DMK
DMK web

வீழ்ந்த திமுக| முதல்வர் உட்பட பல அமைச்சர்கள் தோல்வி.. யார் யார் எங்கு தோல்வி..? என்ன தவறானது..?

2026 தமிழ்நாடு தேர்தலில் அதிர்ச்சிகுரிய வகையில் திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் உட்பட பல திமுக அமைச்சர்கள் படுதோல்வியடைந்துள்ளனர்.
Published on
Summary

2026 தமிழக சட்டசபை தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று, 35% வாக்குகளுடன் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இதன் தாக்கத்தில் திமுக 24% வாக்குகளுடன் கடுமையான பின்னடைவை சந்தித்து, முதல்வர் ஸ்டாலின் உட்பட 32 அமைச்சர்களில் பெரும்பாலோர் தோல்வியடைந்தது கட்சிக்குள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் 2026, பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிந்திருக்கிறது. காலையில் இருந்தே பரபரப்பாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தமிழக வரலாற்றில் யாரும் எதிர்பாராத வெற்றியை பெற்றிருக்கிறது விஜயின் தமிழக வெற்றிக் கழகம். 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளை வென்று சரித்திர வெற்றியை பதிவு செய்திருக்கும் தவெக..

கடந்த 50 ஆண்டுகளில் எந்த ஒரு புதிய கட்சியும் செய்யாத மாபெரும் சாதனையைத தமிழக வெற்றி கழகம் நிகழ்த்திக் காட்டியுள்ளது. 233 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட தவெக கிட்டதட்ட 35 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளது. திமுக 24 சதவிகிதமும் அதிமுக 22 சதவிகிதமும் நாதக 4 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளன.

2021 Tamil Nadu Election: DMK Returned to Power After 10 Years
MK Stalin web

இந்த நிலையில், போட்டியிட்ட 32 திமுக அமைச்சர்களில் முதலைமைச்சர் உட்பட பெரும்பாலான அமைச்சர்கள் தோல்வியை சந்தித்துள்ளார்கள். திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியை தழுவியது பெரும் அதிர்ச்சியாக திமுகவினரிடையே பார்க்கப்படுகிறது.

DMK
TNElection2026 | சென்னையில் ஆதிக்கம் செலுத்தும் தவெக.. முக ஸ்டாலின் பின்னடைவு!

அதுமட்டுமில்லாமல், மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்ட PTR பழனிவேல் தியாகராஜன் தவெக வேட்பாளர் முஸ்தபாவிடம் தோல்வியடைந்துள்ளார். மதுரை மத்திய தொகுதியில் பெரும் செல்வாக்கான மற்றும் PTR-ன் சொந்த ஊரான அத்தொகுதியில் PTR பழனிவேல் தியாகராஜன் 44,286 வாக்குகளை பெற்றார். தவெக வேட்பாளர் முஸ்தபாவுடன் ஒப்பிடுகையில் 19,128 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியடைந்துள்ளார். அதே தொகுதியில் அதிமுக சின்னத்தில் போட்டியிட்ட சுந்தர்.c சுமார் 33,538 வாக்குகளை பெற்று மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

M Subramaniyan
M Subramaniyanweb

திமுகவின் ஆரம்ப காலத்திலிருந்தே அக்கட்சியில் இருக்கும் மூத்த நிர்வாகியான துரைமுருகன் காட்பாடி தொகுதியில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். கடந்த 1984-ஆம் ஆண்டிலிருந்து காட்பாடி தொகுதியில் போட்டியிடும் துரைமுருகன், மூன்றாவது முறையாக தோல்வியடைந்துள்ளார். சுமார் 62,000 வாக்குகளை அவர் பெற்றிருந்தாலும் தவெக வேட்பாளர் சுதாகர் அந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் ராமு இரண்டாம் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

DMK
ஆட்சியில் சேர விஜய் அழைத்தால் காங்கிரஸ் ஆதரவளிக்குமா..? கிரிஷ் சோடங்கர் அதிரடி பதில்!

தூத்துக்குடியில் போட்டியிட்ட திமுகவின் பெண் அமைச்சர் கீதாஜீவன் உள்ளூரில் செல்வாக்கு மிக்க ஆளாக பார்க்கப்பட்டாலும் தவெக வேட்பாளரும் நடிகருமான ஸ்ரீநாத்திடம் தோல்வியடைந்துள்ளார். 1,00,536 வாக்குகளை பெற்று 37,731 வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் வெற்றிப்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Geetha jeevan
Geetha jeevan web

திமுக கோட்டையாக அறியப்பட்ட தலைநகர் சென்னையை தவெக தன்வசப்டுத்தியுள்ளது அரசியல் களத்தில் உற்றுநோக்கப்பட்டு வருகிறது. சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் 52,691 வாக்குகளை பெற்றாலும் தவெக வேட்பாளர் அருள் பிரகாசம் என்பவருடன் ஒப்பிடுகையில் 28,514 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார். தவெக வேட்பாளர் அருள் பிரகாசம் 81,205 வாக்குகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் போட்டியிட்ட திருவெறும்பூர் தொகுதியில் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 8,705 வாக்கு வித்தியாசத்தில் அவர் தவெக வேட்பாளரிடம் தோல்வியடைந்துள்ளார்.

DMK
TN Election 2026 | ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை.. அதிமுக or காங்கிரஸ் or யாரை அழைக்கும் தவெக.?

ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட சபாநாயகர் அப்பாவு இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் என்பதும் தவெக வேட்பாளர் சதிஷ் கிறிஸ்டோபரிடம் 12,313 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளார். தவெக வேட்பாளர் சதிஷ் கிறிஸ்டோபர் 69,947 வாக்குகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Moorthy
Moorthy web

அமைச்சர் மூர்த்தி மதுரை கிழக்கு தொகுதியில் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 16,547 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் மதிவேந்தன் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இரண்டாம் இடத்தில் பாஜக வேட்பாளரும் முதல் இடத்தில் தவெக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வனும் உள்ளனர். தவெக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் என்பதும் 14,511 வாக்குகளை பெற்று வெற்றிபெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் ராஜேந்திரன் போட்டியிட்ட சேலம் வடக்கு தொகுதியில் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். முதல் இடத்தில் இருக்கும் தவெக வேட்பாளருடன் 14,034 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றுள்ளார்.

DMK
”முதல்வர் ஸ்டாலின் தோல்வி மனதை பிசைகிறது..” - மாரி செல்வராஜ்

ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட்ட சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் சுமார் 30000 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளரிடம் தோல்வியை தழுவி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

அமைச்சர் சாமிநாதன் போட்டியிட்ட காங்கேயம் தொகுதியில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதிமுக வேட்பாளர் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Swaminathan
Swaminathan web

ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் முத்துசாமி 22,250 வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதே போல், ஆவடி தொகுதியிலும் அமைச்சர் நாசர் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். தவெக வேட்பாளர் ரமேஷ் குமார் 76,311 வாக்குகள் வித்தியாசத்தில் முதலிடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் TRB ராஜா இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். முதலிடத்தில் அமமுக வேட்பாளர் உள்ளார். 1,566 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

DMK
MGR கூட செய்யாத சாதனை.. இந்தியாவையே அதிரவைத்த விஜய்! தட்டி தூக்கிய TVK!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com