தோனியின் ரன் அவுட்டை நினைவுகூர்ந்த டுபிளஸி
தோனியின் ரன் அவுட்டை நினைவுகூர்ந்த டுபிளஸிweb

”தோனியின் மாஸ்டர் மைண்ட் தான் உதவியது..” 2026 முதல் சூப்பர் ஓவர் வெற்றி.. டுபிளசி சொன்ன FlashBack!

2026ஆம் ஆண்டின் முதல் சூப்பர் ஓவர் ஆண்டின் தொடக்க நாளான ஜனவரி 1ஆம் தேதியே நடந்தது. தென்னாப்பிரிக்கா டி20 லீக்கில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸை சூப்பர் ஓவரில் வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி..
Published on
Summary

தென்னாப்பிரிக்கா டி20 லீக்கில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் த்ரில் வெற்றிக்கு தோனியின் மாஸ்டர் மைண்ட் உதவியது. டூபிளஸி, வங்கதேசத்துக்கு எதிரான தோனியின் ரன் அவுட்டை நினைவுகூர்ந்து, அதே மாதிரி ரன்அவுட் மூலம் சூப்பர் ஓவரில் வென்றோம் என கூறினார். இந்த வெற்றி, தோனியின் கீப்பிங் மாஸ்டர் மைண்ட் திறமையை மீண்டும் நிரூபித்தது.

தென்னாப்பிரிக்கா டி20 லீக்கில் நேற்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி, டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடியது. முதலில் விளையாடிய சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 205 ரன்கள் குவித்து அசத்தியது. தொடர்ந்து விளையாடிய டர்பன் அணியும் 20 ஓவரில் 205 ரன்கள் அடிக்க ஆட்டம் சமனில் முடிந்தது.

ஆனால் டர்பன் அணி 19.5 ஓவரில் 205 ரன்கள் அடிக்க, கடைசி 1 பந்தில் 1 ரன் அடித்தால் வெற்றி என்ற சாதகமான நிலையே இருந்தது. ஆனால் இறுதிபந்தை வியான் முல்டர் சிறப்பாக வீச பேட்ஸ்மேன் அதை தவறவிட்டார். முடிவில் சூப்பர் கிங்ஸ் விக்கெட் கீப்பர் டானவன் பந்தை பிடித்து ரன் அவுட் அடிக்க, சூப்பர் கிங்ஸ் அணி ஆட்டத்தை சமன்செய்து சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றிபெற்றது.

இந்தப்போட்டியில் வென்றபிறகு பேசிய சூப்பர் கிங்ஸ் கேப்டன் டூபிளஸி, அந்த ரன் அவுட்டுக்கு பிறகு தோனியின் மாஸ்டர் மைண்ட் தான் உதவியதாக வெளிப்படையாக பேசினார். அவர் வங்கதேசத்துக்கு எதிரான தோனியின் ரன் அவுட்டை நினைவுகூர்ந்தார்.

தோனியின் ரன் அவுட்டை நினைவுகூர்ந்த டுபிளஸி
”அவர்களாக அனுப்பும் முன்; நீங்களாகவே சென்றுவிடுங்கள்..” ஆஸி வீரரை ஓய்வுபெற சொல்லும் ENG வீரர்!

தோனியின் அந்த ரன்அவுட்-தான் நினைவுக்கு வந்தது..

பரபரப்பான சூப்பர் ஓவர் வெற்றிக்கு பின் முக்கியமான ரன் அவுட் குறித்து பேசிய டூபிளஸி, ”எனக்கு ஸ்டம்புக்கு பின்னால் தோனி ஒருமுறை இந்தியாவிற்காக செய்த ரன்அவுட் நியாபகம் வந்தது. அது வங்கதேசத்துக்கு எதிரான உலகக்கோப்பை போட்டி என நினைக்கிறேன். அப்போது பவுலர் ஸ்டம்புக்கு வெளிப்புறமாக கட்டர் பந்தை வீசுயிருப்பார், தோனி தன்னுடைய கீப்பிங் கிளவுஸை கழற்றிவிட்டு ரன் அவுட்டுக்கு ரெடியாக இருப்பார். எனக்கு சட்டென அது நினைவுக்கு வந்தது, நாங்கள் விக்கெட்டுக்கு இல்லாமல் ரன்அவுட்டிற்கு திட்டமிட்டோம், அது சாத்தியமானது” என்று பேசியுள்ளார்.

2016 டி20 உலகக்கோப்பையில் கேப்டன் தோனி நிகழ்த்தியது மேஜிக் என்றே சொல்லலாம். அந்தப்போட்டியில் வங்கதேசம் வெற்றிபெற 3 பந்துக்கு 2 விக்கெட்டுகள் தேவையாக இருந்தது. ஆனால் வங்கதேசம் 3 பந்திலும் 3 விக்கெட்டை பறிகொடுத்து 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருந்தது. கடைசி பந்தில் தோனி செய்த ரன்அவுட்டில் யாராலும் மறக்கவே முடியாது.. அது காலத்திற்கும் அழியாத ஒரு சம்பவம்..

தோனியின் ரன் அவுட்டை நினைவுகூர்ந்த டுபிளஸி
வங்கதேசத்தின் இதயங்களை உடைத்த தோனி.. சரித்திரத்தில் மறக்க முடியாத ரன்அவுட்! 1 ரன்னில் வென்ற இந்தியா!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com