உஸ்மான் கவாஜா
உஸ்மான் கவாஜாweb

“நிறத்தால் வேறுபடுத்தப்பட்டேன்..” - இன ரீதியான பாகுபாடு குறித்து எமோசனலாக பேசிய கவாஜா!

ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஊடகங்களும், முன்னாள் வீரர்களும் நிறத்தால், இனத்தால் தன்மீது வைத்த பாகுபாடு குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜா எமோசனலாக பேசியுள்ளார்..
Published on
Summary

உஸ்மான் கவாஜா, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் விளையாடிய முதல் முஸ்லிம் வீரர், தான் எதிர்கொண்ட இன ரீதியான பாகுபாடு குறித்து வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். தனது பயணத்தில் நிற வேறுபாடு காரணமாக வித்தியாசமாக நடத்தப்பட்டதை எமோசனலாக பேசியுள்ளார்.

பாகிஸ்தானில் பிறந்து முஸ்லிம் பின்புலத்துடன் கூடிய ஒரு கிரிக்கெட் வீரர் ஆஸ்திரேலியா அணிக்கு விளையாடியது உஸ்மான் கவாஜா மட்டுமே. பேட்டிங்கில் எப்படி அதிரடியை வெளிப்படுத்துவாரோ, அதேபோலவே தன்னுடைய அதிரடியான அரசியல் நிலைப்பாட்டுக்காகவும் பேசப்பட்டவர் கவாஜா. வெளிப்புற அரசியலை கடந்து, கிரிக்கெட் களத்தில் உள்ள அரசியலையும் கடந்துவர அவர் போராடவேண்டியிருந்தது. அதை தற்போது வெளிப்படையாக பேசியுள்ளார்.

உஸ்மான் கவாஜா
உஸ்மான் கவாஜா

ஒருமுறை பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் "அனைத்து உயிர்களும் சமம்" மற்றும் "சுதந்திரம் ஒரு மனித உரிமை" என்று எழுதப்பட்ட காலணிகளை அணிய அவர் தடைசெய்யப்பட்டார். பின்னர் காசா மக்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக கருப்பு கைப்பட்டை அணிந்ததற்காக கண்டிக்கப்பட்டார். தனது பேட்டில் புறா சின்னத்தை வைக்க விண்ணப்பித்தார், அது நிராகரிக்கப்பட்டது.

இப்படி தன்னுடைய நிலைப்பாட்டுக்காக தண்டிக்கப்பட்ட காவாஜா, தற்போது தான் எப்படி நிற வேறுபாடு, இனவேறுபாடு காரணமாக வித்தியாசமாக நடத்தப்பட்டேன் என்று வெளிப்படையாகவும், எமோசனலாகவும் பேசியுள்ளார்.

உஸ்மான் கவாஜா
ஜம்மு - காஷ்மீர் | ஹெல்மெட்டில் பாலஸ்தீன கொடியை பயன்படுத்திய கிரிக்கெட் வீரரால் சர்ச்சை!

நிறத்தால் வேறுபடுத்தப்பட்டேன்..

ஆஸ்திரேலியா அணிக்காக 6 ஆஷஸ் தொடரில் விளையாடியிருக்கிறார் கவாஜா. அதில் இரண்டு வெற்றி, இரண்டு தோல்வி, இரண்டு டிரா. மேலும் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஸிப் இறுதிப்போட்டியில் பட்டம் வென்றபோது அணியின் ஒரு அங்கமாக இருந்தவர் கவாஜா. 43 பேட்டிங் சராசரியுடன் பலபோட்டிகளில் ஆஸ்திரேலியா அணிக்காக சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளார்.

அவருடைய டெஸ்ட் பயணத்தின் கதை இரண்டாக பிரிக்கப்பட்டது. ஒரு பாதியில் சிறப்பாக விளையாடியபோதும் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டார். இரண்டாம் பாதியில் மீண்டும் போராடி களத்திற்கு வந்த அவர் தன்னுடைய பேட்டிங்கால் மிளிர்ந்தார்.

தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் தன்னையும் ஆஸ்திரேலிய வீரராக ஊடகங்களும், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களும், மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக எப்படி முயற்சித்தேன் என போராடிய கதையை கவாஜா பேசியுள்ளார்.

உஸ்மான் கவாஜா
”அவர்களாக அனுப்பும் முன்; நீங்களாகவே சென்றுவிடுங்கள்..” ஆஸி வீரரை ஓய்வுபெற சொல்லும் ENG வீரர்!

ஓய்வை அறிவித்தபிறகு செய்தியாளர்களிடம் பேசிய கவாஜா, “25 வயதில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்க மிகவும் கடினமாக முயற்சித்தேன். மற்ற ஆஸ்திரேலிய வீரர்களை போல உடை அணிய முயற்சித்தேன். நான் குடிக்காவிட்டாலும் மற்ற வீரர்களை போல கிளப்புகளுக்குச் சென்று கொண்டிருந்தேன். இதையெல்லாம் முயற்சி செய்தபிறகும் அது வேலை செய்யவில்லை. நான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியிலிருந்து நீக்கப்பட்டேன், ஊடகங்களாலும், முன்னாள் வீரர்களாலும் விமர்சிக்கப்பட்டேன். எனக்குப் புரிகிறது - என் பெயர் ஜான் ஸ்மித் இல்லை. 50-50 அழைப்புகள் வரும்போது அவை பெரும்பாலும் என் வழியில் செல்வதில்லை. நான் ஏன் மற்ற எல்லோரையும் போல இருக்க முயற்சிக்கிறேன்?. இங்கு அந்தசூழல் நிச்சயம் அதிகமாக இருக்கிறது.

உஸ்மான் கவாஜா
உஸ்மான் கவாஜா

பெர்த் டெஸ்ட்டுக்கு முன்னதாக கோல்ஃப் விளையாடி முதுகுப் பிரச்னை வந்தபோது, ஊடகங்களும், முன்னாள் வீரர்களும் ’அவர் ஒரு சோம்பேறி, சுயநலவாதி, அணியை பற்றி யோசிக்காதவர்’ என கடுமையாக விமர்சித்தார்கள். எனக்கு ஏற்பட்ட முதுகுப் பிடிப்பு என் கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்று. ஆனால், முன்னாள் வீரர்களும் ஊடகங்களும் தொடர்ந்து 5 நாட்களாக என்னைத் தாக்கினார்கள். வெள்ளையர்கள் அல்லாதவர்கள், குறிப்பாகப் பாகிஸ்தானிய அல்லது வெஸ்ட் இண்டீஸ் பின்னணி கொண்டவர்கள் என்றாலே அவர்கள் 'சோம்பேறிகள்', 'சுயநலவாதிகள்', 'பயிற்சி செய்யாதவர்கள்' என்ற முத்திரை குத்தப்படுகிறது. இதை நான் என் வாழ்நாள் முழுவதும் எதிர்கொண்டு வருகிறேன்.

உஸ்மான் கவாஜா
KKR அணியில் வங்கதேச வீரர்.. ஷாருக் கானை சாடிய பாஜக.. ஐபிஎல்லுக்குள் நுழைந்த அரசியல்!

பீர் குடித்து காயம்ஏற்படுவர்களை என்னால் காட்டமுடியும்..

என்னைப்போல போட்டிக்கு முந்தைய நாள் கோல்ஃப் விளையாடி காயமடைந்த நிறைய வீரர்களை என்னால் உங்களுக்குக் கூற முடியும், ஆனால் அவர்களுக்கு எதிராக எந்த கருத்தும் வைக்கப்படுவதில்லை. அதேபோல முந்தைய இரவு 15 பீர் குடித்துவிட்டு, பின்னர் காயமடைந்த வீரர்களும் இருக்கிறார்கள். அவர்கள் பற்றியும் யாரும் ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. அவர்கள் ஜாலியான ஆஸ்திரேலிய வீரர்கள் என கடந்து சென்றுவிடுகிறார்கள்.

ஆனால் நான் காயமடைந்தால், எல்லோரும் என் நம்பகத்தன்மையையும், ஒரு நபராக நான் யார் என்பதையும் குறை கூறுகிறார்கள். பொதுவாக என்னைப்போல வேறுயாராவது காயமடைந்தால், ஒரு நபராக அவர்களுக்காக வருத்தப்படுவார்கள். ஆனால் எனக்கு அது முற்றிலும் வித்தியாசகமாக நடக்கிறது. அதுதான் எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது, அதைத்தான் நான் நீண்ட காலமாக எதிர்கொண்டு வருகிறேன். நான் அதைப் பற்றி அதிகம் பேசியதில்லை. ஆனால் அதைப் பற்றி இப்போது பேச வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.

நான் நிறைய பேசவிரும்பவில்லை, முன்பைவிட இப்போது கிரிக்கெட்டில் நல்ல நிலையே இருக்கிறது. அடுத்த உஸ்மான் கவாஜா வரும்போது அவருக்கான பயணம் சற்று எளிதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இனி எத்தனை தலைமுறைகள் வந்தாலும், அப்போது வரும் உஸ்மான் கவாஜா ஜான் ஸ்மித்தைப் போலவே நடத்தப்படுகிறார் என்ற ஒரு பாதையை நாம் அடைவோம். அதைத்தான் நான் முழு நேரமும் ஆதரிக்க முயற்சித்து வருகிறேன் என்று பேசியுள்ளார்.

உஸ்மான் கவாஜா
”தோனியின் மாஸ்டர் மைண்ட் தான் உதவியது..” 2026 முதல் சூப்பர் ஓவர் வெற்றி.. டுபிளசி சொன்ன FlashBack!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com