டெல்லி தீ விபத்து: பெரும் பொருட்சேதம்; நல்வாய்ப்பாக உயிரிழப்பு இல்லை

டெல்லியை அடுத்த நரேலாவின் போர்கர் தொழிற்பேட்டையில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து
தீ விபத்துஃபேஸ்புக்

டெல்லியை அடுத்த நரேலாவின் போர்கர் தொழிற்பேட்டையில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த தீயணைப்பு வாகனங்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முதல்கட்டமாக தொழிற்சாலையின் மூன்று தளங்களுக்கு தீ பரவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இந்த தீயினால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டபோது, ​​தொழிற்சாலைக்குள் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்ததாகவும், தீ பரவ ஆரம்பித்ததும் உடனடியாக அனைத்து தொழிலாளர்களையும் வெளியேறிவிட்டதால் உயிர் சேதம் எதுவும் இல்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் இத்தீவிபத்தில் தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com