TNElection2026 | சென்னையில் ஆதிக்கம் செலுத்தும் தவெக.. முக ஸ்டாலின் பின்னடைவு!
2021ல் 16 தொகுதிகளையும் கைப்பற்றிய திமுக கோட்டையான சென்னை, 2026 தேர்தல் முடிவுகளில் தலைகீழாக மாறியுள்ளது. பெரம்பூரில் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட விஜயை முன்னிலைப்படுத்தி தவெக 16இல் 14 இடங்களில் முன்னிலை பெற்று அதிமுக, திமுக இரண்டுக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. கொளத்தூரில் ஸ்டாலின் பின்னடைவு, பல இடங்களில் தவெக வேட்பாளர்கள் வாக்கு வித்தியாசத்துடன் முன்னிலையில் உள்ளனர்.
தனித்துவமான வாக்காளர் பலத்தையும், அரசியல் கணக்குகளையும் கொண்டுள்ளதால், சென்னையின் அரசியல் களம் எப்போதும் ஒரு சுவாரசியமான போர்க்களமாகவே இதுவரை காட்சியளித்து வந்துள்ளது.
சென்னையில் மொத்தமாக இருக்கும் 16 தொகுதிகளான ‘ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க. நகர், எழும்பூர், இராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தி. நகர், மயிலாப்பூர், வேளச்சேரி’ தொகுதிகளில் அதிமுகவும், திமுகவும் தங்களுடைய ஆதிக்கத்தை மாறிமாறி செலுத்தியுள்ளனர்.
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளிலும் திமுக (திராவிட முன்னேற்றக் கழகம்) 16/16 தொகுதிகளையும் முழுமையாக வென்று சாதனை படைத்தது. அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட மயிலாப்பூர், ராயபுரம் உள்ளிட்ட தொகுதிகளையும் திமுக கைப்பற்றியது. முக்கிய வெற்றியாக கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலின் இருவரும் அதிரடியாக வெற்றி பெற்றனர்.
இந்தசூழலில் தான் 2026 தேர்தலுக்கு முன்னதாக சென்னை திமுக, அதிமுகவின் கோட்டை என்றும், பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் விஜயால் கூட வெற்றிபெற முடியாது என்றும் சொல்லப்பட்டது. ஆனால் தற்போதைய தேர்தல் முடிவுகள் நிலவரப்படி 16 தொகுதிகளில் 14 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் திமுக, அதிமுக என்ற இருபெரும் கட்சிகளுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
சென்னை 16 தொகுதிகளின் நிலவரம்:
தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் அப்டேட்டின் படி,
1.கொளத்தூர்
திமுகவின் முதல்வர் வேட்பாளர் முக ஸ்டாலின் போட்டியிட்ட இத்தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார். தவெகவின் வி.எஸ் பாபு 41616 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ள நிலையில், 33641 வாக்குகளுடன் ஸ்டாலின் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார்.
2.சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி
திமுகவின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்ட இத்தொகுதியில் தவெக வேட்பாளர் செல்வத்திற்கும், உதயநிதிக்கும் பலமான போட்டி சென்று கொண்டிருக்கிறது. முதலிலிருந்தே தவெகவின் செல்வம் முன்னிலை பெற்ற நிலையில், தற்போது உதயநிதி 22866 வாக்குகளுடன் முதலிடத்திலும், செல்வம் 19810 வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும் நீடிக்கின்றன. இருவருக்கும் இடையே 3050 வாக்குகள் மட்டுமே வித்தியாசமாக இருந்துவருகிறது.
3.பெரம்பூர்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்வர் வேட்பாளரான விஜய் போட்டியிட்ட இத்தொகுதியில் ஆரம்பத்திலிருந்தே விஜய் முன்னிலை வகித்து வருகிறார். தற்போதைய நிலவரப்படி விஜய் 34482 வாக்குகளுடன் முதலிடத்திலும், திமுகவின் ஆர்.டி. சேகர் 20908 வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும் நீடிக்கின்றனர்.
4. ராதாகிருஷ்ணன் நகர்
என். மேரி வில்சன் (தவெக) - 20225 வாக்குகளுடன் முன்னிலை
ஜே. ஜான் எபெனெசர் (திமுக) - 13636 வாக்குகள் பெற்று 2வது இடம்
5.வில்லிவாக்கம்
ஆதவ் அர்ஜுனா (தவெக) - 28049 வாக்குகளுடன் முன்னிலை
கார்த்திக் மோகன் (திமுக) - 19405 வாக்குகள் பெற்று 2வது இடம்
6.திரு.வி.க. நகர்
எம். ஆர். பல்லவி (தவெக) - 25491 வாக்குகளுடன் முன்னிலை
கே.எஸ்.ரவிச்சந்திரன் ( திமுக) - 15919 வாக்குகள் பெற்று 2வது இடம்
7.எழும்பூர்
ராஜ்மோகன் (தவெக) - 30587 வாக்குகளுடன் முன்னிலை
தமிழன் பிரசன்னா - 21000 வாக்குகள் பெற்று 2வது இடம்
8.இராயபுரம்
கே.வி. விஜய் தாமு (தவெக) - 26036 வாக்குகளுடன் முன்னிலை
சுபைர் கான் (திமுக) - 18424 வாக்குகள் பெற்று 2வது இடம்
9. துறைமுகம்
சேகர்பாபு (திமுக) - 18783 வாக்குகளுடன் முன்னிலை
சினோரா பி எஸ் அசோக் (தவெக) - 15028 வாக்குகள் பெற்று 2வது இடம்
வித்தியாசம் -3755 வாக்குகள் மட்டுமே
10. ஆயிரம் விளக்கு
ஜே.சி.டி. பிரபாகர் (தவெக) - 13337 வாக்குகளுடன் முன்னிலை
எழிலன் நாகநாதன் (திமுக) - 9980 வாக்குகள் பெற்று 2வது இடம்
வித்தியாசம் -3357 வாக்குகள் மட்டுமே
11.அண்ணா நகர்
வி.கே.ராம்குமார் (தவெக) - 41932 வாக்குகளுடன் முன்னிலை
என். சித்ரராசு (திமுக) - 29153 வாக்குகள் பெற்று 2வது இடம்
12. விருகம்பாக்கம்
சபரிநாதன் (தவெக) - 19186 வாக்குகளுடன் முன்னிலை
பிரபாகர ராஜா (திமுக) - 12861 வாக்குகள் பெற்று 2வது இடம்
13. சைதாப்பேட்டை
அருள்பிரகாசம் (தவெக) - 29627 வாக்குகளுடன் முன்னிலை
மா.சுப்ரமணியன் (திமுக) - 17379 வாக்குகள் பெற்று 2வது இடம்
14. தி. நகர்
என். ஆனந்த் ( தவெக) - 29163 வாக்குகளுடன் முன்னிலை
ராஜா அன்பழகன் (திமுக) - 20610 வாக்குகள் பெற்று 2வது இடம்
15. மயிலாப்பூர்
வெங்கடரமணன் (தவெக) - 37855 வாக்குகளுடன் முன்னிலை
தா.வேலு (திமுக) - 21330 வாக்குகள் பெற்று 2வது இடம்
16. வேளச்சேரி
ஆர்.குமார் (தவெக) - 29953 வாக்குகளுடன் முன்னிலை
எம்.கே. அசோக் (அதிமுக) - 17129 வாக்குகள் பெற்று 2வது இடம்

