விஜய்
விஜய்pt web

தமிழக அரசியலில் புதிய அத்தியாயம்? தவெக செயற்குழு கூட்டமும்... திமுக, பாஜக பதிலும்...

தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் வேட்பாளராக விஜயை தேர்வு செய்வது உள்ளிட்ட 18 தீர்மானங்கள் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
Published on

தவெக செயற்குழு கூட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் இன்று நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் வேட்பாளராக விஜயை தேர்வு செய்வது உள்ளிட்ட 18 தீர்மானங்கள் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

முதல் இரண்டு தீர்மானங்களை விஜய் வாசித்தார். அதில், “கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளுடன் என்றைக்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கூட்டணி இல்லை” என்று தெரிவித்தார். மேலும், “ஒன்றிய அளவில் மலிவான அரசியல் ஆதாயங்களுக்காக, மக்களை மத ரீதியாகப் பிளவுபடுத்தி மக்களிடையே வேற்றுமையை விதைத்து அதில் குளிர்காய நினைக்கிறது பாஜக” எனவும் விமர்சித்தார்.

பாஜக மீதான இந்த விமர்சனம் குறித்து புதிய தலைமுறையிடம் பிரத்யேகமாகப் பேசிய பாஜகவின் கரு. நாகராஜன், பாஜக என்ன பிளவுவாத அரசியலை செய்கிறது என்பதை விஜய் நிரூபிக்க முடியுமா? எனக் கேள்வி எழுப்பினார். அவர் கூறுகையில், “தேர்தல் அரசியல் என்பது முற்றிலும் வேறானது. நிருபர்கள்தான் பாஜகவினரிடம் விஜய் உடனான கூட்டணி குறித்து கேட்கிறார்கள். நாங்களே வழிய சென்று விஜய் வருவாரா? மாட்டாரா? என்றெல்லாம் கேட்கவில்லை. நிருபர்கள் கேட்கும்போது, பார்க்கலாம், பொறுத்திருப்போம் என்றுதான் சொல்ல முடியும்.

விஜய்
விஜய்யின் 5 அஸ்திரங்கள்.. டிசம்பர் வரை பக்கா ப்ளான்.. செயற்குழுவில் என்ன நடந்தது?

விஜயால் நிரூபிக்க முடியுமா?

இன்று விஜய் பேசியிருப்பதை நான் வேறுவிதமாகப் பார்க்கிறேன். பிளவுவாத அரசியல் எனும் போலித்தனமான திராவிட மாடல் வசனத்தை விஜய் பேசுவது வேதனை அளிக்கிறது; கண்டிக்கத்தக்கது. விஜய்க்கு ஆதவ் அர்ஜுன் போன்றவர்கள் எழுதிக்கொடுக்கலாம். பாஜக என்ன பிளவுவாத அரசியலை செய்கிறது என்பதை விஜய் நிரூபிக்க முடியுமா? சிறும்பான்மையின மக்களை நம் கைகளில் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற வசனங்களை பேசுகிறார்களா என்பது தெரியவில்லை. பிளவுவாத அரசியல் எனப் பேசுவதெல்லாம் தமிழ்நாட்டில் எடுபடாது.

பாஜக என்ன பிளவுவாத அரசியலை செய்கிறது என்பதை விஜய் நிரூபிக்க முடியுமா?

விஜய் தவெக எனும் கட்சியைத் தொடங்குவார். அவர் வந்தால்தான் பாஜக கூட்டணியை மேல் கொண்டு வரமுடியும் என்ற கற்பனையில் யாரும் இல்லை. அவரவர்கள் தங்களது கட்சி வேலையை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், முருக பக்தர்கள் மாநாடு இந்திய அளவில் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது எனும் பொறாமையில் திமுக போலவே விஜயும் பேசுகிறார். எல்லாரும் எதிரி என்று பாஜக பேசுவதில்லை. எல்லாரும் வேண்டுமெனப் பேசுகிறோம். ஆனால், திமுக போன்ற கட்சிகள் பெரும்பான்மை இந்து சமுதாய மக்களை வேண்டாம் என்று பேசுகிறார்கள். அதுபோல் இன்று விஜயும் பேசத்தொடங்கியிருக்கிறார். அதுதான் வேதனை அளிக்கிறது” என்று தெரிவித்தார்.

எல்லாரும் எதிரி என்று பாஜக பேசுவதில்லை. எல்லாரும் வேண்டுமெனப் பேசுகிறோம்.

விஜய் தீர்மானத்தை வாசித்தபோது திமுகவையும் கடுமையாக விமர்சித்தார். அவர் கூறுகையில், சுய அரசியல் லாபங்களுக்காக பாஜகவுடன் கூடிக் குலைந்து கூட்டணி போக திமுகவோ அதிமுகவோ இல்லை தவெக. கூட்டணி என்றாலும் தவெக தலைமையில் அமையும் கூட்டணி திமுக மற்றும் பாஜகவிற்கு எதிரானதாகத்தான் இருக்கும். அதில் சமரசம் என்ற பேச்சிற்கே இடமில்லை” என்றும் தெரிவித்தார்.

விஜய்
அதிமுகவிற்கு எதிராக முதல்முறை.. திமுக, பாஜகவிற்கு எதிராகவும் வெடித்து பேசிய விஜய்..!

விஜய்க்கு வரலாறு தெரியவில்லை

விஜயின் இந்த வார்த்தைகள் குறித்து, திமுக சார்பில் பேசிய வழக்கறிஞர் சரவணன், ”விஜய் திமுக குறித்து பேசுவது எல்லாம், விஜய்க்கு வரலாறு தெரிவதில்லை என்பதைக் காட்டுகிறது” என்று தெரிவித்தார். அவர் கூறுகையில், “பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என விஜய் சொல்கிறார்.. அது அவருடைய விருப்பம். ஆனால், திமுக குறித்து பேசுவது எல்லாம், விஜய்க்கு வரலாறு தெரியதில்லை என்று காட்டுகிறது. 1999 ஆம் ஆண்டு திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தது என்றால், மூன்று முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்து கூட்டணி வைத்தது. பொது சிவில் சட்டம் கொண்டு வரக்கூடாது, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கக்கூடாது, ராமர் கோவில் கட்டக்கூடாது என மூன்று கோரிக்கைகளை முன்வைத்துதான் திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தது, இந்த மூன்று கோரிக்கைகளையும் பாஜக ஏற்றுக்கொண்டது. பாஜகவின் மதவாதத்திற்கு கடிவாளம் போட்டு கூட்டணி வைக்கக்கூடிய வல்லமை திமுகவிற்கு இருந்தது.

1999 ஆம் ஆண்டு திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தது என்றால், மூன்று முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்து கூட்டணி வைத்தது.
திமுக சரவணன்
திமுக சரவணன்pt web

பரந்தூர் விமான நிலையம் என்பது எவ்வளவு முக்கியமானது. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், அந்நிய முதலீட்டுக்கும் பரந்தூர் விமான நிலையம் என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை எல்லோரும் உணர்ந்திருக்கிறார்கள். அங்கிருக்கக்கூடியவர்கள் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள், அவர்களுக்குத் தேவையான அனைத்து விஷயங்களும் செய்து கொடுக்கப்படும் என முதலமைச்சர் வாக்குறுதி கொடுத்திருக்கிறார். ஆனால், விஜய்க்கு யாரோ தவறாக சொல்லிக்கொடுக்கிறார்கள். திமுக அரசு எல்லோர் நலன்களையும் கருத்தில்கொண்டு செயல்படக்கூடிய அரசு” எனத் தெரிவித்தார்.

விஜய்க்கு யாரோ தவறாக சொல்லிக்கொடுக்கிறார்கள். திமுக அரசு எல்லோர் நலன்களையும் கருத்தில்கொண்டு செயல்படக்கூடிய அரசு
விஜய்
கட்சி என்னுடையது vs சட்டமன்றத்தில் நான்தான் | கொறடாவை மாற்றக்கோரும் பாமக எம்.எல்.ஏக்கள்! அடுத்து?

அதிமுக உடன் கூட்டணி இல்லை என்பதை உணர்த்தியிருக்கிறார்

விசிக சார்பாக பேசிய வன்னியரசு, “போனமுறை பரந்தூருக்கு சென்றபோதும் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவேன் என விஜய் சொன்னார். அதைச் சொன்னதோடு சரி. அதற்குப் பின் அவர் வெளியிலேயே வரவில்லை. இந்த அறிவிப்பும் அதுபோல்தான் இருக்குமென நினைக்கிறேன். எந்த பிரச்னைகளுக்காக விஜய் கடந்த காலங்களில் மக்களைத் திரட்டி போராட்டத்தை நடத்தியிருக்கிறார். எனவே விஜயின் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்த பேச்சாகவோ நடைமுறை சார்ந்த பேச்சாகவோ நான் பார்க்கவில்லை” எனத் தெரிவித்தார்.

பத்திரிகையாளர் ப்ரியன்
பத்திரிகையாளர் ப்ரியன்புதிய தலைமுறை

முதலமைச்சர் வேட்பாளராக விஜய் தேர்வு செய்யப்பட்டது குறித்துப் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், “விஜய் முதல்வர் வேட்பாளர் என்று தெரிவித்ததன் மூலம் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பதை தவெக உணர்த்தியிருக்கிறது. அதுமட்டுமின்றி தனித்து கூட்டணி அமைப்பதற்கான கட்டாயத்தில் தவெக இருக்கிறது. ஆனாலும் அவருக்கு இருக்கும் வாக்கு வங்கி என்ன என்பது குறித்தான தகவல்களும் இதுவரை தெரியவில்லை. எனவே, எந்த கட்சி அவரை நம்பி கூட்டணிக்கு வரும் என்றும் தெரியவில்லை. இல்லையென்றால் அவர் தனியாக போட்டிபோடுவதற்குத் தள்ளப்படுவார். அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது அவருக்கான ஆதரவு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதைப் பொறுத்துதான் மற்ற கட்சிகள் முடிவெடுப்பார்கள். கூட்டணிகளில் இடம் கிடைக்காத சில கட்சிகள் கடைசி நேரத்தில் விஜய் தலைமையினை ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்பும் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது..

விஜய்
பாஜகவின் புதிய தேசியத் தலைவர் யார்? லிஸ்ட்டில் இருக்கும் நான்கு பேர்.. யாருக்கு வாய்ப்பு?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com