2 தொகுதிகளிலும் பானை சின்னம் ஒதுக்கீடு.. நீண்ட போராட்டத்திற்குப் பின் வெற்றிபெற்ற விசிக!

விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகளுக்கு பானை சின்னம் வழங்கப்பட்டு உள்ளது.
பானை சின்னத்தில் களமிறங்கும் விசிக
பானை சின்னத்தில் களமிறங்கும் விசிகட்விட்டர் | @thirumaofficial

நாடு முழுவதும் ஜனநாயகப் பெருவிழா தொடங்கியுள்ளது. தமிழகத்தில் முதல்கட்டமாக அனைத்துத் தொகுதிகளிலும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி (திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி) நிலவுகிறது. இதில் சீமானின் நாம் தமிழர் கட்சியைத் தவிர பிற கட்சிகள் எல்லாம் பிரதான கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.

சீமான், மைக் சின்னம்
சீமான், மைக் சின்னம்pt web

அந்த வகையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கூட்டணிக் கட்சிகளுக்கும் அக்கட்சிகள் விரும்பிய சின்னங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. ஆனால் பிற கூட்டணி கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் வழங்கப்படவில்லை. மாறாக தீப்பெட்டி சின்னம் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல் கடந்த தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கு இம்முறை அந்தச் சின்னம் வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக மைக் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் ஆணையம் மீது கட்சிகள் கடுமையான விமர்சனங்களை வைத்துவந்தன.

இதையும் படிக்க: வழக்கறிஞர் மீது பொய்வழக்கு: குஜராத் Ex IPS அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை.. நீதிமன்றம் அதிரடி!

பானை சின்னத்தில் களமிறங்கும் விசிக
சின்னம் ஒதுக்குவதில் பாரபட்சமா? மதிமுக, விசிக, நாதக சந்திக்கும் பிரச்னைகளும் தேர்தல் ஆணைய பதிலும்!

இந்தச் சூழலில் விடுதலைச் சிறுத்தை கட்சியும் திமுக கூட்டணியில் 2 இடங்களில் போட்டியிடுகிறது. அக்கட்சி சார்பில் கட்சித் தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியிலும், பொதுச் செயலாளர் துரை.ரவிக்குமார் விழுப்புரம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இதுதவிர கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களிலும் விசிக போட்டியிடுகிறது. எனவே, இந்தத் தேர்தலில் தங்களுக்கு பானை சின்னத்தை, பொதுவான சின்னமாக ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் விசிக சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் ஒரு சதவீதத்துக்கும் குறைவாக வாக்கு பெற்றதாகக் கூறி, விசிகவின் கோரிக்கையை ஏற்க தேர்தல் ஆணையம் மறுத்தது. இது தொடர்பாக விசிக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

இதற்கிடையே, தொல்.திருமாவளவன் “நமது சின்னம் பானை. இந்தச் சின்னம் நமது உரிமை. இந்த சின்னம் கிடைக்கும் என்பதில் மிக உறுதியாய் நிற்கிறோம்” எனத் தெரிவித்து வாக்கு சேகரித்தார். அதுதொடர்பான பதிவும் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டது. இந்த நிலையில், சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு பானை சின்னத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் இன்று ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்கு மகிழ்ச்சி தெரிவித்து திருமாவளவன் பேசியவற்றை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் அறியலாம்...

அதேபோல் விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் ரவிக்குமாருக்கும் பானை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: டெல்லி முதல்வர் மனைவியுடன் ஹேமந்த் சோரன் மனைவி சந்திப்பு.. இருவரும் பேசியது என்ன?

பானை சின்னத்தில் களமிறங்கும் விசிக
“என் சொந்த தொகுதியான சிதம்பரத்தில்தான் போட்டியிடுவேன்; சந்தேகமே வேண்டாம்” - விசிக தலைவர் திருமாவளவன்

இதையடுத்து விசிக-வினர் இன்று பானை சின்னத்தில் வாக்கு சேகரித்தனர். இதில் முதற்கட்டமாக திமுக சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திருமாவளவனுடன் இணைந்து சிதம்பரம் தொகுதியில் வாக்கு சேகரித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com