குஜராத்: காங்கிரஸைத் தொடர்ந்து அடுத்தடுத்து விலகும் பாஜக வேட்பாளர்கள்.. காரணம் என்ன?

2024 நாடாளுமன்றத் தேர்தலில் குஜராத் மாநிலத்தில் 2 பாஜக வேட்பாளர்கள் அடுத்தடுத்து விலகியிருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
விலகிய பாஜக வேட்பாளர்கள் பிகாஜி தாக்கூர் - ரஞ்சன் பட்
விலகிய பாஜக வேட்பாளர்கள் பிகாஜி தாக்கூர் - ரஞ்சன் பட்புதிய தலைமுறை

குஜராத்தில் விலகிய பாஜக சிட்டிங் எம்.பி.

நாடு முழுவதும் ஜனநாயக திருவிழா சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அனைத்துக்கும் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக அனைத்துக் கட்சிகளும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், குஜராத்தைச் சேர்ந்த பாஜக வேட்பாளர்கள் சிலர் திடீரென அதிலிருந்து விலகியிருப்பது அம்மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ரஞ்சன் பட்
ரஞ்சன் பட்

2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதில் குஜராத் மாநிலத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் மே 7ஆம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில், குஜராத்தைச் சேர்ந்த 2 பாஜக வேட்பாளர்கள் மக்களவை தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

குஜராத்தின் வதோதரா தொகுதி வேட்பாளராக சிட்டிங் எம்பியான ரஞ்சன் பட்-க்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இவர், இந்த தொகுதியில் 3வது முறையாக நிறுத்தப்பட்டிருந்தார்.

இதையும் படிக்க: தொடரும் விரிசல்: இந்தியாவுக்கு ஆதரவு.. திடீர் பல்டி அடித்த மாலத்தீவு அதிபர்.. என்ன காரணம்?

விலகிய பாஜக வேட்பாளர்கள் பிகாஜி தாக்கூர் - ரஞ்சன் பட்
குஜராத்: ராஜினாமா கடிதம் அனுப்பிய பாஜக எம்.எல்.ஏ.. பேட்டியில் சொன்ன வித்தியாசமான காரணம்!

விலகலுக்கு முக்கியக் காரணம் என்ன?

பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் ரஞ்சன் பட் முதல்முறையாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் இம்முறை அவரை மக்களவை வேட்பாளராக நிறுத்தியதற்கு பாஜகவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் வதோதரா தொகுதியில் ரஞ்சன் பட்-டை பாஜக வேட்பாளராக அறிவித்ததை கண்டிக்கும் வகையில் நகரின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன. இது, பாஜகவுக்கு பெரும் தலைவலியை உண்டாக்கி இருந்தது. இந்த நிலையில் ரஞ்சன் பட் இன்று (மார்ச் 23) தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சில தனிப்பட்ட காரணங்களுக்காக மக்களவை தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

அதேபோல், சர்பகந்தா மக்களவைத் தொகுதிக்கான பாஜக வேட்பாளராக பிகாஜி தாக்கூர் அறிவிக்கப்பட்டிருந்தார். அவரும் இன்று விலகுவதாக அறிவித்துள்ளார். பிகாஜி தாக்கூர், தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தனிப்பட்ட காரணங்களுக்காக மக்களவை தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இருவரும் அடுத்தடுத்து விலகியிருப்பது குஜராத் மாநிலத்தில் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க: கல்லூரியில் பாஜக மீட்டிங்.. கலந்துகொள்ள மாணவர்கள் எதிர்ப்பு.. ஐடி கார்டுகளைப் பறித்து கண்டிப்பு!

விலகிய பாஜக வேட்பாளர்கள் பிகாஜி தாக்கூர் - ரஞ்சன் பட்
குஜராத் ஜாம்நகர் ஏர்போர்ட்க்கு சர்வதேச அந்தஸ்து.. முகேஷ் அம்பானி இல்ல திருமணத்தால் எழுந்த எதிர்ப்பு!

காங்கிரஸ் கட்சியிலிருந்தும் விலகிய வேட்பாளர்

2014 மற்றும் 2019 ஆகிய மக்களவைத் தேர்தல்களில் குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது. அதே போல் 2024 மக்களவை தேர்தலிலும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் முனைப்பில் பா.ஜ.க. உள்ளது. இதற்காக நடைபெறவுள்ள தேர்தலுக்கு இதுவரை 22 வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்துள்ளது. இதில் தற்போது 2 பேர் விலகியுள்ளனர்.

காங்கிரஸ் - பாஜக
காங்கிரஸ் - பாஜக முகநூல்

அதேநேரத்தில், காங்கிரஸ் 7 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதில் ஒருவர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளார். அகமதாபாத் கிழக்கு தொகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ரோகன் குப்தா, தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த அவர், கட்சியின் அனைத்துப் பதவிகளிலிரும் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் லோக்சபா தேர்தலில் குஜராத்தில் இருந்து 2 வேட்பாளர்களை நிறுத்த ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது.

இதையும் படிக்க: 2009-ல் தொடங்கிய பயணம்..தவிர்க்க முடியாத இடத்தில் 'நாம் தமிழர் கட்சி’ - சிக்கலாகுமா சின்னம் பிரச்னை?

விலகிய பாஜக வேட்பாளர்கள் பிகாஜி தாக்கூர் - ரஞ்சன் பட்
மனைவி பாஜக வேட்பாளர், சகோதரி காங். பிரச்சார பீரங்கி.. குஜராத் தேர்தலும் ஜடேஜா குடும்பமும்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com