“போட்டில தோல்வியடைஞ்சாலும் அதே அன்புதான்..” - வளர்ப்பு நாய் குறித்து தோனி சொன்ன சுவாரஸ்யம்!

“நான் தோல்வி அடைந்து வீட்டுக்கு வந்தாலும், என் நாய் அதே மாறாத அன்புடன் என்னை வரவேற்கும்” என தோனி பேட்டியளித்திருக்கும் செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தோனி
தோனிfile image

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறி இருந்தாலும், அவ்வணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் ‘தல’ தோனியின் ருசிகர பேட்டிகளை கேட்டு அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் தோனி அளித்திருக்கும் பேட்டி ஒன்று, இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தோனி
தோனிட்விட்டர்

அதில் அவர் கூறியிருக்கும் முக்கியமான சில பதிவுகளை, இணையதளவாசிகள் ’கட்’ செய்து வைரலாக்கி வருகின்றனர். அதில், ”நான் தோல்வி அடைந்து வீட்டுக்கு வந்தாலும், என் நாய் அதே மாறாத அன்புடன் என்னை வரவேற்கும்” என தோனி பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க: “மேட்சுல வயசாயிடுச்சுனு யாரும் பாவம் பார்க்க மாட்டாங்க..” வெளிப்படையாகப் பேசிய தோனி!

தோனி
“டெஸ்ட்டிலிருந்து விரைவாகவே ஓய்வை அறிவிக்க இதுதான் காரணம்” - 10 ஆண்டுகளுக்குப் பிறகு பேசிய தோனி!

இதுகுறித்த அந்த பேட்டியில், “நான் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகிய பின் என் குடும்பத்தினருடன் அதிக நேரத்தைச் செலவிட விரும்பினேன். அதேசமயம், மனதளவிலும் சுறுசுறுப்பாக இருக்க விரும்பினேன். என் மனதில் எப்போதும் ஓர் உத்வேகம் இருக்க வேண்டும் என நான் நினைத்தேன். எனக்கு விவசாயம் செய்ய மிகவும் பிடிக்கும். மேலும், மோட்டார் பைக்குகளும் எனக்கு மிகவும் பிடிக்கும். பாரம்பரிய கார்களைச் சேகரிப்பதும் பிடிக்கும். இதுபோன்ற விஷயங்கள் என்னை மனஅழுத்தத்தில் இருந்து வெளியே கொண்டு வரும்.

தோனி
தோனிட்விட்டர்

எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டால், மோட்டார் பைக்குகள் மற்றும் கார்களை நிறுத்திவைத்திருக்கும் இடத்திற்குச் செல்வேன். அங்கு சில மணிநேரத்தைச் செலவிடுவேன். அப்போது என் மன அழுத்தம் வெளியேறும். அதன்பின் மீண்டும் வீட்டுக்கு வந்து விடுவேன்.

அதுபோல், நான் சிறுவயது முதலே செல்லப்பிராணிகளுடனேயே அதிகம் வளர்ந்தேன். அது பூனையோ அல்லது நாயாகவோகூட இருக்கலாம். ஆனால் நாய்களே எனக்கு அதிகம் பிடிக்கும். அவை, நம்மீது அளவு கடந்த அன்பைச் செலுத்தும். நான் ஒரு போட்டியில் தோல்வியடைந்து வீட்டுக்கு வந்தாலும், என் நாய் அதே மாறாத அன்புடன் என்னை வரவேற்கும்" என அதில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: தோனி இல்லாத CSK? ரசிகர்களுக்கு சாத்தியமா.. சங்கடமா? மாற்றுவதற்கான வழி என்ன?

தோனி
எக்ஸ் தளம் மீது கோபமா.. இன்ஸ்டாவை அதிகம் விரும்புவது ஏன்? தோனி சொன்ன ருசிகர பதில்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com