கேப்டன்கள் உடையாடல்; அசந்து தூங்கிய தென்னாப்ரிக்க கேப்டன் பவுமா! வைரலாகும் புகைப்படம்

உலகக் கோப்பைக்கு தேர்வான 10 அணிகளது கேப்டன்களின் Round Table Event-ன் போது தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா அசந்து தூங்கிய புகைப்படம் வேகமாக பரவி வருகிறது.
கேப்டன் பவுமா
கேப்டன் பவுமாpt web

இந்தியாவில் 50 ஓவர் 13-வது ஆடவர் உலகக்கோப்பைக்கான போட்டிகள் நாளை முதல் தொடங்கப்பட உள்ளன. இதன் முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகின்றன. சென்னையில் அக்டோபர் 8-ஆம் தேதி நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி எதிர்கொள்ள இருக்கிறது.

இந்நிலையில் உலகக்கோப்பை தொடருக்கு தேர்வான அணிகளின் கேப்டன்களின் உரையாடல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா இருக்கையில் உட்கார்ந்து கொண்டே அசந்து தூங்கிய புகைப்படம் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. வங்க தேச அணியின் கேப்டன் பேசிக்கொண்டிருந்த போது தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா அசந்து தூங்கிய புகைப்படம் வேகமாக பரவி வருகிறது.

தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா தலைமையில், ஜெரால்ட் கோட்ஸி, குயிண்டன் டிகாக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் க்ளாசன், கேசவ் மகாராஜ், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி இங்கிடி, ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, ககிசோ ரபாடா, டப்ரைஸ் ஷாம்ஸி, ரஸ்ஸி வான்டெர் டூஸன், லிசார்டு வில்லியம்ஸ் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

இதுவரை நடந்த உலகக்கோப்பைகளில் அரையிறுதி சுற்றுவரை மட்டுமே தென் ஆப்பிரிக்க அணி சென்றுள்ளது. சமீபத்தில் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான ஒரு நாள் தொடரை தென் ஆப்பிரிக்க அணி வென்றதால் உலகக் கோப்பையை வெல்லலாம் என்ற எதிர்பார்ப்பில் அந்த அணி உள்ளது.

இந்த உரையாடலின் போது இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் மிகவும் ஜாலியாக உரையாடினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com