rahul gandhi, vijay, chodankar
rahul gandhi, vijay, chodankarweb

ஆட்சியில் சேர விஜய் அழைத்தால் காங்கிரஸ் ஆதரவளிக்குமா..? கிரிஷ் சோடங்கர் அதிரடி பதில்!

ஆட்சியில் சேர விஜய் அழைத்தால் காங்கிரஸ் ஆதரவளிக்குமா என்ற கேள்விக்கு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பதிலளித்துள்ளார்.
Published on
Summary

தமிழக அரசியலில் வரலாறு காணாத மும்முனை போட்டியில், திமுக-அதிமுகவை ஒதுக்கி, விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்து 30% வாக்குகளுடன் 109 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. ஆனால் தெளிவான பெரும்பான்மை இல்லாததால் தொங்கு சட்டசபை நிலை உருவாகும் சூழலில், விஜய் அழைத்தால் காங்கிரஸ் ஆதரவு தருமா என்ற கேள்விக்கு கிரிஷ் சோடங்கர் பதிலளித்துள்ளார்.

வரலாறு காணாதளவு ஒரு மும்முனை போட்டியை தமிழக அரசியல் களம் கண்டுள்ளது. திமுக, அதிமுக என்ற இருபெரும் திராவிட கட்சிகளே தமிழகத்தின் அரியணையில் மாறிமாறி அமர்ந்த நிலையில், இம்முறை இவ்விரண்டு கட்சிகளையும் ஓரங்கட்டிவிட்டு தனிம்பெருங் கட்சியாக விஜயின் தவெக வரலாறு படைத்துள்ளது.

tvk vijay
tvk vijayweb

முதல் தேர்தலிலேயே 30% வாக்குகளை பதிவுசெய்திருக்கும் தவெக 109 தொகுதிகளில் முன்னிலை பெற்று 1967-க்கு பிறகு திமுக, அதிமுக இரண்டில் ஒன்றில்லாமல் தனிபெருங்கட்சியாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில் அதிக இடங்களில் தவெக முன்னிலை பெற்றிருந்தாலும், தனிபெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியமைக்க மற்ற கட்சிகளின் ஆதரவு தேவையாக இருக்கும் என்ற நிலையே இருந்துவருகிறது. இந்தசூழலில் தான் விஜய் அழைத்தால் காங்கிரஸ் ஆதரவளிக்குமா என்ற கேள்விக்கு கிரிஷ் சோடங்கர் பதிலளித்துள்ளார்.

rahul gandhi, vijay, chodankar
”வரலாறு படைத்துவிட்டீர்கள்..” விக்ரம் முதல் சிவகார்த்திகேயன் வரை விஜய்க்கு வாழ்த்து!

2026 சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து தவெக முன்னிலை பெற்று வருகிறது என்றாலும், தொங்கு சட்டசபையே அமைவதற்கு வாய்ப்பிருப்பதாக பார்க்கபடுகிறது.

இந்நிலையில் தான் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவளிப்பீர்களா என்ற கேள்விக்கு தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பதிலளித்துள்ளார். அதில், பெண்கள் இளைஞர்களின் வாக்கு அதிகளவில் கிடைத்ததால் தவெக வெற்றி பெற்றிருக்கிறது. தமிழகத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

rahul gandhi, vijay, chodankar
தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சி.. முன்னாள் திமுக MLA-க்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தோல்வி!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com