maharashtra video
maharashtra videotwitter

பிறப்புறுப்பில் தாக்கிய பந்து.. சுருண்டு விழுந்த சிறுவன் பலி.. மகாராஷ்டிராவில் நிகழ்ந்த சோகம் #Video

மகாராஷ்டிராவில் கிரிக்கெட் பந்து பிறப்புறுப்பில் தாக்கியதில் சிறுவன் சுருண்டு விழுந்த உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Published on

மகாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்தவர், ஷம்பு காளிதாஸ் காண்ட்வே என்ற ஷவுரியா. 11 வயது சிறுவனான இவர், கோடை விடுமுறையை அடுத்து, கடந்த வாரம் லோஹேகான் பகுதியில் தன் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடினார். அப்போது, அவர் எதிர்முனையில் நின்ற பேட்டருக்குப் பந்துவீசினார். அந்தப் பந்தை எதிர்கொண்ட பேட்டர் அடிக்க, அது ஷவுரியாவின் பிறப்புறுப்பைப் பலமாகத் தாக்கியது. இதனால் வலியால் துடித்த ஷவுரியா, சிறிது நேரத்தில் நிலைதடுமாறி மைதானத்திலேயே சுருண்டு விழுந்துள்ளார்.

இதையடுத்து சக நண்பர்கள் ஷவுரியாவை எழுப்ப முயற்சித்தனர். ஆனால், அவர் சுயநினைவின்றி கிடந்ததைக் கண்டு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அருகிலிருந்தவர்கள் ஓடிவந்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். ஆனால், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஷவுரியா ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக் கேட்டு அவரது குடும்பத்தினர்களும் நண்பர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த விபத்து தொடர்பான சிசிடிவி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க: csk vs pbks| டக் அவுட் ஆன தோனி.. உற்சாகத்தில் கை தட்டிய ப்ரீத்தி ஜிந்தா.. #ViralVideo

maharashtra video
மைதானத்தில் மயங்கி விழுந்த கர்நாடக கிரிக்கெட் வீரர்: மாரடைப்பால் மரணம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com