“சிலர் கோலியை எடுக்க வேண்டாம் என்பதற்காகவே குறைகூறுகிறார்கள்..” - WC தேர்வு குறித்து ரிக்கி பாண்டிங்

டி20 வடிவத்தில் பல சாதனை இன்னிங்ஸ்களை விராட் கோலி விளையாடியிருக்கும் போதிலும், அவர் டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பெறவேண்டுமா என்ற குழப்பம் நீடித்துவருகிறது.
விராட் கோலி - ரிக்கி பாண்டிங்
விராட் கோலி - ரிக்கி பாண்டிங்rcb

கிரிக்கெட்டில் யாராலும் எட்டவே முடியாத பல உலகசாதனைகளை தன்வசம் வைத்திருக்கும் விராட் கோலி, சமீபகாலமாக டி20 வடிவ கிரிக்கெட்டில் விளையாட வேண்டுமா என்ற விமர்சனத்தை சந்தித்துவருகிறார். அதற்கு காரணமாக குறுகியவடிவ கிரிக்கெட்டில் அவருடைய ஸ்டிரைக்ரேட் சில அதிரடி வீரர்களுடன் ஒப்பிடப்பட்டு விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் நடப்பு ஐபிஎல் தொடரில் 741 ரன்களை குவித்து அதிக ரன்கள் அடித்தவராக இருக்கும் விராட் கோலி, 151 என்ற சிறந்த ஸ்டிரைக்ரேட்டுடன் அபாரமாக விளையாடிவருகிறார். ஐபிஎல்லில் 8 சதங்களுடன் பல சாதனைகளை வைத்திருக்கும் அவர், 6 ஐபிஎல் தொடர்களில் 500 ரன்களை பதிவுசெய்தபோதிலும் விமர்சனம் செய்யப்படுவது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையே ஏற்படுத்துகிறது.

virat kohli
virat kohli

இந்நிலையில் விராட் கோலி இந்திய அணியில் இருக்க கூடாது என சிலர் சொல்வது வேடிக்கையாக இருப்பதாக ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

விராட் கோலி - ரிக்கி பாண்டிங்
தோனி இல்லாத CSK? ரசிகர்களுக்கு சாத்தியமா.. சங்கடமா? மாற்றுவதற்கான வழி என்ன?

சிலர் ஏதாவது சொல்லவேண்டுமென குறைகூறுகிறார்கள்!

விராட் கோலியின் தேர்வு குறித்து ஐசிசி உடன் பேசியிருக்கும் ரிக்கி பாண்டிங், விராட் கோலி ஒரு பெரிய மேட்ச் வின்னர் என்று புகழ்ந்துள்ளார்.

கோலி குறித்து பேசியிருக்கும் அவர், “இந்தியாவிற்காக என்னுடைய முதல் தேர்வு விராட் கோலியாகத்தான் இருப்பார். அவருடைய கிளாஸ் மற்றும் அனுபவத்திற்கு மாற்று வீரர் யாருமே இல்லை. அவரை அணியில் எடுக்கவேண்டாம் என சிலர் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. இந்தியாவில் உள்ள சிலர் அவரைத் தேர்வு செய்ய வேண்டாம் என்பதற்காகவே ஏதாவது காரணத்தை தேட முயற்சிப்பார்கள் என்று நினைக்கிறேன். கடந்த உலகக்கோப்பையிலும் விராட் கோலியின் தேர்வு கேள்விக்குறியாக இருந்தது, ஆனால் அவர் பாகிஸ்தானுக்கு எதிராக என்ன செய்தார் என்பதை யாராலும் மறந்துவிட முடியாது. கோலி எப்போதும் ஒரு பெரிய மேட்ச் வின்னிங் வீரர்” என்று ஐசிசி உடன் பேசியுள்ளார்.

விராட் கோலி - ரிக்கி பாண்டிங்
விராட் கோலி - ரிக்கி பாண்டிங்

அதே நேரம் உலகக்கோப்பையில் இடதுகை ஓப்பனிங் வீரர் பற்றாக்குறை குறித்து பேசிய அவர்,

இந்தியாவிற்கு தொடக்கத்தில் இடது கை ஹிட்டர் இல்லாதது பெரிய குறையாகவே இருந்துவருகிறது. அதனால்தான் அவர்கள் ஜெய்ஸ்வாலிடம் சென்றுள்ளார்கள். ஆனால் தற்போது விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக சிறப்பாக செயல்படுவதால், அவர்கள்தான் விளையாடுவார்கள் என நம்புகிறேன். ஒருவேளை விராட் மற்றும் ரோகித் இருவரும் ஒப்பனிங் இறங்கி விளையாடினால், அதற்குபிறகு சூர்யகுமார் போன்ற வீரர்கள் வந்து இந்தியாவிற்கு சிறந்த தொடக்கத்தை அமைத்து கொடுப்பர்” என்று பேசியுள்ளார்.

விராட் கோலி - ரிக்கி பாண்டிங்
“RR vs RCB போட்டி ஒருபக்க ஆட்டமாக இருக்கும் ; ராஜஸ்தானுக்கு பெரிய சிக்கல்!” - கவாஸ்கர் எச்சரிக்கை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com