உலகக்கோப்பைக்கு உடன்பாடு இல்லாத தேர்வா ஹர்திக்? மும்பை வீரர்கள் பயிற்சியில் நிகழ்ந்ததென்ன?

"ஹர்திக் முடிந்தவரை தனது ஆட்டத்தில் கவனம் செலுத்துவதை ரோகித் உறுதி செய்வார். இந்திய அணிக்கு ஹர்திக் எவ்வளவு முக்கியம் என்பதையும் ரோகித் அறிவார்" மைக்கேல் க்ளார்க்
ஹர்திக், ரோகித் சர்மா
ஹர்திக், ரோகித் சர்மாpt web

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி மிக மோசமாக விளையாடி புள்ளிப்பட்டியலில் 9 ஆவது இடத்தில் உள்ளது. இதுவரை 13 போட்டிகளில் 4ல் மட்டுமே வெற்றி பெற்று 9 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. ரன்ரேட்டும் -0.271 என்ற அளவிலேயே உள்ளது.

ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியாட்விட்டர்

அனைத்திற்கும் காரணம் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியே காரணம் என்றும் அவரது முடிவெடுக்கும் திறன் குறித்தும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களே குற்றம்சாட்டுகின்றனர். அதேசமயத்தில் ஹர்திக் மற்றும் ரோகித் சர்மா இடையே இடைவெளி அதிகமாகிறது என்றும் தகவல்கள் வெளிவருகின்றன.

ஹர்திக், ரோகித் சர்மா
ஆர்சிபியா? சிஎஸ்கேவா? யாருக்கு வெற்றிவாய்ப்பு அதிகம்? Stats சொல்வது என்ன? ஒரு அலசல்!

ஹர்திக் தேர்வில் மகிழ்ச்சியில்லை

இத்தகைய சூழலில்தான் உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் மும்பை அணியின் வீரர்கள் 4 பேர் இடம்பெற்றிருந்தனர். இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவும், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஹர்திக் பாண்டியாவை அணியில் சேர்க்க கேப்டன் ரோகித் சர்மாவிற்கும், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கருக்கும் உடன்பாடு இல்லை என்ற தகவல் வெளியானது. டைனிக் ஜாக்ரன் குறிப்பிடப்பட்டுள்ள தகவலின்படி, டி20 உலகக்கோப்பையில் ஹர்திக் பாண்டியா இடம்பிடித்ததில் ரோகித் சர்மாவிற்கு மகிழ்ச்சியில்லை என்று கூறப்படுகிறது.

‘பிசிசிஐ நிர்வாகிகள் கொடுத்த அழுத்தத்தால்தான் ஹர்திக் பாண்டியா இடம்பிடித்துள்ளார். அவர் டி20 கிரிக்கெட் வடிவத்தின் நிரந்தர கேப்டனாக பார்க்கப்படுவதால், அவரை அணியில் இருந்து நீக்க முடியாது என்று பிசிசிஐ கூறிவிட்டது. இந்த முடிவில் ரோகித் சர்மா மகிழ்ச்சியடைவில்லை. அதனால் டி20 உலகக்கோப்பைக்கு பிறகு ஒட்டுமொத்தமாக குறுகிய வடிவ கிரிக்கெட்டிலிருந்து ரோகித் சர்மா ஓய்வுபெற முடிவெடுத்திருக்கிறார்’ எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஹர்திக் பாண்டியா - ரோகித் சர்மா
ஹர்திக் பாண்டியா - ரோகித் சர்மாX

ஹர்திக் மற்றும் ரோகித் இருவருக்கும் இடையே உள்ள இடைவெளி, இந்தியாவின் கோப்பை வெல்லும் கனவை நனவாக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வரும் செய்திகள் அனைத்தும் இருவருக்கும் இடையிலான கேள்விகளையே எழுப்புகின்றன.

பயிற்சியின்போது நிகழ்ந்ததென்ன?

ஹர்திக் பாண்டியா - ரோகித் சர்மா
ஹர்திக் பாண்டியா - ரோகித் சர்மாx

நடப்பு ஐபிஎல் தொடருக்கான பயிற்சியில் ஈடுபடும்போது கூட ஹர்திக்கும் ரோகித்தும் ஒன்றாக பயிற்சி செய்தது அரிதாகவே நிகழ்ந்தது என்று டைனிக் ஜாக்ரன் தெரிவித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தாவிற்கு இடையேயான போட்டிக்கு முன்னதான பயிற்சியின் போது, ரோகித் முதலில் நெட் பயிற்சியை மேற்கொண்டார். அப்போது ஹர்திக் இல்லை. ரோகித் தனது பயிற்சியை முடித்துவிட்டு திலக் மற்றும் சூர்யகுமார் யாதவ் உடன் ஓரமாக அமர்ந்திருந்த நிலையில், ஹர்திக் தனது பயிற்சியை மேற்கொள்ள வந்தபோது, மூவரும் எழுந்து மைதானத்தின் மறுபுறம் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

ஹர்திக், ரோகித் சர்மா
BCCI அழுத்தத்தால் தான் ஹர்திக் தேர்வு.. டி20-லிருந்து ஓய்வுபெற ரோகித் முடிவு! அதிர்ச்சி தகவல்!

“ஹர்திக் முக்கியம் என்பதை ரோகித் அறிவார்” க்ளார்க்

நடப்பு ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா, 13 இன்னிங்ஸ்களில் விளையாடி, 200 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அவரது சராசரி 18 ரன்களாக மட்டுமே உள்ளது. பந்துவீச்சிலும் இதுவரை 11 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இத்தொடரில் அவரது சிறப்பான பந்துவீச்சுகள் தொடரின் இரண்டாம் பாதியில் நிகழ்ந்தவை.

முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் க்ளார்க் ஹர்திக் பாண்டியா ரோகித் சர்மா உறவு குறித்து கூறுகையில், “மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் விடுவிக்கப்பட்டது தொடர்பாக சிக்கல்கள் இருந்தாலும், அது அவர்களது நட்பையோ ரோகித் சர்மாவையோ பாதிக்காது என்றே நினைக்கின்றேன். ஹர்திக் முடிந்தவரை தனது ஆட்டத்தில் கவனம் செலுத்துவதை ரோகித் உறுதி செய்வார். இந்திய அணிக்கு ஹர்திக் எவ்வளவு முக்கியம் என்பதையும் ரோகித் அறிவார்” என தெரிவித்துள்ளார்.

ஹர்திக், ரோகித் சர்மா
RCB, CSK, KKR, RR அணிகளுக்கு விழுந்த மிகப்பெரிய அடி..! இந்தியாவை விட்டு வெளியேறும் அதிரடி வீரர்கள்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com