2026 டி20 உலகக்கோப்பை பேட் கம்மின்ஸ் , கேமரூன் கிரீன்... அசத்தலான ஆஸ்திரேலியா அணி..!
2026 டி20 உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதிரடி ஆட்டக்காரர்களான டிம் டேவிட் , கிளென் மேக்ஸ்வெல் மற்றும் மார்க்கஸ் ஸ்டாயின்ஸ் இடம்பெற்றுள்ளனர்.மிட்டேல் ஓவன் , ஸ்பென்சர் ஜான்சன், ஜோஷ் பிலிப் மற்றும் அலெக்ஸ் கேரி அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டடுள்ளது.ஆல்ரவுண்டர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டடுள்ளது.
2026 டி20 உலகக்கோப்பை தொடர்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் தொடங்கி மார்ச் 8ஆம் தேதிவரை நடைபெறவிருக்கிறது. 20 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 5 அணிகள் இடம்பெற்றுள்ளன.
நடப்பு சாம்பியனாக களமிறங்கும் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.2021 டி20 உலகக்கோப்பை வென்ற ஆஸ்திரேலியா அணி குரூப் பீ பிரிவில் இலங்கை , ஜிம்பாப்வே , அயர்லாந்து , ஓமன் உள்ளிட்ட அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.
2026 டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியா அணி எப்படி இருக்கு..!
ஆஸ்திரேலியா அணி கடந்த 2025 ஆண்டில் 16 டி20 போட்டியில் 10-ல் வெற்றி பெற்றுள்ளது. இதில் 3 போட்டிகள் முடிவில்லை மற்றும் 3 போட்டிகளில் தோல்வி கண்டுள்ளது. ஆஸ்திரேலியா அணி தலைமை தேர்வாளர் ஜார்ஜி பெய்லி கூறுகையில் நாங்கள் தொடர்சியாக டி20 போட்டிகளில் வெற்றி இருக்கிறோம். இலங்கை மற்றும் இந்திய ஆடுகள சூழ்நிலைக்கு ஏற்ப வீரர்களை தேர்வு செய்து இருக்கிறேன். நிச்சயம் இந்த அணி 2026 டி20 உலகக்கோப்பை வெல்ல ஏற்றவாறு இருக்கும் என கூறினார்.
2026 டி20 உலகக்கோப்பைக்கு இன்னும் ஒரு மாதங்களில் இருக்கும் நிலையில் ஆஸ்திரேலியா அணி மிட்டேல் மார்ஷ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பைக்கு ஏற்ப அதிரடி ஆட்டக்காரர்கள் அதிகம் பேர் இடம்பிடித்துள்ளார். அதிரடி வீரர்கள் டிராவிஸ் ஹெட் , மிட்டேல் மார்ஷ் , கிளென் மேக்ஸ்வெல் ,டிம் டேவிட் , மேத்யூ ஷார்ட் மற்றும் மார்க்கஸ் ஸ்டாயின்ஸ் இடம்பிடித்துள்ளனர். விக்கெட் கீப்பர்கள் பொருத்தவரை ஜோஷ் இங்கிலீஸ் மட்டுமே இடம்பிடித்துள்ளார்.
பேட்டிங்களில் மற்றும் பந்துவீச்சில் கவனம் செலுத்தும் கேமரூன் கிரீன், பேட் கம்மின்ஸ் மீண்டும் திரும்பியுள்ளது அணிக்கு வலுசேர்க்கிறது . லெக் ஸ்பின்னர் ஆடம் ஜாம்பா அணியின் முக்கிய ஸ்பின்னராக வழிநடத்த உள்ளார். வேகப்பந்து வீச்சாளர்களான நேதன் எல்லிஸ் , சேவியர் பார்ட்லெட் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
சர்வதேச டி20 போட்டிகளில் அதிகம் விளையாடாத வீரர்களான கூப்பர் கான்லி மற்றும் மேத்யூ குன்னுமேனன் அணியில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.ஆஸ்திரேலியா அணியில் 2 பேட்ஸ்மேன்கள், 7 ஆல்ரவுண்டர்கள், 1 விக்கெட் கீப்பர், 3 வேகப்பந்துவீச்சாளர் மற்றும் 2 ஸ்பின்னர்கள் இடம்பெற்றுள்ளனர்.
ஆஸ்திரேலியா அணியில் உள்ள குறைகள்
இன்று அறிவிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியா அணியில் ஒரு சில குறைகள் உள்ளது. இந்த மாத இறுதியில் தற்போது தேர்வு செய்துள்ள ஆஸ்திரேலியா அணியில் ஒரு சில மாற்றங்கள் நிகழக்கூடும். ஏனெனில் விக்கெட் கீப்பர் ஒருவர் மட்டுமே உள்ளார் மாற்று விக்கெட் கீப்பர் அணியில் இல்லை இதன் வெளிப்பாடு உலகக்கோப்பையில் தெரியவரும்.
மேலும் அணியில் சர்வதேச டி20 போட்டிகளில் அதிகம் விளையாடாத வீரர்களான கூப்பர் கான்லி மற்றும் மேத்யூ குன்னுமேனன் அணியில் இடம்பெற்றுள்ளது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் இந்திய மற்றும் இலங்கை ஆடுகளத்தில் இதுவரை ஆடவில்லை . இவர்களின் ஆட்டம் உலகக்கோப்பையில் எப்படி இருக்கும் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மற்றப்படி அணியில் ஆல்ரவுண்டர்கள் அதிகம் இருப்பது அணிக்கு முதுகெலும்பாக உள்ளது . எனவே ஆஸ்திரேலியா அணி 2026 டி20 உலகக்கோப்பை வெல்ல ஏற்றவாறு இருக்கும் என்பது மாற்று கருத்தே இல்லை.
ஐ. சி. சி விதிப்படி ஜனவரி 31 வரை உலகக்கோப்பைக்கு அறிவித்துள்ள அணியில் மாற்றங்களை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
2026 டி20 உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலியா அணி
மிட்டேல் மார்ஷ் [ கேப்டன் ],டிராவிஸ் ஹெட் ,ஜோஷ் இங்கிலீஸ் [ விக்கெட் கீப்பர் ] ,கேமரூன் கிரின் ,டிம் டேவிட் ,கூப்பர் கான்லி,கிளென் மேக்ஸ்வெல் ,மார்கஸ் ஸ்டாயின்ஸ் ,மேத்யூ ஷார்ட் ,பேட் கம்மின்ஸ் ,நேதன் எல்லிஸ் ,ஜோஷ் ஹேசில்வுட் ,ஆடம் ஜாம்பா ,சேவியர் பார்லெட் மற்றும் மேத்யூ குன்னுமேனன் .
