தினேஷ் கார்த்திக்ட்விட்டர்
T20
ஐ.பி.எல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றார் தினேஷ் கார்த்திக்... கட்டியணைத்து பிரியாவிடை கொடுத்த கோலி!
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இருந்து தினேஷ் கார்த்திக் ஓய்வு பெற்றார்.
பெங்களூரு அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டரான தினேஷ் கார்த்திக், எலிமினேட்டரில் ராஜஸ்தானிடம் அடைந்த தோல்வியை அடுத்து தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
தனது விக்கெட் கீப்பிங் கிளவுஸை தூக்கி காட்டி ஓய்வை அறிவித்த அவருக்கு சக பெங்களூரு வீரர்கள் மரியாதை செய்தனர். விராட் கோலி கட்டியணைத்து பிரியாவிடை அளித்தார்.
தலைப்புச் செய்திகள் | மீண்டும் தகர்ந்த RCB-ன் கனவு முதல் மஞ்ஞுமல் பாய்ஸ்க்கு செக் வைத்த இளையராஜா வரை
தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக், ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு, பஞ்சாப், குஜராத், மும்பை ஆகிய அணிகளில் விளையாடி 4,842 ரன்கள் சேர்த்துள்ளளார்.
இதில் 22 அரைசதங்கள் அடங்கும். சர்வதேச கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வை நேரடியாக அவர் அறிவிக்கவில்லை என்றாலும், வர்ணணையாளராக செயல்பட்டு வருகிறார்.