முன்னாள் முதல்வர் கருணாநிதி, பிரதமர் மோடி
முன்னாள் முதல்வர் கருணாநிதி, பிரதமர் மோடிpt web

திடீரென கச்சத்தீவு விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக; 2016ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி சொன்னது என்ன?

கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக ஆர்.டி.ஐ. மூலம் கிடைக்கப் பெற்ற தகவல்களை பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அண்ணாமலையும் வெளியிட்டுள்ளது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் வலுப்பெறும் கச்சத்தீவு விவகாரம்

கச்சத்தீவை மீட்போம் என பல ஆண்டுகாலமாக அரசியல்கட்சிகள் தேர்தலின் போது வாக்குறுதிகளை அளித்து வரும் நிலையில், இந்தியா வசம் இருந்த கச்சத்தீவு எப்படி இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது என வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் ஆர்.டி.ஐ. மூலம் பெற்ற தகவல்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அதில், காங்கிரஸ் கட்சி அலட்சியமாக கச்சத்தீவை விட்டுக் கொடுத்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

பிரதமர் மோடி சாடல்

மோடி, கச்சத்தீவு
மோடி, கச்சத்தீவுட்விட்டர்

இலங்கைக்கு கச்சத்தீவு தாரை வார்த்து கொடுக்கப்பட்டது தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகிவுள்ளதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "கச்சத்தீவை காங்கிரஸ் கட்சி விட்டுக் கொடுத்தது இந்தியர்களை ஆவேசம் அடைய செய்துள்ளதாக கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியை ஒருபோதும் நம்ப முடியாது" என கச்சத்தீவு விவகாரத்தை சுட்டிக்காட்டி விமர்சித்துள்ள பிரதமர் மோடி, இந்தியாவின் ஒற்றுமை, நலன்களை 75 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி பலவீனப்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். கச்சத்தீவு விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது, தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி, பிரதமர் மோடி
ஆரத்திக்கு ரூ.2000 பணம்.. சிக்கிய வீடியோ.. சிக்கலில் ஓ.பன்னீர்செல்வம்!

”நாளை இரண்டாவது ஆவணம்” - அண்ணாமலை 

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “கச்சத்தீவு குறித்து வெளியுறவுத் துறையில் ஆர்.டிஐ மூலம் தகவல்களைப் பெற்றேன். கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவின் இறையாண்மை, எல்லை காங்கிரஸ் ஆட்சியில் விட்டுக்கொடுக்கப்பட்டது. நாளை இரண்டாவது ஆவணம் வெளியிடப்படும், கச்சத்தீவு குறித்து கருணாநிதி பேசிய விவரங்கள் இடம்பெறும். 1974 ஆம் ஆண்டு கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது” என தெரிவித்தார்.

10ஆண்டுகளாக பிரதமர் என்ன செய்தார்? செல்வப்பெருந்தகை கேள்வி

தற்போது மீண்டும் எழுந்துள்ள கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக புதிய தலைமுறையிடம் பிரத்யேக பேட்டி அளித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை, “பத்தாண்டுகளாக இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி என்ன செய்தார்? ஏன் கச்சத்தீவை மீட்டெடுக்கவில்லை, ஏன் அருணாச்சல பிரதேசத்தை பாதுகாக்கவில்லை? பல்லாயிரம் சதுர கிலோமீட்டரை சீனா அபகரித்துள்ளது, ஆக்கிரமித்துள்ளது. வாய் திறக்காமல் பயந்து மௌனியாக இருக்கிறார் பிரதமர் மோடி” என தெரிவித்துள்ளார்.

பாஜக தலைவர்கள் சொல்வதென்ன?

மத்திய நிதியமைச்சரும் நிர்மலா சீதாராமனும் இது தொடர்பாக தனது கருத்தினை பதிவிட்டுள்ளார். தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் கேள்விக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலமாக வெளிவந்த உண்மை. கச்சத்தீவு கைமாறியது காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 1976ல். இதைப் பற்றிய முழுவிபரம் 1974 ஜூன் மாதம் அன்றைய முதல்வர் திரு. கருணாநிதி அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இன்று வரை கச்சத்தீவு பற்றி உண்மைக்கு புறம்பாக பிரச்சாரம் செய்துவரும் ஆளும் கட்சி திமுக இதற்கு பதிலளிக்க வேண்டும். கச்சத்தீவை காங்கிரஸ் உடன்சேர்ந்து தாரைவார்த்துவிட்டு, பிறரை கேள்வி கேட்கும் போக்கு மிகவும் தவறு” என தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் தளத்தில், “அவர்கள் (காங்கிரஸ்) மனமுவந்து கச்சத்தீவை விட்டுக்கொடுத்தார்கள். அதைப் பற்றி அவர்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. அவர்கள்தான் இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிரானவர்கள். அவர்கள் நம் தேசத்தை பிளவுபடுத்தவும், உடைக்கவும் மட்டுமே விரும்புகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி, பிரதமர் மோடி
155 கிமீ வேகம்.. 12 டாட் பந்துகள்.. 3 விக்கெட்! சாம்பியன்களை திணறடித்த 21 வயது வீரர்.. LSG வெற்றி!

2016ல் கருணாநிதி சொன்ன கருத்து என்ன?

2016 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கூறிய கருத்துக்கு மறுப்பு தெரிவித்து, முன்னாள் முதல்வர் கருணாநிதி வெளியிட்டிருந்த அறிக்கையில், “முதலில், மத்திய அரசால் கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்ட போது தி.மு.க. எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது உண்மையா?

1974ஆம் ஆண்டிலேயே ஆகஸ்ட் 21ஆம் தேதியன்று தமிழகச் சட்டமன்றத்தில் “கச்சத் தீவு” பற்றி நான் முன் மொழிந்த தீர்மானம் இதோ:

கருணாநிதி
கருணாநிதிகோப்புப் படம்

“இந்தியாவுக்குச் சொந்தமானதும், தமிழ் நாட்டுக்கு நெருங்கிய உரிமைகள் கொண்டதுமான கச்சத் தீவுப் பிரச்சினையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவு பற்றி, இந்தப் பேரவை தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு - மத்திய அரசு இதனை மறு பரிசீலனை செய்து கச்சத் தீவின் மீது இந்தியாவிற்கு அரசுரிமை இருக்கும் வகையில் இலங்கை அரசுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தைத் திருத்தி அமைக்க முயற்சி எடுத்து, தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறது”

முன்னாள் முதல்வர் கருணாநிதி, பிரதமர் மோடி
2 தொகுதிகளிலும் பானை சின்னம் ஒதுக்கீடு.. நீண்ட போராட்டத்திற்குப் பின் வெற்றிபெற்ற விசிக!

எனவே தி.மு.க. அப்போது வாயைப் பொத்திக் கொண்டு சும்மா இருக்கவில்லை. அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி, பிரதமருக்குக் கடிதம் எழுதியதோடு, 24.7.1974 அன்று தி.மு. கழகத்தின் சார்பில் தமிழகமெங்கும் கண்டனப் போராட்டங்கள் நடத்தப்பட்டு, தஞ்சை, பாபநாசம் ஆகிய இடங்களில் நானே கண்டன கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றியிருக்கிறேன்.

பின்னர் ஒரு முறை செய்தியாளர்கள் “கச்சத் தீவு” பற்றி என்னைக் கேட்ட போது கூட, கச்சத் தீவை விட்டுக் கொடுக்கும்போது, தமிழ்நாடு தி.மு.க. அரசு அதனை வன்மையாக மறுத்திருக்கிறது. அப்போது இந்திரா காந்தி அம்மையார் பிரதமராக இருந்தார். அவர்கள் சமாதானம் செய்து - கச்சத் தீவிலே நமக்குள்ள உரிமைகளுக்கெல்லாம் வழி வகுத்து விதிகள் செய்யப்பட்டன. அந்த உரிமைகள் - தேவாலயத்திற்கும், கிறித்தவ ஆலயத்திற்கும் சென்று வருவதற்கான உரிமை, மீன்களை காய வைப்பதற்கும், மீன் பிடிப்பதற்குமான உரிமை, நம்முடைய மீனவர்கள் அங்கே தங்கள் வலைகளை காய வைப்பதற்கான உரிமை என்று பல உரிமைகள் நமக்கு இருந்தன. ஆனால் நெருக்கடி நிலைக்குப் பிறகு 1976இல் நம்முடைய ஆட்சி இல்லை. ஆளுநர் ஆட்சி தான் இருந்தது. ஆளுநர் ஆட்சியில் அந்த விதிகள் எல்லாம் மாற்றப்பட்டு விட்டன. அது தொடர்ந்து இப்போதும் இருக்கிறது. அதை நாமும் பல முறை அந்த விதிமுறைகளை யெல்லாம் கொண்டு வர வேண்டுமென்று வற்புறுத்திக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இப்போது அதற்குரிய நேரம் வந்து விட்டதாகவே கருதுகிறேன்” என்று கூறியிருக்கிறேன். இதெல்லாம் கச்சத் தீவினை நான் தாரை வார்த்து விட்டேன் என்பதற்கான அடையாளங்களா?

முன்னாள் முதல்வர் கருணாநிதி, பிரதமர் மோடி
எதிரெதிர் துருவத்தில் ஒய்.எஸ்.ஆர் குடும்பம்; கடப்பா தொகுதி யாருக்கு? -அனல் தகிக்கும் ஆந்திர அரசியல்!

கச்சத் தீவைப் பொறுத்தவரையில், அதனைத் தாரை வார்க்க நான் எந்தக் காலத்திலும் ஒப்புக் கொண்டதும் இல்லை; உடன்பட்டதும் இல்லை. தமிழகத்தின் முதல் அமைச்சர் என்ற முறையில் என்னுடைய எதிர்ப்பை நான் அப்போதே தெரிவித்திருக்கிறேன். உடனடியாக அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்து அவர்களிடம் கருத்தறிந்திருக்கிறேன்.

நான் முதலமைச்சராக இருந்த காலத்தில், எந்த அளவுக்கு கச்சத் தீவினை மீண்டும் பெறுவதற்காகப் போராட முடியுமோ, வாதாட முடியுமோ அந்த அளவுக்கு போராடியிருக்கிறேன், வாதாடி இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவு சுருக்கமான வரலாறு

கச்சத்தீவு குறித்த சுருக்கமான வரலாறு கீழ்கண்ட வீடியோவில் உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com