மீண்டும் அண்ணாமலை இல்லாமல் தொடங்கிய ஆலோசனைக் கூட்டம்!

தமிழ்நாடு பாஜக மாவட்டத் தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டம் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இல்லாமலேயே இன்று தொடங்கியது.
அண்ணாமலை
அண்ணாமலைpt web

சென்னை அமைந்தக்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக மாவட்டத் தலைவர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரும்முன்பே வந்தே மாதரம் பாடல் பாடி கூட்டம் தொடங்கப்பட்டது. இக்கூட்டத்தில் தேசிய மேலிட பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

 அண்ணாமலை இல்லாமல் கூட்டம் தொடங்கியது 

 Annamalai |  TN BJP
அண்ணாமலை இல்லாமல் கூட்டம் தொடங்கியது Annamalai | TN BJP

டெல்லி சென்றுள்ள அண்ணாமலை தமிழகம் திரும்பிவிட்டார். அவர் தலைமையில்தான் கூட்டம் நடைபெறும் என கூறப்பட்ட நிலையில் அண்ணாமலை இல்லாமலேயே கூட்டம் தொடங்கப்பட்டது பேசு பொருளாகியுள்ளது.

அண்ணாமலை
அண்ணாமலை இல்லாத கூட்டம்: நிதியமைச்சரை சந்தித்த அதிமுக எம்.எல்.ஏக்கள்! தமிழக பாஜகவில் என்ன நடக்கிறது?

இருப்பினும் ‘அண்ணாமலை வருவதற்கு காலதாமதம் ஏற்படும்’ என அறிவிக்கப்பட்டது. அண்ணாமலை சரியாக 11.30 மணியளவில் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்கள் காலை 10 மணிக்கு முன்பாகவே இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்துவிட்டதால் கூட்டம் அண்ணாமலை வருவதற்கு முன்பாகவே தொடங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது தொடர்பாகவும், பாஜக தலைமையிலான கூட்டணியில் புதிய கட்சிகளை இணைப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. மதியம் 1.30 மணி வரை இந்த கூட்டம் நடைபெறும் என தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com