எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், அமித் ஷா
எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், அமித் ஷாpt web

யார் முதலமைச்சர்? கூட்டணி ஆட்சியா?.. மீண்டும் மீண்டும் அதிமுகவை சீண்டிப் பார்க்கும் பாஜக!

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியே அமையும் என அமித் ஷா, மீண்டும் திட்டவட்டமாக கூறியிருப்பது அதிமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் வேட்பாளர் குறித்தும் அமித் ஷா வைத்த ட்விஸ்ட் அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.
Published on

தமிழ்நாட்டில் இதுவரை கூட்டணி தொடர்பாக முடிவுகளை எடுத்தது அல்லது எடுத்த முடிவுகளை பொதுவெளியில் அறிவித்ததெல்லாம் திமுக, அதிமுக என இருபெரும் கட்சிகளாகத்தான் இருந்தன. ஆனால், தற்போது அதிமுக கூட்டணியில் நடக்கும் சில நிகழ்வுகள் அதிமுகவிற்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகின்றன. என்ன நடக்கிறது.. விரிவாகப் பார்க்கலாம்...

அதிமுக கூட்டணி

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிfb

தமிழகத்தில் ‘அதிமுக கூட்டணி’ ஆட்சி அமைத்தால் அது அதிமுக ஆட்சியாகத்தான் இருக்குமென அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர்ச்சியாகக் கூறிவருகின்றனர். இதன் நேரடிப் பொருள் அமைச்சரவையில் அதிமுகவைச் சேர்ந்தவர்களே இருப்பார்கள் என்பது. ஆனால், தற்போதோ தமிழகத்தில் ‘அதிமுக கூட்டணி’ ஆட்சி அமைத்தால் அது கூட்டணி ஆட்சியாகத்தான் இருக்குமென பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். இதன் நேரடிப் பொருள் அமைச்சரவையில் பாஜகவினரும் பங்கு பெறுவார்கள் என்பது.... மத்திய அமைச்சர் அமித் ஷா, ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டில் பேசும்போது, தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என பேசுவதும், அதிமுக அதனை மறுப்பதும் தொடர்கதையாகி வருகிறது. ‘தமிழ்நாட்டில் யார் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி நடைபெறுகிறது?’ என திமுக உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன.

எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், அமித் ஷா
தண்ணீர் பாட்டிலே 20,000 ரூபாயா? வியக்க வைக்கும் விண்வெளி விவகாரம்.. அடுக்கும் விஞ்ஞானி!

கூட்டணி ஆட்சி பாஜகவின் பங்கு - அமித் ஷா 

இந்நிலையில், தமிழ் நாளிதழ் ஒன்றிற்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அளித்துள்ள சிறப்பு பேட்டியில், கூட்டணி ஆட்சி என்பதை மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளார். அதிமுக தொடர்பான கேள்விகளுக்கு, “அது அக்கட்சியின் தனிப்பட்ட விஷயங்கள்.. அதுதொடர்பாக அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கும் அமித்ஷா, ஆட்சி அமைப்பது தொடர்பான கேள்விகளுக்கு எல்லாம், “தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி” என்று உறுதியாகத் தெரிவிக்கிறார். தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி, அதாவது தேசிய ஜனநாயகக் கூட்டணி மிக வலுவாக இருப்பதாக தெரிவித்துள்ள அமித் ஷா, தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும் எனவும், அதில் பாஜகவின் பங்கு இருக்கும் என்றும் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

2026-ல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்போது அதிமுகவை சேர்ந்தரே முதல்வர் - அமித் ஷா
2026-ல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்போது அதிமுகவை சேர்ந்தரே முதல்வர் - அமித் ஷா

சரி, கூட்டணி ஆட்சி என்றால் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற கேள்வி எழுப்பினால், அதற்கு ட்விஸ்ட் வைத்திருக்கிறார். தேர்தலில் அதிமுக தலைமையின் கீழ்தான் பாஜக போட்டியிடுவதாகவும், அதிமுகவில் இருந்து முதல்வர் வருவார் எனவும் அமித் ஷா பதில் அளித்துள்ளார். அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்று அதிமுக தலைவர்களிடம் கேள்வி கேட்டால், நிச்சயமாக எடப்பாடி பழனிசாமி என்றே பதிலளிப்பார்கள்., ஆனால், முதல்வர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமியின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் அமித் ஷா தெரிவித்த பதில், எடப்பாடி பழனிசாமியுடன் பனிப்போர் செய்து, தனியே டெல்லி சென்றுவந்த செங்கோட்டையன், கோவையில் நடந்த ஆர்எஸ்எஸ் மாநாட்டில் பங்கேற்ற எஸ்.பி.வேலுமணி போன்றோரை நினைவில் நிறுத்துகிறது.

எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், அமித் ஷா
”நாடாளுமன்றத்தை விட அரசியல் சாசனம்தான் மிக உயர்ந்தது” - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்!

மக்களே விரும்ப மாட்டார்கள் - வைகைச்செல்வன்

"கூட்டணி ஆட்சியை மக்கள் விரும்ப மாட்டார்கள்” - வைகைச்செல்வன்
"கூட்டணி ஆட்சியை மக்கள் விரும்ப மாட்டார்கள்” - வைகைச்செல்வன்

இந்த விவகாரம் தொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், தமிழ் நாட்டில் கூட்டணி ஆட்சியை மக்கள் விரும்பமாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “கட்சிகளிடையே கொள்கைகளும் சித்தாந்தங்களும் வெவ்வேறாக இருக்கலாம்., ஆனால், தேர்தல் என்று வரும்போது பொது எதிரியாக ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை அகற்ற வேண்டும்; திமுகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும். இதை ஒருமித்த கருத்தாக ஏற்படுத்தி அந்தக் கருத்துக்கு யாரெல்லாம் இசைவு தெரிவிக்கிறார்களோ, யாரெல்லாம் துணையாக இருக்கிறார்களோ அவர்களை அழைத்து கூட்டணி அமைக்க வேண்டும். தமிழ்நாட்டில் கூட்டணி அமைப்பதோடு சரி.. கூட்டணி அரசு என்பது இதுவரை அமைந்ததாக சரித்திரம் இல்லை. அப்படி ஒரு அரசு அமைவதை மக்களும் விரும்பவில்லை...” எனத் தெரிவிக்கிறார். சுருக்கமாக சொன்னால், கூட்டணி ஆட்சிக்கு அதிமுக தயாராக இல்லை.. இதுவே அதிமுகவின் கருத்தாகவும் அதிமுக பெரும்தலைகளின் கருத்தாகவும் இருக்கும்.

குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் -தமிழிசை

குழப்பம் ஏற்படுத்த வேண்டாம்: தமிழிசை
குழப்பம் ஏற்படுத்த வேண்டாம்: தமிழிசை

இந்த விவகாரம் தொடர்பாக புதிய தலைமுறையிடம் பிரத்யேகமாக பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், வார்த்தைகளை வைத்து குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் எனத் தெரிவித்திருக்கிறார். அவர் கூறுகையில், “தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.. தேசிய ஜனநாயகக் கூட்டணியாகத்தான் தேர்தலில் போட்டி போடப்போகிறோம்; தேசிய ஜனநாயகக் கூட்டணியாகத்தான் ஆட்சி அமைக்கப்போகிறோம் என்பதில் அமித்ஷா தெளிவாக இருக்கிறார். கூட்டணியாக போட்டியிடும்போது எந்த ஒரு கட்சிக்கும் கூட்டணியில் அங்கம் வகிக்க வேண்டுமென்ற ஆர்வம் இருக்கும். ஆனால், ஆட்சி அமைப்பது என்பதையும் யார் முதலமைச்சராக இருக்கப்போகிறார் என்பதையும் அமித்ஷா தனது முதல் பேட்டியிலேயே தெளிவு படுத்தியிருக்கிறார். எனவே, வார்த்தைகளை வைத்து எல்லோரும் குழப்பம் ஏற்படுத்த வேண்டுமென நினைக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், அமித் ஷா
விஜயின் மக்கள் சந்திப்பு எப்போது? தவெக தரப்பில் வெளியாக முக்கிய அப்டேட்

திமுக கூட்டணியிலும் சலசலப்புகள் இல்லாமல் இல்லை.. ஆனால், தொகுதி பங்கீடு, கூடுதல் தொகுதிகளைக் கேட்கும் கூட்டணிக் கட்சிகள் என வழக்கமான கூட்டணி முரண்பாடுகளே அங்கு இருக்கின்றன. ஆனால், அதிமுக கூட்டணிக்குள் நடக்கும் நிகழ்வுகள் வழக்கத்திற்கு மாறானவை எனத் தெரிவிக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்...

அதிமுக தயாராக இல்லை -தராசு ஷ்யாம்

தராசு ஷ்யாம்
தராசு ஷ்யாம்Puthiyathalaimurai

இந்த விவகாரம் தொடர்பாக புதிய தலைமுறையிடம் பிரத்யேகமாக பேசிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், “2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடி பெரிய மெஜாரிட்டியில் வெற்றி பெற்றார். ஆனாலும், கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு மந்திரி பதவி தரப்பட்டது. இப்போது நடப்பதே கூட்டணி ஆட்சி.. பல்வேறு மாநிலங்களில் பாஜக கூட்டணி அரசில் பங்கு பெறுகிறது. பாஜகவிற்கு பெரும்பான்மை இருந்தாலும் கூட்டணிக் கட்சிகளுக்கு அக்கட்சி ஆட்சியில் பங்கு தருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இப்போது எழும் கேள்வி கூட்டணி ஆட்சியா அல்லது ஆட்சியில் பங்கா என்பதுதான். ஆட்சியில் பங்கு எனும் கருத்துக்கு அதிமுக தயாராக இல்லை. திமுகவும் தயாராக இல்லை.

எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், அமித் ஷா
அண்ணா விமர்சன விவகாரம்: “ஒருநாள், ஒரு நொடி கூட" திமுகவின் விமர்சனத்திற்கு இபிஎஸ் காட்டமான எதிர்வினை

கூட்டணி அமைப்பதற்காக போடப்படும் ஒப்பந்தத்தில் கண்டிப்பாக கூட்டணி ஆட்சிதான் என எப்போதும் போடப்படுவதில்லை. அப்படியான ஒரு நிலை ஏற்பட்டால்தான், கூட்டணி ஆட்சிக்கு மக்கள் வாக்களிக்க தயாராகி விட்டார்கள் என்று பொருள் கொள்ள முடியும். அதாவது, தனி ஆட்சியா அல்லது கூட்டணி ஆட்சியா? இது தேர்தலுக்கு முன்பே மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். தற்போது அமித்ஷா கூறுவதைப் பார்த்தால்.. கூட்டணி ஆட்சிதான் என்கிறார். குறிப்பாக பாஜக அந்த ஆட்சியில் பங்குபெறும் என்கிறார். இதற்கு சரியான விளக்கத்தை அதிமுக இன்னும் தரவில்லை என்பதுதான் உண்மை,. முருக பக்தர்கள் மாநாட்டில் நடந்த நிகழ்வுகளில் கூட அதிமுக சரியான வலுவான எதிர்வினையை ஆற்றவில்லை” எனத் தெரிவிக்கிறார்.

முதலமைச்சர் எடப்பாடிதான் - நயினார்

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்எக்ஸ் தளம்

விவாதங்கள் மேலெழும்ப மேலெழும்ப பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தற்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். புதிய தலைமுறையிடம் பிரத்யேகமாக பேசிய அவர், தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்தால் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியே பொறுப்பேற்பார் எனத் தெரிவித்திருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், அமித் ஷா
11 கோடி சமஸ்கிருதத்துக்கா? அண்ணாமலையின் கேள்விக்கு திமுகவின் பதிலென்ன?

தமிழக அரசியலில் அதிமுக-பாஜக கூட்டணியைச் சுற்றி ஏற்படும் விவாதங்கள், மாநில அரசியலில் ஒரு புதிய பரிமாணத்தைக் கொண்டு வருவதாக ஒரு கருத்து இருக்கிறது. ‘ஆட்சியில் பங்கு’ என்ற வார்த்தையில்தான் இருதரப்பினரும் வேறுபட்டு நிற்கின்றனர். இது எதிர்காலத்தில் தொகுதி உடன்பாடுகளிலும் தாக்கத்தினை ஏற்படுத்துமா என்ற கேள்விகள் எழுகின்றன. கூட்டணி ஆட்சி, ஆட்சியில் பங்கு எனும் இரண்டு வார்த்தைகள் புதிய கேள்விகளை எழுப்பும் நிலையில் அதற்கான பதில்களையும் வேண்டி நிற்கின்றன.

எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், அமித் ஷா
#634... விண்வெளிக்குள் இந்தியக் காலடி: சுபான்ஷூ சுக்லாவின் மைல்கல் பயணம்!!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com