"கொன்னுடுவோம்னு மிரட்டுறாங்க"-ஊரைவிட்டு வெளியேற்றப்பட்ட ஊராட்சி மன்ற தலைவி..சாதிப்பெயரால் வன்கொடுமை!

ஊராட்சித் தேர்தலில் தலைவராக வெற்றிபெற்ற பெண் தலைவரையே ஊரைவிட்டு ஒதுக்கிவைத்த கொடூரம்.. பட்டியலினப் பெண் என்பதால் சாதிப்பெயரை சொல்லி வன்கொடுமை செய்யும் மாற்று சாதி.. தலைவராக உறுதி மொழி ஏற்கமுடியாமல் வீடு, நிலத்தை விட்டு வெளியூருக்கு சென்ற சோகம்..
indhumadhi
indhumadhifile image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மலைப்பகுதியில் அமைந்துள்ளது நாயக்கனேரி மலை கிராமம். இந்த மலை கிராம ஊராட்சியில் பனங்காட்டேரி மற்றும் காமனூர் தட்டு என்ற மலைகிராமங்கள் உள்ளன. நாயக்கனேரி மலைக்கிராம ஊராட்சியில் மொத்தம் 9 வார்டுகள் உள்ளன. இந்நிலையில் கடந்த முறை நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவி, பட்டியலின பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது.

அதன்படி காமனூர் தட்டு பகுதியை சேர்ந்த இந்துமதி என்பவர், நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய முற்பட்டபோது, மாற்று சாதியினர் இந்துமதியை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இருந்தபோதும் எதிர்ப்பை மீறி கடைசி நேரத்தில் தலைவர் பதிவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் இந்துமதி.

indhumadhi
“TTF வாசன் பைக்கை எரித்துவிடலாம்; யூ-ட்யூபை மூடிவிடலாம்” - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

இதனால், நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மலைகிராம மக்கள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாமல் உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, இந்துமதி ஊராட்சி மன்ற தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

indhumadhi pandiyan
indhumadhi pandiyanweb team

மேலும், ஊராட்சி மன்ற தலைவராக இந்துமதி பதவியேற்க கூடாது என மாற்று சாதியினர் சேர்ந்து நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும், இந்துமதியின் பதவியேற்புக்கு எந்த தடையும் பிறப்பிக்கவில்லை.

indhumadhi
மீண்டும் அண்ணாமலை இல்லாமல் தொடங்கிய ஆலோசனைக் கூட்டம்!

இதற்கிடையே, அங்குள்ள மாற்றுசாதியினர், இந்துமதி மற்றும் அவரது குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைக்க ஊர் பஞ்சாயத்தில் முடிவு செய்துள்ளனர். அத்தோடு, இந்துமதிக்கு ஆதரவாக பேசியவர்களையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். இதனால் தனது கணவர் பாண்டியனோடு மலைகிராமத்தை விட்டு வெளியேறி வேறு இடத்தில் வாடகை வீட்டில் தங்கி வசிக்கத் தொடங்கியுள்ளார் இந்துமதி.

சோகம் என்னவெனில், தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆன நிலையிலும், இந்துமதியை அப்பகுதி மக்கள் தலைவராக உறுதிமொழி ஏற்கவிடாமல் பிரச்சனை செய்துவருவதாக கூறப்படுகிறது.

மேலும், 2 ஆண்டுகளாக நடைபெறும் கிராம சபா கூட்டங்கள், தலைவர் இல்லாமல் ஊராட்சி செயலாளர் தலைமையில் நடைப்பெற்று வருகிறது.

indhumadhi
சச்சினின் அந்த இன்னிங்ஸை, இந்தியாவின் அந்த வெற்றியை யாரால் மறக்க முடியும்! வேர்ல்ட் கப் மெமரீஸ் -10

ரேஷன் கடை, பால் கொள்முதல் கடை என்று எங்கு சென்றாலும் மாற்று சாதியினர் இந்துமதியை சாதிப்பெயரை சொல்லி வன்கொடுமை செய்வதாக கூறப்படுகிறது. மீறி ஊருக்குள் வந்தால் கொலை செய்துவிடுவதாகவும், சொந்த ஊரில் உள்ள வீட்டுக்கு மின் இணைப்பை துண்டித்ததோடு, குடிநீர் குழாய்களையும் மாற்று சாதியினர் உடைத்துள்ளனர்.

இதுகுறித்து வருத்தம் தெரிவிக்கும் இந்துமதி, சாதி பெயரை சொல்லி பிள்ளைகளை பள்ளியில் கூட சேர்க்க அனுமதிக்கவில்லை என்று கூறியுள்ளார். குறிப்பாக தனது தந்தை இறந்த போது அவரை அடக்கம் செய்யக்கூட யாரையும் அனுமதிக்கவில்லை. யாரும் உதவவும் இல்லை. பெண்கள் சிலர் இணைந்து உடலை தூக்கி சென்று அடக்கம் செய்ததாக வருத்தம் தெரிவித்துள்ளார் இந்துமதி. மேலும், தலைவர் பதவியால் தான் தொடர்ந்து பிரச்சனை சந்தித்து வருவதால் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

indhumadhi
கேப்டன்கள் உடையாடல்; அசந்து தூங்கிய தென்னாப்ரிக்க கேப்டன் பவுமா! வைரலாகும் புகைப்படம்

பட்டிலின சாதியைச் சேர்ந்த இந்துமதி, மாற்று சாதியைச் சேர்ந்த பாண்டியனை காதலித்து சாதிமறுப்பு திருமணம் செய்ததுதான் மொத்த பிரச்சனைக்கும் பின்னணி என்று தெரிகிறது.

இந்த விவகாரத்தில், இந்துமதிக்கு ஆதரவாகவும், அவருக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்க வேண்டும் என்றும் விசிக உள்ளிட்ட 4 கட்சிகள் நாளை போராட்டம் நடத்த இருக்கின்றன. அறிவியல், தொழில்நுட்பம், கல்வி அறிவு வளர்ந்து வரும் நிலையில், சாதியின் பெயரால் ஊராட்சி மன்ற தலைவிக்கே நடந்தேறும் வன்கொடுமை உண்மையில் அதிர்ச்சையைதான் ஏற்படுத்துகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com