MGR, Vijay
MGR, Vijayweb

MGR கூட செய்யாத சாதனை.. இந்தியாவையே அதிரவைத்த விஜய்! தட்டி தூக்கிய TVK!

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் MGR கூட செய்யாத சாதனையை தவெக தலைவர் விஜய் செய்துள்ளது இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.
Published on
Summary

முதல்தேர்தலிலேயே தவெக தமிழக அரசியலை தலைகீழாக மாற்றியுள்ளது. முதல்வர் ஸ்டாலினை அவரது சொந்த தொகுதியில் வீழ்த்தி, திமுகவின் கோட்டையாக கருதப்பட்ட சென்னையில் 14 இடங்களை கைப்பற்றி, கொங்கு பகுதியில் அதிமுகவை விட அதிக தொகுதிகளில் வென்றுள்ளது. இரு இடங்களிலும் வென்ற விஜய் எந்த தொகுதியை ராஜினாமா செய்கிறார் என்ற கேள்வியும் அரசியல் ஆர்வத்தை தூண்டியுள்ளது. திமுக–அதிமுக இருதுருவ அரசியல் வரலாற்றை உடைத்த இந்த வெற்றி இந்திய அளவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்தவண்ணம் உள்ள நிலையில், விஜயின் தவெக 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. கட்சி தொடங்கி இரண்டு வருடங்களே ஆகியுள்ள நிலையில், விஜயின் தவெகவின் இந்த வெற்றி இந்திய வரலாற்றில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

MGR, Vijay
தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சி.. முன்னாள் திமுக MLA-க்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தோல்வி!

MGR கூட செய்யாத சாதனை..

கடந்த 50 ஆண்டுகளாக தமிழக அரசியல் அதிமுக, திமுக என இரு துருவங்களுக்கு இடையே சுழன்று வந்த நிலையில், தற்போது அந்த வரலாற்றை உடைத்து தவெக தனிப்பெரும் கட்சியாக உருவாகியுள்ளது. இதற்கு முன்னர் 1977-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் MGR தலைமையிலான அதிமுக கூட்டணி அமைத்து 33.52% வாக்குகளை பெற்று ஆட்சியமைத்தார். ஆனால் தற்போது தவெக சுமார் 35% வாக்குகளை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

எம்ஜிஆர்
எம்ஜிஆர்pt web

முதல்வர் ஸ்டாலினை அவரது தொகுதியிலேயே வென்றது, திமுகவின் கோட்டையாக கருதப்பட்ட சென்னையில் 14 தொகுதிகளை கைப்பற்றியது, கொங்கு பகுதியில் அதிமுகவை விட அதிக தொகுதிகளில் வென்றது என தவெக தனது முதல் தேர்தலிலேயே பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.

விஜய்
விஜய்Pt web

தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ள நிலையில், அவர் அதில் எந்த தொகுதியை ராஜினாமா செய்யப்போகிறார் என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

MGR, Vijay
ஆட்சியில் சேர விஜய் அழைத்தால் காங்கிரஸ் ஆதரவளிக்குமா..? கிரிஷ் சோடங்கர் அதிரடி பதில்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com