இப்ராஹிம் முகம்மது சோலி, முகம்மது முய்சு
இப்ராஹிம் முகம்மது சோலி, முகம்மது முய்சுட்விட்டர்

“பிடிவாதத்தை விட்டுவிடுங்க; இந்தியாவின் உதவி வேணும்”- மாலத்தீவு அதிபருக்கு முன்னாள் அதிபர் அட்வைஸ்!

”முகம்மது முய்சு பிடிவாதமாக இருப்பதை விட்டுவிட்டு, நிதிச் சவால்களை சமாளிக்க அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” எனத் அந்த நாட்டு முன்னாள் அதிபர் தெரிவித்துள்ளார்.
Published on

இந்தியாவுக்குத் திடீர் ஆதரவு தெரிவித்த மாலத்தீவு அதிபர்

இந்தியா - மாலத்தீவு உறவில் சமீபகாலமாக விரிசல் அதிகரித்து வருகிறது. அதற்கு முக்கியக் காரணம், தற்போதைய மாலத்தீவு அதிபரான முகமது முய்சு சீன ஆதரவாளராக அறியப்படுவதுதான். அதற்குச் சமீபத்தில் நடந்த உதாரணமாகக் கூறலாம். இந்த நிலையில், கடந்த வாரம் முகம்மது முயசு அளித்த பேட்டி ஒன்றில், ”மாலத்தீவுக்கு இந்தியா கடன் நிவாரணம் அளிக்க வேண்டும்” எனக் கோரியிருந்தார். இதுகுறித்து அவர், “மாலத்தீவுக்கு உதவிகள் வழங்குவதில் இந்தியா முக்கியப் பங்காற்றியுள்ளது. மாலத்தீவில் ஏராளமான திட்டங்களை இந்தியா அமல்படுத்தியுள்ளது.

மாலத்தீவுக்கு உதவிகள் வழங்குவதில் இந்தியா முக்கியப் பங்காற்றியுள்ளது. மாலத்தீவில் ஏராளமான திட்டங்களை இந்தியா அமல்படுத்தியுள்ளது

முகம்மது முய்சு
முகம்மது முய்சுட்விட்டர்

இந்திய ராணுவ வெளியேற்றம்: பல்டி அடித்த அதிபர்

மாலத்தீவின் தேசிய பாதுகாப்பு கருதியே இந்திய வீரா்கள் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தினேன். இந்தியா மட்டுமின்றி வேறு எந்தவொரு நாட்டின் ராணுவம் மாலத்தீவில் இருந்திருந்தாலும், இதைத்தான் எனது அரசு செய்திருக்கும்

அந்த வகையில், மாலத்தீவின் நெருங்கிய கூட்டாளியாக இந்தியா தொடா்ந்து நீடிக்கும். இவற்றை இந்திய அரசு செய்யும் என்று நம்புகிறேன். மாலத்தீவின் பொருளாதார நிலைக்கு ஏற்ப கடனைத் திருப்பிச் செலுத்துவது குறித்து இந்திய அரசுடன் பேச்சுவாா்த்தை மேற்கொண்டு வருகிறேன்” எனத் தெரிவித்திருந்தார். மேலும் ’இந்திய ராணுவ வீரர்கள் மார்ச் 10க்குள் அந்நாட்டைவிட்டு வெளியேறியாக வேண்டும்’ என்பது தொடர்பாகக் கருத்து தெரிவித்த அவர், “மாலத்தீவின் தேசிய பாதுகாப்பு கருதியே இந்திய வீரா்கள் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தினேன். இந்தியா மட்டுமின்றி வேறு எந்தவொரு நாட்டின் ராணுவம் மாலத்தீவில் இருந்திருந்தாலும், இதைத்தான் எனது அரசு செய்திருக்கும். இதில் வேறு எந்த தனிப்பட்ட காரணமும் இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: குஜராத்: காங்கிரஸைத் தொடர்ந்து அடுத்தடுத்து விலகும் பாஜக வேட்பாளர்கள்.. காரணம் என்ன?

இப்ராஹிம் முகம்மது சோலி, முகம்மது முய்சு
தொடரும் விரிசல்: இந்தியாவுக்கு ஆதரவு.. திடீர் பல்டி அடித்த மாலத்தீவு அதிபர்.. என்ன காரணம்?

மாலத்தீவு அதிபர் திடீர் என ஆதரவு தெரிவிக்க முக்கியக் காரணம்

அதாவது, கடந்த சில மாதங்களாக இருநாட்டு உறவில் அதிகரித்து வரும் நிலையில், மாலத்தீவு அதிபர் முகம்மது முய்சு இந்தியாவுக்கு ஆதராகத் திடீரெனப் பேசியிருந்ததும் பல்டி அடித்திருந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கடந்த ஆண்டு இறுதி நிலவரப்படி, சுமாா் 400.9 மில்லியன் டாலா்களை (ரூ.3,348 கோடி) இந்தியாவுக்குக் கடனாக மாலத்தீவு திருப்பிச் செலுத்த வேண்டியிருப்பதுதான் முக்கியக் காரணமாகப் பார்க்கப்பட்டுகிறது. மேலும் மாலத்தீவின் பொருளாதாரம் சரிவடைந்துள்ளது. குறிப்பாக அந்த நாட்டின் பொருளாதாரம் பெரும்பாலும் சுற்றுலாத் துறையை நம்பியே உள்ளது. அந்த வகையில், கடந்த ஆண்டுகளில் மாலத்தீவுக்கு அதிகம் சுற்றுலா சென்றவர்களில் இந்தியர்களே முதல் இடத்தில் இருந்தனர். 2021இல் மூன்று லட்சம் பேரும், 2022இல் இரண்டரை லட்சம் பேரும், 2023இல் 2 லட்சம் பேரும் சென்றுள்ளனர்.

பொருளாதாரச் சரிவு: சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவு!

ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தைக் குறிப்பிட்டு மாலத்தீவு அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் விரிசல் அதிகரித்தது. இந்த விவகாரம் இருதரப்பிலும் மோதலையும் ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்த கருத்து தெரிவித்த பலரும் இனிமேல் மாலத்தீவுக்குச் செல்ல மாட்டோம் எனத் தெரிவித்திருந்தனர். அன்றுமுதல் இந்தியர்களின் வருகையும் மாலத்தீவில் குறைந்துபோனது. இதையடுத்து, மாலத்தீவு அதிபர் இந்தியாவைப் போன்றே சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் சீனா அனுப்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனாலும், அதற்குப் பலனில்லை எனக் கூறப்படுகிறது. அவர் எதிர்பார்த்த அளவுக்கு அங்குச் சுற்றுலாப் பயணிகள் செல்லவில்லை. இதனால், சமீபகாலமாக பொருளாதாரச் சரிவில் சிக்கியுள்ளது மாலத்தீவு. இதைத் தொடர்ந்துதான் இந்தியாவுக்குத் திடீரென ஆதரவுக்கரம் நீட்டியிருந்தார்.

இதையும் படிக்க: இமாச்சல்: தகுதிநீக்கம் செய்யப்பட்ட 6 காங். எம்எல்ஏக்கள்.. பாஜகவில் ஐக்கியம்.. தேர்தலில் போட்டி?

இப்ராஹிம் முகம்மது சோலி, முகம்மது முய்சு
சீனாவுடன் ஒப்பந்தம்.. இந்தியாவுக்கு எதிராக மீண்டும் களத்தில் குதித்த மாலத்தீவு அதிபர்! நடந்தது என்ன?

மாலத்தீவு அதிபருக்கு முன்னாள் அதிபர்  அறிவுரை!

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இந்தியாவின் ஆதரவாளரான முன்னாள் அதிபர் இப்ராஹிம் முகமது சோலி, தற்போதைய சீன ஆதரவாளரான முய்சுக்கு சில ஆலோசனைகளைக் கூறியுள்ளார். அதில் குறிப்பாக, ”முகம்மது முய்சு பிடிவாதமாக இருப்பதை விட்டுவிட்டு, நிதிச் சவால்களை சமாளிக்க அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூட்டம் ஒன்றில் பேசிய அவர், “கடன் மறுசீரமைப்பு தொடர்பாக இந்தியாவுடன் பேசுவதற்கு முய்சு விரும்புவதாக செய்தியை பார்த்தேன்.

முகம்மது முய்சு பிடிவாதமாக இருப்பதை விட்டுவிட்டு, நிதிச் சவால்களை சமாளிக்க அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்

ஆனால், மாலத்தீவின் நிதி நெருக்கடியானது இந்தியா கொடுத்த கடன்களால் ஏற்படவில்லை. மாலத்தீவு இந்தியாவிற்குச் செலுத்த வேண்டிய 8 பில்லியன் மாலத்தீவு ருபியாவுடன் (MVR) ஒப்பிடும்போது சீனாவிற்கு செலுத்த வேண்டியது அதிகம். சீனாவுக்கு 18 பில்லியன் MVR கடன் செலுத்த வேண்டும். கடனை திருப்பிச் செலுத்தும் காலம் 25 ஆண்டுகள். எனினும், அண்டை நாடுகள் நமக்கு உதவும் என்று நான் நம்புகிறேன். நாம் பிடிவாதமாக இருப்பதை விட்டுவிட்டு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். இதன்மூலம் பல நாடுகள் நமக்கு உதவி செய்யும். ஆனால் இந்த விஷயத்தில் முய்சு சமரசம் செய்ய விரும்பவில்லை. இப்போதுதான் அவர்கள் நிலைமையை புரிந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: மஹுவா மொய்த்ரா வீட்டில் சிபிஐ சோதனை.. லோக்பால் ஆணைய உத்தரவால் நடவடிக்கை!

இப்ராஹிம் முகம்மது சோலி, முகம்மது முய்சு
மாலத்தீவு: நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் எம்.பிக்கள் தாக்குதல்.. வைரல் வீடியோ!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com