கொஞ்சநஞ்ச ஆட்டமா போட்டீங்க.. தொடரும் 17 வருட சோகக்கதை! கோலியை சொல்லி வீழ்த்திய அஸ்வின்!

ஆர்சிபி அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
RR vs RCB
RR vs RCBpt desk

16 வருட கோப்பை கனவு!

2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2024 ஐபிஎல் தொடரின் இறுதியை நெருங்கியிருக்கும் ஐபிஎல் தொடரானது இன்றளவும் உலகத்தின் சிறந்த டி20 லீக்காக ஜொலித்து வருகிறது. 17 வருடங்களை கடந்த போதும் இதில் 4 அணிகள் மட்டுமே இதுவரை ஆளுமை செலுத்திய அணியாக இருந்துவருகின்றன.

அதில் 12 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய சிஎஸ்கே, 10 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய மும்பை இந்தியன்ஸை தொடர்ந்து, மூன்றாவது இடத்தில் தற்போது 9வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ஆர்சிபி அணியும் இருக்கின்றது. அதனை தொடர்ந்து 4வது இடத்தில் 8 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இருந்துவருகின்றன.

RR vs RCB
RR vs RCBpt desk

இதில் சோகம் என்னவென்றால் இந்த 4 அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 ஐபிஎல் கோப்பைகள், மும்பை இந்தியன்ஸ் அணி 5 ஐபிஎல் கோப்பைகள் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 ஐபிஎல் கோப்பைகள் என தங்களுடைய ஆளுமை மற்றும் பலத்திற்கு ஏற்ப கோப்பைகளை வென்று குவித்துள்ளன.

ஆனால் RCB அணியை பொறுத்தவரையில் மட்டும்தான் இன்னும் ஐபிஎல் கோப்பையானது எட்டாக்கனியாகவே இருந்துவருகிறது. குறைந்தபட்சம் ஆர்சிபி அணி அவர்களுடைய திறைமைக்கேற்ப 2 கோப்பைகளையாவது வென்றிருக்க வேண்டும்.

ஆனால் 3 முறை ஐபிஎல் இறுதிப்போட்டி, ஒருமுறை சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டி என 4 முறை பைனல் சுற்றுக்கு தகுதிபெற்றபோதும் கூட அந்த அணியால் ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை.
RR vs RCB
“சிலர் கோலியை எடுக்க வேண்டாம் என்பதற்காகவே குறைகூறுகிறார்கள்..” - WC தேர்வு குறித்து ரிக்கி பாண்டிங்

இதுவரை இல்லாத கம்பேக் கொடுத்த RCB அணி!

ஆர்சிபி அணிக்கும் ஐபிஎல் கோப்பைக்குமான காதல் என்பது பிரேக்கப் காதலாகவே இன்று வரை அமைந்துவருகிறது. ஆனால் இந்த தோல்விமுகத்தை நடந்துமுடிந்த மகளிர் ஐபிஎல் தொடரில் முடிவுக்கு கொண்டுவந்த மகளிர் ஆர்சிபி அணி முதல்முறையாக கோப்பை வென்று சாதனை படைத்தது.

மகளிர் அணியை போலவே ஆண்கள் அணியும் இந்தவருடம் கோப்பை வெல்லும் என்ற நம்பிக்கை எல்லோரிடத்திலும் அதிகமாகவே இருந்தது. ஆனால் மேக்ஸ்வெல் உட்பட பல ஆர்சிபி பேட்ஸ்மேன்கள் தொடக்கத்தில் ஃபார்மில் இல்லாததால் அந்த அணி 7 தோல்விகளை சந்தித்து படுமோசமான ஒரு நிலைக்கு சென்றது.

Kohli
Kohlipt desk

அதற்குபிறகு வாழ்வா - சாவா போராட்டம் நடத்திய பெங்களூரு அணி, தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வெற்றிபெற்றதோடு மட்டுமில்லாமல் நடப்பு சாம்பியன் அணியான சிஎஸ்கேவை தொடரிலிருந்தே வெளியேற்றி பிளே ஆஃப்க்கு தகுதிபெற்றது.

எப்போதும் Luck இல்லாத ஆர்சிபி அணிக்கு இந்தமுறை எல்லாமே சாதகமாக மாற, எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியை எப்படியும் வீழ்த்திவிடலாம் என்று நம்பிக்கையோடு களம்கண்டது. ஆனால் களம்கண்ட ஆர்சிபி அணிக்கு என்னவோ, ராஜஸ்தான் அணி கடுமையான சவால்களை வைத்திருந்தது.

RR vs RCB
“போட்டில தோல்வியடைஞ்சாலும் அதே அன்புதான்..” - வளர்ப்பு நாய் குறித்து தோனி சொன்ன சுவாரஸ்யம்!

அபாரமாக பந்துவீசிய RR அணி!

அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற வாழ்வா சாவா போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணிக்கு எதிராக அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ராஜஸ்தான் பவுலர்கள், ஒரு ஓவருக்கு 2 விக்கெட்டுகள் என கொத்துக்கொத்தாக விக்கெட்டை பறித்து ஆர்சிபி அணியை படுமோசமான ஒரு நிலைக்கு தள்ளினர்.

RR vs RCB
RR vs RCBpt desk

தொடக்கத்தில் 3 ஓவர்கள் வீசி வெறும் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த டிரெண்ட் போல்ட், ஆர்சிபி அணியை அதிரடிக்கு திரும்ப அனுமதிக்கவே இல்லை. அவ்வப்போது பவுண்டரிகளை விரட்டி ரன்களை எடுத்துவந்தாலும் முக்கியமான நேரத்தில் அவுட்டாகி வெளியேறிய டூபிளெசி மற்றும் விராட் கோலி இருவரும் அணியை பாதிவழியில் தவிக்கவிட்டு வெளியேறினர். ஆனால் கடினமான நேரத்தில் அணிக்காக சிக்சர் பவுண்டரிகளாக விரட்டிய ரஜத் பட்டிதார் மற்றும் கேம்ரான் கிரீன் இருவரும் ரன்களை எடுத்துவந்து நம்பிக்கையளித்தனர்.

அதுவரை எல்லாம் சரியாக சென்றுகொண்டிருந்த போது ஒரேஓவரில் கிரீன் மற்றும் மேக்ஸ்வெல் இருவரையும் அடுத்தடுத்த பந்துகளில் வெளியேற்றிய ரவிச்சந்திரன் அஸ்வின், ஆர்சிபி அணியை அதளபாதாளத்திற்கே அழைத்துச் சென்றார்.

ரஜத் பட்டிதாரும் 34 ரன்னில் வெளியேற, நல்ல டோட்டலுக்கு எடுத்துச்செல்வார் என்று நினைத்த தினேஷ் கார்த்திக்கும் 13 பந்துகளில் 11 ரன்கள் அடித்து ஏமாற்றினார். கடைசியாக வந்த லாம்ரார் மட்டும் 2 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என அடித்து ரன்களை எடுத்துவர, ஆர்சிபி அணியால் 172 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

Ashwin
Ashwinpt desk

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய Jaiswal!

குறைவான ரன்களே எடுத்திருந்தாலும் ராஜஸ்தான் அணியை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையோடு பந்துவீசியது ஆர்சிபி அணி. பவுலர்கள் சிறப்பாகவே பந்துவீசினாலும் மோசமான ஃபீல்டிங்கை வெளிப்படுத்திய ஆர்சிபி ஃபீல்டர்கள் எளிதான கேட்ச்களை கூட கோட்டைவிட்டு அணியை அழுத்தத்திற்கு எடுத்துச்சென்றனர். தொடக்கத்தில் சொதப்பிய ஜெய்ஸ்வால் மற்றும் டாம் கோலர் ஜோடி, அதற்குபிறகு நிதானமாக விளையாடி விக்கெட்டையே விட்டுக்கொடுக்காமல் ரன்களை எடுத்துவந்தது.

ஆனால் டாம் கோலரை ஒரு அற்புதமான யார்க்கர் மூலம் வெளியேற்றிய லாக்கி ஃபெர்குஷன் விக்கெட்டை எடுத்துவந்தார். என்னதான் விக்கெட்டை இழந்தாலும் மறுமுனையில் ஃபார்மிற்கு திரும்பிய ஜெய்ஸ்வால் 8 பவுண்டரிகளை விரட்டி, ராஜஸ்தான் அணிக்கு நல்ல அடித்தளத்தை அமைத்துகொடுத்தார். ஆனால் ஜெய்ஸ்வால் 45 ரன்னில் அவுட்டாகி வெளியேற, அழுத்தம் அதிகமான நிலையில் சாம்சனும் தன்னுடைய விக்கெட்டை தானாகவே பறிகொடுத்து வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்.

RR vs RCB
“RR vs RCB போட்டி ஒருபக்க ஆட்டமாக இருக்கும் ; ராஜஸ்தானுக்கு பெரிய சிக்கல்!” - கவாஸ்கர் எச்சரிக்கை

Game Changer-ஆக மாறிய ஹெட்மயர்!

திடீரென ராஜஸ்தான் அணி அழுத்தம் காரணமாக தவறான ஷாட்கள் விளையாடி அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, ஆர்சிபி அணி கம்பேக் கொடுத்தது. உடன் முக்கியமான நேரத்தில் துருவ் ஜுரேலை ஒரு அபாரமான ரன்அவுட் மூலம் விராட் கோலி வெளியேற்ற, கடைசி 5 ஓவருக்கு 48 ரன்கள் தேவையென்ற கடினமான நிலையிலேயே இருந்தது போட்டி.

RR vs RCB
RR vs RCBpt desk

இதற்குபிறகு எந்த அணி அழுத்தத்தை சரியாக கையாள்கிறதோ, அந்த அணி வெற்றிபெறும் என்ற நிலைமைக்கு போட்டி செல்ல, கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு பிறகு கம்பேக் கொடுத்த ஷிம்ரன் ஹெட்மயர் இரண்டே ஓவரில் போட்டியை ஆர்ஆர் அணியின் பக்கம் திருப்பிவிட்டார். 3 பவுண்டரிகள் 1 சிக்சர் என ஹெட்மயர் பறக்கவிட, அதுவரை அமைதியாக இருந்த ரியான் பராக் அவருடைய பங்கிற்கு சிக்சர் பவுண்டரி என விளாசி ராஜஸ்தான் அணியின் சேஸிங்கை எளிதாக்கினார். ஆனால் கடைசிவரை போட்டியை விட்டுக்கொடுக்காமல் போராடிய ஆர்சிபி பவுலர்கள் அடுத்தடுத்து பராக் மற்றும் ஹெட்மயர் விக்கெட்டை வீழ்த்த ஆட்டம் 7 பந்துக்கு 5 ரன்கள் என இறுதிவரை சுவாரசியம் கூட்டியது.

ஆனால் கடைசியில் களத்திலிருந்த ரோவ்மன் பவல், பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டு ராஜஸ்தானை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். கோப்பையை வென்றுவிடலாம் என்ற ஆர்சிபி அணியின் 17 வருட கனவை சுக்குநூறாக உடைத்த ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். விராட் கோலி மற்றும் டூபிளெசிஸ் இருவரும் கலங்கிய கண்களுடன் காணப்பட்டனர்.

Kohli - Dinesh karthick
Kohli - Dinesh karthickpt desk

சிறப்பாக பந்துவீசிய பிறகு பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின், போட்டிக்கு முன்னதாக “வா கடைசி ஒருமுறை மிகப்பெரிய போட்டியில் மோதிக்கொள்ளலாம்” என விராட் கோலிக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாக தெரிவித்தார். சொன்னதைபோலவே தரமான சம்பவம் செய்த ரவிச்சந்திரன் அஸ்வின் மிரட்டிவிட்டார்.

RR vs RCB
RR Vs RCB | எலிமினேட்டர் சுற்று.. சமபலத்தில் இரு அணிகள்... வெளியேறப்போவது யார்?

RCB அணிக்கு ரிவன்ஜ் எடுத்த CSK Fans!

சிஎஸ்கே அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு கோப்பையை வென்றுவிட்டதை போல செலப்ரேசரன் செய்த ஆர்சிபி வீரர்களையும், அதனை தொடர்ந்து நடந்த சர்ச்சை சம்பவங்களையும் வைத்து ஆர்சிபி அணியை சிஎஸ்கே ரசிகர்கள் பங்கமாக கலாய்த்துவருகின்றனர். ’அதான் சிஎஸ்கேவை வீழ்த்தி ஏற்கனவே கப் வாங்கிட்டிங்களே, அப்புறம் எதுக்கு இந்த கப்பு’ என்றும், ’இதுக்கு பருத்திமூட்ட குடோன்லயே இருந்திருக்கலாம்’ எனவும், ’பேச்சா பேசுனீங்க கொஞ்சநஞ்ச ஆட்டமா போட்டீங்க’ என்றும் கலாய்த்து வருகின்றனர்.

RR vs RCB
RR vs RCBpt desk

இவையெல்லாவற்றையும் தாண்டி தன்னுடைய கடைசி ஐபிஎல் போட்டியில் விளையாடியதற்காக தினேஷ் கார்த்திற்கு ஆர்சிபி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் பிரியாவிடை கொடுத்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.

RR vs RCB
ஐ.பி.எல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றார் தினேஷ் கார்த்திக்... கட்டியணைத்து பிரியாவிடை கொடுத்த கோலி!

குவாலிஃபயர் 2 போட்டியில் SRH அணியை எதிர்கொள்ளவிருக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com