“7 வருட கேப்டன்சியில் நான் வருத்தப்படுவது, சூர்யகுமார் யாதவ் விஷயத்துக்காகதான்”- மனம் திறந்த கம்பீர்

"நான் எனது 7 வருட கேப்டன்சியில் வருத்தப்படும் ஒரே விஷயம் சூர்யகுமாரின் முழு திறனையும் உபயோகப்படுத்த முடியாமல் விட்டுவிட்டேன் என்பதற்குத்தான்" என கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டன் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
சூர்யகுமார் யாதவ், கவுதம் காம்பீர்
சூர்யகுமார் யாதவ், கவுதம் காம்பீர்pt web

சூர்யகுமார் யாதவ்

சூர்யகுமார் யாதவ்..... டி20 என்றால் இவர் பெயர் இல்லாமல் பட்டியலை எழுத முடியாது. அவர் களத்திற்கு வருகிறார் என்றால் ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆர்ப்பரிக்கின்றனர். ஏனெனில், கன்சிஸ்டென்ஸி என்பது அவரது பேட்டிங்கில் இருந்தது. ஐபிஎல்லில் சீசனுக்கு சீசன் ரன்களைக் குவித்தார். இந்தியாவின் 360 டிகிரி. இந்தியாவின் ஏபி டிவில்லியர்ஸ் என்றெல்லாம் புகழப்படுகிறார். ஏனெனில் எந்த பந்தை, எங்கு சிக்ஸராக அடிப்பார் என்பது யாருக்கும் தெரியாது.

2018 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ரன்களைக் குவித்து வருகிறார் சூர்யகுமார் யாதவ். 2012 ஆம் ஆண்டே ஐபிஎல்லில் மும்பை அணிக்காக அறிமுகம் ஆகி இருந்தாலும், ஒரே ஒரு போட்டியில் மட்டும்தான் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் டக் அவுட்.

பின் 2014 ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்காக வாங்கப்பட்டார். தொடர்ச்சியாக 4 வருடங்கள் கொல்கத்தா அணிக்காக விளையாடினார். அப்போது மிடில் ஆர்டராக களமிறக்கப்பட்டதால் சூர்யகுமார் யாதவின் முழு திறனும் வெளிப்படவில்லை. நான்கு ஆண்டுகளிலும் அவர் 200 ரன்களைத் தாண்டவில்லை.

சூர்யகுமார் யாதவ், கவுதம் காம்பீர்
‘இதுதான் மும்பை அணியில் கடைசி IPL..’! ரோகித்-அபிஷேக் நாயர் சர்ச்சை உரையாடல் குறித்து KKR CEO பதில்!

பின்னர் 2018 ஆம் ஆண்டு மீண்டும் மும்பை அணிக்காக விளையாடினார். மிடில் ஆர்டரில் இருந்த அவரது பொறுப்பு மாற்றப்பட்டது. ஒன் டவுன் பேட்ஸ்மேனாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களமிறங்கினார். முதல் சீசனிலேயே 512 ரன்கள். 4 அரை சதங்களும் அடக்கம். பின் சீசனுக்கு சீசன் ரன்களைக் குவித்தார். பின் இந்திய அணியிலும் அறிமுகம் கிடைத்தது. அங்கும் சாதித்தார். தற்போதைய மும்பை இந்தியன்ஸ் அணியில் தவிர்க்க முடியாத வீரர் என்றால் சூர்யகுமார் யாதவையும் சொல்லலாம்.

suryakumar yadav
suryakumar yadavcricinfo

இந்நிலையில்தான், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பயிற்சியாளருமான கவுதம் காம்பீர், தனது கேப்டன்சியில் விளையாடி இருந்த சூர்யகுமார் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

சூர்யகுமார் யாதவ், கவுதம் காம்பீர்
ரோகித், பும்ராவை தொடர்ந்து சூர்யகுமார்? தொடர்ந்து உடையும் மும்பை அணி! என்ன நடந்தது?

“7வருட கேப்டன்சியில் வருத்தப்படும் விஷயம்” - கவுதம் காம்பீர்

கவுதம் கம்பீர் கூறுகையில், “ஒரு தலைவரின் பங்கு என்பது ஒரு வீரரின் சிறந்த திறனைக் கண்டு உலகுக்கு காட்டுவதாகும். எனது 7 வருட கேப்டன் பதவியில் நான் வருத்தப்படும் ஒரே விஷயம் ஒரு அணியாக சூர்யகுமார் யாதவை அவரது திறமைக்கு ஏற்றவாறு சரியாக பயன்படுத்த முடியவில்லை என்பதற்குத்தான். அப்போதைய அணியின் காம்பினேஷன்தான் அதற்கு காரணம். நீங்கள் நம்பர் 3ல் ஒரு வீரரை மட்டும்தான் பயன்படுத்த முடியும். மேலும் ஒரு அணியின் தலைவராக மற்ற 10 வீரர்களைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். அவர் நம்பர் 3 பேட்ஸ்மேனாக களமிறங்கி இருந்தால் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருப்பார். அதேசமயத்தில் நம்பர் 7ல் களமிறங்கியும் சிறப்பாகவே விளையாடினார்.

அவர் ஒரு அணியின் வீரராக இருந்தார். தனிப்பட்ட முறையில் யார் வேண்டுமானாலும் சிறந்த வீரராக இருக்கலாம். ஆனால் ஒரு அணி வீரராக இருப்பது கடினமான பணி. நீங்கள் அவரை நம்பர் 6 அல்லது 7ல் களமிறக்கினாலும் அல்லது பெஞ்ச்சில் உட்கார வைத்தாலும் சிரித்துக் கொண்டே எதற்கும் தயாராக இருப்பார். அதனால் அவரை துணை கேப்டனாக நியமித்தோம்.

அவருக்கு மூன்று வகையான ஆட்டங்களிலும் சிறந்துவிளங்கும் திறன் உள்ளது. மேலும், நீங்கள் உங்களை ஒரு வடிவ ஆட்டத்திற்கான வீரராக மாற்றினால் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் குறைவாகவே சாதித்திருப்பீர்கள். அவர் ஒருநாள் போட்டியிலும் பந்துவீச்சுக்கு எதிராக ஆபத்தான பேட்ஸ்மேனாக இருக்கிறார். மேலும் அவர் தன்னை ஒரு வடிவத்திற்கே ஆட்டக்காரராக மாற்றிக்கொள்ள மாட்டார் என நம்புகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

சூர்யகுமார் யாதவ், கவுதம் காம்பீர்
உலகக்கோப்பைக்கு உடன்பாடு இல்லாத தேர்வா ஹர்திக்? மும்பை வீரர்கள் பயிற்சியில் நிகழ்ந்ததென்ன?

2019 ஆம் ஆண்டு அவர் 424 ரன்களை குவித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் இரண்டாவது அதிக ரன்களை எடுத்தவர் என்ற பேட்ஸ்மேனாக திகழ்ந்தார். நடப்பு சீசனில் சூர்யகுமார் யாதவ் 10 இன்னிங்ஸ்களில் விளையாடி 345 ரன்களைக் குவித்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் மூன்று அரைசதங்கள் அடக்கம்.

kkr
kkrTwitter

கொல்கத்தா அணி 13 போட்டிகளில் விளையாடி 9 போட்டிகளில் வெற்றி பெற்று 19 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சூர்யகுமார் யாதவ், கவுதம் காம்பீர்
’CSK-லிருந்து வெளியேறுங்கள்’- இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு Fleming-ஐ குறிவைக்கும் BCCI

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com