“RR vs RCB போட்டி ஒருபக்க ஆட்டமாக இருக்கும் ; ராஜஸ்தானுக்கு பெரிய சிக்கல்!” - கவாஸ்கர் எச்சரிக்கை

தொடர்ச்சியாக 4 தோல்விகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், 6 தொடர் வெற்றிகளுடன் ஆர்சிபி அணியும் எலிமினேட்டர் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
RR vs RCB
RR vs RCBweb

2024 ஐபிஎல் தொடர் தொடங்கியதிலிருந்தே கோப்பையை வெல்லப்போகும் ஒரே அணியாகவும், இவர்களை எந்த அணியாலும் வீழ்த்த முடியாது எனக்கூறும் அளவு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் 9 போட்டிகளில் ஒரேயொரு தோல்வியை மட்டுமே சந்தித்திருந்த அந்த அணி, 8 வெற்றிகளுடன் இரண்டாவது அணியாக அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டது.

ஆனால் அடுத்த 5 போட்டிகளில் ‘யார் கண் பட்டதோ’ என்பது போல தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்துவரும் அந்த அணி வெற்றியின் பாதைக்கு திரும்ப முடியாமல் தடுமாறிவருகிறது.

RR vs RCB
”இது நடக்கலனா இந்தியா டி20 உலகக்கோப்பை வெல்லாது..”! - இந்திய அணிக்கு முன்னாள் AUS கேப்டன் எச்சரிக்கை

8 வெற்றிகளுடன் RR இருந்த போது.. RCB நிலை என்ன?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த போது, ஆர்சிபி அணி 8-ல் ஒன்றில் மட்டுமே வெற்றிப்பெற்றது கடைசி இடத்தில் நீடித்திருந்தது.

RCB
RCB

ஆனால் ’இனி இழப்பதற்கு ஒன்றுமே இல்லை’ என வெறித்தனமாக பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி, தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வெற்றிபெற்று நடப்பு சாம்பியன் அணியான சிஎஸ்கேவை தொடரிலிருந்தே வெளியேற்றி கெத்தாக அரையிறுதிக்குள் நுழைந்து வலுவான ஒரு அணியாக ஜொலித்துவருகிறது.

RR vs RCB
’CSK-லிருந்து வெளியேறுங்கள்’- இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு Fleming-ஐ குறிவைக்கும் BCCI

எந்த அணிக்கு வெற்றிவாய்ப்பு? - சுனில் கவாஸ்கர்

ஒரு மோசமான தொடர் தோல்விகளிலிருந்து வெளிவர முடியாமல் தவித்துவரும் ராஜஸ்தான் அணி, ஜோஸ் பட்லர் என்ற முக்கியமான வீரர் இல்லாமல் தடுமாறிவருகிறது. அந்த அணியில் சஞ்சு சாம்சன், ரியான் பராக்கை தவிர வேறு எந்த வீரர்களும் சோபிக்காமல் இருந்துவருகின்றனர்.

rcb
rcbcricinfo

இந்நிலையில் RR vs RCB போட்டி குறித்து பேசியிருக்கும் முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர், “ஆர்சிபி அணி செய்திருப்பது ஒன்றும் சாதாரண விசயம் இல்லை. முதலில் இப்படி அவர்களால் மீண்டுவர முடியும் என்று நம்புவதற்கு ஏதாவது ஒரு நம்பமுடியாத சக்தி தேவை. அது நிச்சயம் டூபிளெசிஸ் மற்றும் விராட் கோலியிடம் இருந்துதான் கிடைத்திருக்கும் என நம்புகிறேன், ஏனென்றால் அவர்கள்தான் அணியின் மூத்த வீரர்கள். ஒருவேளை அவர்கள் ‘அவ்வளவுதான் நாம் அனைத்தையும் இழந்துவிட்டோம்’ என்று நினைத்திருந்தால் மற்ற வீரர்களால் கம்பேக் கொடுத்திருக்க முடியாது” என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உடன் பேசியுள்ளார்.

rr vs rcb
rr vs rcbpt web

அதேநேரத்தில் வெற்றிக்காக போராடிவரும் RR அணி குறித்து பேசிய அவர், “ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ச்சியாக அவர்களின் நான்கு - ஐந்து போட்டிகளில் தோல்வியடைந்துள்ளனர். கடைசி போட்டியிலும் அவர்களால் விளையாட முடியவில்லை. பயிற்சியில் கூட விளையாடாமல் வெளியேறினர். இதே ஆடுகளத்தில் நேற்று KKR செய்ததை போல அவர்கள் ஏதாவது சிறப்பாகச் செய்யாவிட்டால், இது RCB அணிக்கு சாதகமாக ஒருதலைபட்ச போட்டியாக அமையும். அப்படி அமையாவிட்டால் நான் நிச்சயம் ஆச்சரியப்படுவேன்” என்று குறியுள்ளார்.

RR vs RCB
“மேட்சுல வயசாயிடுச்சுனு யாரும் பாவம் பார்க்க மாட்டாங்க..” வெளிப்படையாகப் பேசிய தோனி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com