மயங்க் யாதவ்
மயங்க் யாதவ்X

155 கிமீ வேகம்.. 12 டாட் பந்துகள்.. 3 விக்கெட்! சாம்பியன்களை திணறடித்த 21 வயது வீரர்.. LSG வெற்றி!

பஞ்சாப் கிங்ஸ் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவுசெய்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.

இந்தியாவின் மூலைமுடுக்களில் உள்ள பெயரே தெரியாத கிராமங்களில் இருந்துகூட இளம் டேலண்ட் வீரர்களை ஐபிஎல் தொடர் கண்டுபிடித்துள்ளது. இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய திறமைக்கான அங்கீகாரத்தை தேடும் இடமாக ஐபிஎல் தொடரை பார்த்து வருகிறார்கள். அந்தவகையில் ஐபிஎல்லில் சிறப்பாக செயல்பட்டு இந்திய கிரிக்கெட் அணியில் ஹீரோவாக மாறிய வீரர்களில் ”ஜஸ்பிரித் பும்ரா, அஸ்வின், சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், தீபக் சாஹர், ருதுராஜ் கெய்க்வாட்” என்ற ஸ்டார் வீரர்களின் பெயர் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

mayank yadav
mayank yadav

அந்தவகையில் இன்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லியை சேர்ந்த மயங்க் யாதவ் என்ற 21 வயது வேகப்பந்துவீச்சாளர், தன்னுடைய அசாத்தியமான வேகப்பந்துவீச்சால் எல்லோரையும் ஆச்சரியத்தில் தள்ளியுள்ளார். 102 ரன்களுக்கு 0 விக்கெட்டுடன் வெற்றியின் அருகாமையில் இருந்த பஞ்சாப் கிங்ஸ் அணியை, தன்னுடைய 155கிமீ Speed Gun பவுலிங்கால் அப்படியே தலைகீழாக மாற்றி வீழ்த்தியுள்ளார் மயங்க் யாதவ்.

மயங்க் யாதவ்
அம்பயருடன் கத்திய பாண்டிங் - கங்குலி.. பாதியில் நிறுத்தப்பட்ட போட்டி! அஸ்வின் அதிரடியால் RR வெற்றி!

க்ருணால் இன்னிங்ஸால் 199 ரன்கள் குவித்த LSG!

லக்னோவில் நடைபெற்ற இன்றைய போட்டியில் காயம் காரணமாக, கேப்டனாக செயல்படாத கேஎல் ராகுல், வெறும் இம்பேக்ட் வீரராக மட்டுமே களமிறங்கினார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய இன்றைய போட்டியில் லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்ட நிக்கோலஸ் பூரன், டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வுசெய்தார்.

LSG vs PBKS
LSG vs PBKS

முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியில் கேஎல் ராகுல், படிக்கல் மற்றும் ஸ்டொய்னிஸ் மூன்று பேரும் நல்ல தொடக்கம் கிடைத்த போதும், அதனை பயன்படுத்திக்கொள்ளாமல் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். என்ன தான் ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் கைக்கோர்த்த டி-காக் மற்றும் அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் இருவரும் பட்டையை கிளப்பினர். 5 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என பறக்கவிட்ட டி-காக் அரைசதமடித்து வெளியேற, மறுமுனையில் 3 சிக்சர்கள் 3 பவுண்டரிகள் என துவம்சம் செய்த பூரன் வானவேடிக்கை காட்டினார்.

krunal pandya
krunal pandya

ஆனால் முக்கியமான நேரத்தில் பூரனை போல்டாக்கி வெளியேற்றிய ரபடா ஆட்டத்தை பஞ்சாப் பக்கம் திருப்பினார். எப்படியும் 180 ரன்களுக்குள் லக்னோவை சுருட்டிவிடலாம் என்று நினைத்த பஞ்சாப் அணிக்கு, கடைசியாக வந்த க்ருணால் பாண்டியா தலைவலியாக மாறினார். கடைசியில் வந்து 4 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என விரட்டி 22 பந்தில் 43 ரன்கள் என க்ருணால் அடிக்க, 20 ஓவர் முடிவில் 199 ரன்கள் என்ற நல்ல டோட்டலை எட்டியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.

மயங்க் யாதவ்
"பும்ராவை ஏன் பந்துவீச வைக்கவில்லை? நீங்கள் செய்தது மிகப்பெரிய தவறு!" - ஹர்திக்கை விளாசும் வீரர்கள்!

155 KM வேகத்தில் சிதறடித்த மயங்க் யாதவ்!

200 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ஷிகர் தவான் மற்றும் ஜானி பேர்ஸ்டோ இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். விக்கெட்டையே விட்டுக்கொடுக்காமல் லக்னோவின் வேகப்பந்துவீச்சாளர்களை எல்லாம் அடித்து துவைத்த இந்த ஜோடி, முதல் விக்கெட்டுக்கே 102 ரன்களை குவித்து மிரட்டி விட்டது.

ஷிகர் தவான்
ஷிகர் தவான்

ஆனால் 11 ஓவர்வரை பதுக்கிவைத்திருந்த லக்னோ அணி மயங்க் யாதவ் என்ற ஆயுதத்தை களத்தில் இறக்கியது. தன்னுடைய முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடிய மயங்க் யாதவ், முதல் பந்தையே 150கிமீ வேகத்தில் வீசி, 3 சிக்சர்கள் 3 பவுண்டரிகள் என பறக்கவிட்டு களத்திலிருந்த பேர்ஸ்டோவையே திக்குமுக்காடச் செய்தார். பேட்டை கொண்டுவருவதற்குள் மயங்க் வீசிய பந்து வேகமாக வந்து தாக்கியது. மூன்றுமுறை பந்தை எதிர்கொள்ள முடியாமல் தவித்த பேர்ஸ்டோ, அடுத்த பந்தில் அடித்து ஆட முயற்சித்து கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

பேர்ஸ்டோ
பேர்ஸ்டோ

அனுபவம் வாய்ந்த பேர்ஸ்டோவுக்கே இந்த நிலைமை என்றால், அடுத்தடுத்து களத்திற்கு வந்த பிரப்சிம்ரன் மற்றும் ஜிதேஷ் சர்மா இருவரும் 155 கிமீ வேகத்தில் வீசிய மயங்கை சமாளிக்க முடியாமல் அவுட்டாகி வெளியேறினர். பந்துவீசிய 4 ஓவர்களில் 12 டாட் பந்துகளை வீசிய மயங்க் யாதவ், 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமல்லாமல் பஞ்சாப் அணியின் வெற்றிக்கனவை குழிதோண்டி புதைத்தார். மயங்க் யாதவால் ரன்ரேட் அதிகமாக, அழுத்தத்தில் அடிக்கச்சென்ற ஷிகர் தவான் 70 ரன்களில் மொஷின் கான் ஓவரில் அவுட்டாகி வெளியேறினார்.

கடைசி நம்பிக்கையாக இருந்த ஷிகர் தவானும் வெளியேற, அதிக கோடி கொடுத்து விலைக்கு வாங்கப்பட்ட சாம்கரன் 0 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். காயத்தால் சரியாக விளையாடமுடியாமல் போன லிவிங்ஸ்டனால், சரியான நேரத்தில் சோபிக்க முடியவில்லை. இறுதியில் இரண்டு சிக்சர்களை லிவிங்ஸ்டன் பறக்கவிட்டாலும், 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணியால் 178 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

மயங்க் யாதவ்
”ரோகித் + பும்ரா” இருவரும் MI விட்டு வெளியேறுவார்கள்! CSK or RCB-க்கு செல்ல வாய்ப்பு? முக்கிய தகவல்!

மயங்க் யாதவின் பலம் என்ன?

அற்புதமாக பந்துவீசி வெற்றிக்கு வித்திட்ட 21 வயது மயங்க் யாதவ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மயங்க் யாதவிடம் இருக்கும் கூடுதல் பலம் என்னவென்றால், அவரால் 150 கிமீ வேகத்திலும் சரியான லைன் மற்றும் லெந்துகளில் வீசமுடிகிறது. வலது கை பேட்ஸ்மேன்களுக்கு அதிக வேகத்தில் பந்தை இன்ஸ்விங் செய்யும் மயங்க் யாதவ், எதிர்கொள்ள கடினமான பந்துவீச்சாளராக மாறுகிறார். ஏற்கனவே வேகப்பந்துவீச்சில் முகமது ஷமி இல்லாதது இந்திய அணிக்கு பாதகமாக இருந்துவரும் நிலையில், மயங்க் யாதவ் தொடர்ந்து ஐபிஎல்லில் சிறப்பாக செயல்பட்டால் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் பும்ராவின் இணையாக மாறும் வாய்ப்பு இருக்கிறது.

புள்ளிப்பட்டியலை பொறுத்தவரையில் இந்தவெற்றியின் மூலம் லக்னோ அணி 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. முதலிரண்டு இடங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நீடிக்கின்றன.

மயங்க் யாதவ்
SL vs BAN: ‘இவங்க இன்னும் திருந்தல மாமா..’ மோசமான DRS ரிவியூ எடுத்த வங்கதேசம்! சிரிக்கும் ரசிகர்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com