3 உலகக்கோப்பை.. IPL.. WPL.. 2026 முழுவதும் கிரிக்கெட் திருவிழா! முழு அட்டவணை இதோ!
2026 - ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் போட்டிகள் மற்றும் 3 உலகக்கோப்பைகள் நடைபெறவுள்ளன. இந்திய அணி மற்ற அணிகளுடன் இந்தாண்டில் 4 டெஸ்ட் போட்டிகள் , 18 ஒருநாள் போட்டிகள் மற்றும் 29 டி20 போட்டிகளில் [உலகக்கோப்பை போட்டிகள் சேர்க்காமல் ] விளையாடவுள்ளது. மேலும் அவை எந்தெந்த இடங்கள் மற்றும் மாதங்களில் நடைப்பெறும் என்பதை விரிவாக பார்ப்போம்.
செய்தியாளர் - சு.மாதவன்
ஜனவரி
ஜனவரி மாதத்தில் நடைப்பெறும் போட்டிகள்
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய ஆடவர் யு19 அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.
ஜனவரி 3 - முதல் போட்டி - வில்லோமோர் பார்க்
ஜனவரி 5 - இரண்டாவது போட்டி - வில்லோமோர் பார்க்
ஜனவரி 7 - மூன்றாவது போட்டி - வில்லோமோர் பார்க்
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
ஒருநாள் போட்டிகள்
ஜனவரி 11 - முதல் போட்டி - வதோதரா
ஜனவரி 14 - இரண்டாவது போட்டி - ராஜ்கோட்
ஜனவரி 18 - மூன்றாவது போட்டி - இந்தூர்
டி20 போட்டிகள்
ஜனவரி 21 - முதல் போட்டி - நாக்பூர்
ஜனவரி 23 - இரண்டாவது போட்டி - ராய்பூர்
ஜனவரி 25 - மூன்றாவது போட்டி - கவுகாத்தி
ஜனவரி 28 - நான்காவது போட்டி - விசாகப்பட்டினம்
ஜனவரி 31 - ஐந்தாவது போட்டி - திருவனந்தப்புரம்
பிப்ரவரி - மார்ச் - மே
பிப்ரவரி மாதத்தில் இந்திய மற்றும் இலங்கையில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது.
மார்ச் முதல் மே இறுதி வரை உள்நாட்டு தொடரான இந்திய பிரிமியர் லீக் போட்டிகள் நடைப்பெற உள்ளது.
ஜூலை
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
டி20 போட்டிகள்
ஜூலை 1 - முதல் போட்டி - செஸ்டர் லீ ஸ்டீரிட்
ஜூலை 4 - இரண்டாவது போட்டி -மான்செஸ்டர்
ஜூலை 7 - மூன்றாவது போட்டி - நாட்டிங்காம்
ஜூலை 9 - நான்காவது போட்டி - பிரிஸ்டல்
ஜூலை 11 - ஐந்தாவது போட்டி - சௌத்தாம்ப்டன்
ஒருநாள் போட்டிகள்
ஜூலை 14 - முதல் போட்டி - பர்மிங்காம்
ஜூலை 16 - இரண்டாவது போட்டி - கார்டிப்
ஜூலை 19 - மூன்றாவது போட்டி - லண்டன்
ஆகஸ்ட் - செப்டம்பர் - அக்டோபர் - நவம்பர்
ஆகஸ்ட் மாதத்தில் இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்க்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.
அதன்பிறகு செப்டம்பர் மாதத்தில் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் விளையாடுகிறது.
அக்டோபரில் மாதத்தில் ஆப்கானிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் விளையாடுவுள்ளன.
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5டி20 போட்டிகள் விளையாடுகிறது.
நவம்பர் மாதத்தில் இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
கடைசியாக டிசம்பரில் இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
இந்திய அணி மற்ற அணிகளுடன் இந்தாண்டில் 4 டெஸ்ட் போட்டிகள், 18 ஒருநாள் போட்டிகள் மற்றும் 29 டி20 போட்டிகள் [உலகக்கோப்பை போட்டிகள் சேர்க்காமல்] விளையாடவுள்ளது.
இந்தாண்டில் நடைபெறும் மூன்று உலகக்கோப்பை தொடர்கள்..!
முதலில் ஆடவர் யு19 ஒருநாள் உலகக்கோப்பை தொடர் ஜனவரி 9 முதல் பிப்ரவரி 6 வரை ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறவுள்ளது.
ஆடவர் ஜசிசி டி20 உலகக்கோப்பை தொடர் பிப்ரவரி 9 முதல் மார்ச் 8 வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது.
மகளிர் ஜசிசி டி20 உலகக்கோப்பை தொடர் ஜூன் 12 முதல் ஜூலை 5 வரை இங்கிலாந்தில் நடைபெறுகிறது.
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் தொடர் போட்டிகள்
ஜனவரி மாதத்தில் மகளிர் பிரிமியர் லீக் தொடர் 9-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 5-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன்பிறகு ஐபிஎல் தொடர் மார்ச் 26-ஆம் தேதி தொடங்கி மே 31 வரை நடைபெறுகிறது.
2026-ஆம் ஆண்டில் ஒவ்வொரு மாதத்திலும் கிரிக்கெட் போட்டிகள் நிறைந்து இருப்பதால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாகவே அமைகிறது.

