“நல்ல பயிற்சியாளர்கள் வீரர்களை குறைகூறுவதில்லை”- சாய் கிஷோரை குற்றஞ்சாட்டிய கோச்; முன்.வீரர் பதிலடி!

7 வருடங்களுக்கு ரஞ்சிக்கோப்பை அரையிறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற தமிழ்நாடு அணி, மும்பைக்கு எதிராக படுதோல்வியை சந்தித்து வெளியேறியது.
சாய் கிஷோர்
சாய் கிஷோர்X

2024 ரஞ்சிக்கோப்பை தொடர் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஜனவரி 5ம் தேதி தொடங்கிய 89வது ரஞ்சி சீசன், தற்போது அரையிறுதி போட்டிகளிம் முடிவை எட்டியுள்ளது. கோப்பைக்காக 38 அணிகள் மோதிய நிலையில், சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாடு, மும்பை, விதர்பா, மத்திய பிரதேசம் முதலிய 4 அணிகள் அரைறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன.

7 ஆண்டுகளாக அரையிறுதிச் சுற்றுக்கு கூட தகுதிபெறாத தமிழ்நாடு அணி, சாய் கிஷோர் தலைமையில் புதிய உச்சத்தை எட்டியது. அதேநேரத்தில் 2016ம் ஆண்டுக்கு பிறகு கோப்பையே வெல்லாத மும்பை அணி, 7 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பை வெல்லும் முனைப்பில் அரையிறுதிக்கு தகுதிப்பெற்றது.

சாய் கிஷோர்
'உதவியதை மறந்துட்டிங்களா?’ - யுவன் சங்கர் ராஜா மறுப்புக்கு ஆர்.கே. சுரேஷ் பதில்! என்ன நடந்தது?

முதல் அரையிறுதிப்போட்டியில் விதர்பா மற்றும் மத்திய பிரதேச அணிகள் பலப்பரீட்சை நடத்திவரும் நிலையில், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் மும்பை அணி தமிழ்நாடு அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

36 வருட கோப்பை கனவு சிதைந்தது!

டாஸ் வென்ற தமிழ்நாடு அணி கேப்டன் சாய் கிஷோர் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் பேட்டிங்கை தேர்வுசெய்து சொதப்பினார். தரமான ஸ்பின்னர்கள் நிரம்பிய தமிழ்நாடு அணியை, வேகப்பந்துவீச்சு மூலம் சிதைத்தது மும்பை அணி.

தமிழ்நாடு - மும்பை
தமிழ்நாடு - மும்பைBCCI

மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 378 ரன்கள் குவித்த நிலையில், தமிழ்நாடு அணி இரண்டு இன்னிங்ஸ்களிலும் 146, 162 ரன்கள் மட்டுமே எடுத்து இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. பந்துவீச்சில் 4 விக்கெட்டுகள், பேட்டிங்கில் 109 ரன்கள் என குவித்து மும்பை வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ஷர்துல் தாக்கூர் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழ்நாடு அணி
தமிழ்நாடு அணி

90 ஆண்டுகளை கடந்து நடந்துகொண்டிருக்கும் ரஞ்சிக்கோப்பை வரலாற்றில், தமிழ்நாடு அணி 1955 மற்றும் 1988 ஆண்டுகள் என இதுவரை இரண்டு முறை மட்டுமே கோப்பையை வென்றுள்ளது. மொத்தமாக 11 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கும் தமிழ்நாடு 2 முறை வெற்றியும், 9 முறை தோல்வியையும் பதிவு செய்துள்ளது. 36 ஆண்டுகளாக கோப்பை வெல்லாத வடுக்களை சுமந்துகொண்டிருக்கும் தமிழ்நாடு, மீண்டும் ஒருமுறை தோல்வி முகத்தோடு திரும்பியுள்ளது.

சாய் கிஷோர்
“டேய் ஷர்துல் மாடே அடிச்சது போதும் டா”.. TN-க்கு எதிராக சதமடித்த தாக்கூர்! திட்டி பதிவிட்ட அஸ்வின்!

சாய் கிஷோரை பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய பயிற்சியாளர்!

அரையிறுதி போட்டியில் ஆடுகளத்தை பார்ப்பதற்கே வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான பச்சைபசேல் என்ற மேற்பரப்பு தயார் செய்யப்பட்டிருந்தது. எந்த அணி கேப்டன் டாஸ் வென்றிருந்தாலும் நிச்சயம் இந்த ஆடுகளத்தில் பந்துவீச்சையே தேர்வுசெய்திருப்பார்கள். ஆனால் தமிழ்நாடு அணி கேப்டன் சாய் கிஷோர் எந்த நம்பிக்கையில் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார் என்று தெரியவில்லை. ஒருவேளை தமிழ்நாடு அணி முதலில் பந்துவீசியிருந்தால், நிச்சயம் இருக்கும் சுழற்பந்துவீச்சு பட்டாளத்தோடு மைதானத்தின் உதவியோடு இறுதிப்போட்டிக்கு சென்றிருக்கலாம். ஆனால் தமிழ்நாடு வாய்ப்பை நழுவவிட்டுள்ளது.

மும்பை அணி
மும்பை அணி

இந்நிலையில் தமிழ்நாடு அணியின் ரஞ்சிக்கோப்பை பயிற்சியாளரான சுலக்ஷன் குல்கர்னி, தோல்விக்கு கேப்டன் சாய் கிஷோரை பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து பேசியிருக்கும் குல்கர்னி, “நாங்கள் போட்டியின் முதல்நாளில் காலை 9 மணிக்கே தோற்றுவிட்டோம். நாங்கள் பந்துவீசியிருக்க வேண்டும். ஆனால் கேப்டனுக்கு வேறு சில உள்ளுணர்வு இருந்துள்ளது. ஆடுகளத்தைப் பார்த்ததும் நாம் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரிந்தது. டாஸ் வென்றோம். அனைத்தும் சரியாக இருந்தது. பயிற்சியாளராக, மும்பைக்காரனாக எனக்கு நிலைமை நன்றாகத் தெரியும். ஆனால் குதிரையை தண்ணீர் பக்கம் மட்டும்தான் என்னால் அழைத்துச் செல்ல முடியும், அதை குடிக்க வைக்க முடியாது” என கடுமையாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

சாய் கிஷோர்
கார் கண்ணாடியை உடைத்த RCB வீராங்கனை! 198 ரன்கள் குவித்து அபாரம் - தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி!

“நல்ல பயிற்சியாளர்கள் வீரர்களை குறைகூறுவதில்லை”! - ஹேமங் பதானி

தமிழ்நாடு பயிற்சியாளர் குல்கர்னி சாய் கிஷோரை குற்றஞ்சாட்டியிருக்கும் வேளையில், முன்னாள் இந்திய வீரர் மற்றும் தமிழ்நாடு வீரரான ஹேமங் பதானி பதிலடி கொடுத்துள்ளார்.

தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், “பயிற்சியாளர் சுலக்ஷன் குல்கர்னி கேப்டன் சாய் கிஷோரை பேருந்திலிருந்து மொத்தமாக திடீரென ஒருவரை இறக்கிவிடுவதுபோல பேசுகிறார். ஒரு குழு சூழலில் என்ன நடந்தாலும் அது உங்களுக்குள்ளாகவே இருக்கவேண்டும், நீங்கள் கேப்டனுக்கு தீ வைத்து இதைப் பற்றி பகிரங்கப்படுத்த வேண்டிய அவசியமில்லை. நல்ல பயிற்சியாளர்கள் அவ்வாறு செய்வதில்லை” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

ஹேமங் பதானியை போல் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக்கும் சாய் கிஷோருக்கு ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் கடைசி நாள் கடைசி சீசனில், விதர்பா அணிக்கு எதிராக 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மத்திய பிரதேசம் போராடி வருகிறது.

சாய் கிஷோர்
சாய் கிஷோர்தான் காரணமா? தமிழ்நாடு ரஞ்சி பயிற்சியாளருக்கு தினேஷ் கார்த்திக் கண்டனம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com