு மக்கள் மனு!

வழக்கமான ஆணாதிக்கம்

ஆந்திர பிரதேச பாஜக தலைவர் விஷ்ணுவர்தன் ரெட்டி, “பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இந்துக்கள் இரக்கமின்றித் துன்புறுத்தப்பட்டாலும், பால்ஸ்தீனுக்காக நின்று சமாதானப்படுத்தும் அரசியலே பிரியங்கா காந்தியின் முன்னுரிமை. இந்துக்களின் துன்பம் குறித்தான அவரது மௌனம், அவரது நோக்கங்களையும், இந்துக்களை மூன்றாம் தர குடிம்மக்களாகவே அவர் நடத்துவதையும் பறைசாற்றுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த பிரியங்கா காந்தி, “முட்டாள் தனமாக பேசுவதை விட்டுவிட்டு வங்கதேச அரசிடம், அங்கு இந்துக்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் தொடர்பாக எதையாவது செய்யச்சொல்லுங்கள்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், இது ‘வழக்கமான ஆணாதிக்கம்’ என்று கூறிய பிரியங்கா காந்தி, தான் என்ன அணிய வேண்டும் என்பதை யாரும் தீர்மானிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

பிரியங்கா காந்தி, அமித் மாளவியா, அனுராக் தாக்கூர்
“யார் பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்கிறார்கள்தானே?” - இளையராஜா விவகாரத்தில் கலையரசி நடராஜன்

காங்கிரஸ் புதிய முஸ்லீம் லீக்

காங்கிரஸ் கட்சியை ‘புதிய முஸ்லீம் லீக்’ என விமர்சித்துள்ள பாஜக தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவர் அமித் மாளவியா, பிரியங்கா காந்தியை, ‘ராகுல் காந்தியை விட பேரழிவு’ என தெரிவித்துள்ளார். மேலும், பிரியங்கா காந்திதான் தீர்வு என நீண்டகாலமாக நம்பிய காங்கிரஸ் கட்சியில் உள்ள அனைவருக்கும், குளிர்கால கூட்டத்தொடர் முடிவில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். பாஜகவின் அனிபர்ன் கங்குலி, நேரு குடும்பம் எப்போதும் இந்து விரோத மனநிலையை வெளிப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

பிரியங்கா காந்தி, அமித் மாளவியா, அனுராக் தாக்கூர்
‘ஆசை’ முதல் ‘வணங்கான்’ வரை... சூர்யா கேரியரில் கைமாறிய, ட்ராப் ஆன டாப் 10 படங்கள் என்னென்ன தெரியுமா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com