வங்கதேச போட்டிகளை இந்தியாவிலிருந்து இலங்கை மாற்ற முடிவு
வங்கதேச போட்டிகளை இந்தியாவிலிருந்து இலங்கை மாற்ற முடிவுweb

”அடிமைக்காலம் முடிந்துவிட்டது..” இந்தியாவில் உலகக்கோப்பை போட்டிகள் வேண்டாம்.. வங்கதேசம் விலக முடிவு!

இந்தியாவில் எழுந்த கடுமையான அரசியல் எதிர்ப்புகளை தொடர்ந்து வங்கதேச வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேற்றியுள்ளது பிசிசிஐ.
Published on
Summary

வங்கதேச வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை ஐபிஎல்லில் விளையாட அனுமதிக்க கூடாது என்ற இந்தியாவின் எதிர்ப்பால், வங்கதேசம் இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பை போட்டிகளில் இருந்து விலக முடிவு செய்துள்ளது. இதனால், போட்டிகளை இலங்கைக்கு மாற்றுமாறு ஐசிசியிடம் கோரிக்கை வைக்கவுள்ளது.

வங்கதேசத்தில் நடந்துவரும் வன்முறை கலவரத்தில், இந்து மதத்தை சேர்ந்த 2 பேர் அடித்துக் கொல்லப்பட்டத்தை அடுத்து, இந்தியாவில் கடும் எதிர்ப்பலைகள் எழுந்தன. இந்த எதிர்ப்பலைகள் வங்கதேச வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை ஐபிஎல்லில் விளையாட அனுமதிக்க கூடாது என்றும், மீறினால் போட்டி நடத்தும்போது ஆடுகளத்தை பெயர்த்தெடுப்போம் என்றும் ஆன்மிக தலைவர்களால் மிரட்டல் விடுக்கப்பட்டது.

வங்கதேச வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை வெளியேற்றுமாறு கேகேஆர் அணிக்கு பிசிசிஐ அறிவுறுத்தல்
வங்கதேச வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை வெளியேற்றுமாறு கேகேஆர் அணிக்கு பிசிசிஐ அறிவுறுத்தல்web

தொடர்ந்து அரசியல் கட்சியை சேர்ந்த பல்வேறு தரப்பினரால் வங்கதேச வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை ஏலத்தில் எடுத்ததற்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மீதும், அதன் உரிமையாளர் ஷாருக் கான் ’துரோகி’ என்றும் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

இந்தசூழலில் தான் வங்கதேச வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை ரிலீஸ் செய்யுமாறு கொல்கத்தா அணியிடம் பிசிசிஐ வலியுறுத்தியது, அதனை ஏற்றுக்கொண்ட கொல்கத்தா அணியும் முஸ்தஃபிசூரை வெளியேற்றுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில் முஸ்தஃபிசூரை வெளியேற்றியதை தொடர்ந்து வங்கதேச அணி இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பை போட்டிகளிலிருந்து விலகவும், போட்டிகளை இலங்கைக்கு மாற்றவேண்டும் எனவும் ஐசிசிக்கு கோரிக்கை விடுக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வங்கதேச போட்டிகளை இந்தியாவிலிருந்து இலங்கை மாற்ற முடிவு
‘வங்கதேச வீரர் விளையாடினால் பிட்ச்சை பெயர்த்தெடுப்போம்..’ ஐபிஎல் தொடருக்கு மிரட்டல்!

அடிமைக்காலம் முடிந்துவிட்டது..

வங்கதேசம் மற்றும் இந்தியா இடையேயான அரசியல் உறவு மோசமாகிவரும் சூழலில், வங்கதேச வீரர் முஸ்தஃபிசூர் இந்தியாவில் விளையாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்தசூழலில் தான் வங்கதேச அணி தங்களுடைய டி20 உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மாற்றுமாறு ஐ.சி.சி.யிடம் கோரிக்கை வைக்க முடிவுசெய்துள்ளது.

வங்கதேச கிரிக்கெட் அணி
வங்கதேச கிரிக்கெட் அணி

அடுத்த மாதம் நடக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பை போட்டிகளை கொல்கத்தா மற்றும் மும்பையில் விளையாடவிருக்கிறது வங்கதேச அணி. இந்தியாவில் விளையாடவிருக்கும் வங்கதேச வீரர்களின் பாதுகாப்பு குறித்து ஐ.சி.சி.க்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுதவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சனிக்கிழமையான நேற்று அவசர அவசரமாக கூட்டத்தை கூட்டிய வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) சில முக்கியமாக முடிவுகளை எடுத்துள்ளதாக தெரிகிறது.

முஸ்தஃபிசூரை கேகேஆர் வெளியேற்றியதை தொடர்ந்து தன்னுடைய சமூகவலைதளத்தில் பதிவிட்டிருக்கும் வங்கதேச விளையாட்டு ஆலோசகர் ஆசிப் நஸ்ருல், அடிமைத்தனத்தின் காலம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், முஸ்தஃபிசூரை நீக்கியதற்காக பிசிசிஐ மற்றும் கேகேஆர் நிர்வாகத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் எழுதியுள்ளார். மேலும் இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பை போட்டிகளை பாதுகாப்பு காரணம் கருதி இலங்கைக்கு மாற்ற வலியுறுத்தவேண்டும் என்று அறிவுறுத்தியிருப்பதாகவும் பதிவிட்டுள்ளார். வங்கதேசத்தின் கிரிக்கெட் மற்றும் கிரிக்கெட் வீரர்களை அவமதிப்பதை எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனவும் எழுதியுள்ளார்.

வங்கதேச போட்டிகளை இந்தியாவிலிருந்து இலங்கை மாற்ற முடிவு
’வங்கதேச வீரர் முஸ்தஃபிசூரை வெளியேற்றுங்க..’ - KKR அணிக்கு பிசிசிஐ அறிவுறுத்தல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com