'உதவியதை மறந்துட்டிங்களா?’ - யுவன் சங்கர் ராஜா மறுப்புக்கு ஆர்.கே. சுரேஷ் பதில்! என்ன நடந்தது?

ஆர்.கே. சுரேஷ் இயக்கி நடிக்கும் தென் மாவட்டம் திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதாக கூறப்படும் நிலையில், யுவன் அதை மறுத்துள்ளார். ஆனால் ஆர்கே சுரேஷ் யுவன் ஒப்பந்தமாகியுள்ளதாக பதிவுசெய்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
ஆர்கே சுரேஷ் - யுவன் சங்கர் ராஜா
ஆர்கே சுரேஷ் - யுவன் சங்கர் ராஜாX

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக “தம்பிக்கோட்டை, சலீம், தர்மதுரை” முதலிய ஹிட் படங்களை தயாரித்த ஆர்.கே. சுரேஷ், விநியோகிஸ்தராகவும் பல வெற்றி திரைப்படங்களில் கைக்கோர்த்தார். அதற்கு பிறகு தயாரிப்பாளராக இருந்த ஆர்.கே.சுரேஷை தன்னுடைய தாரை தப்பட்டை திரைப்படத்தில் வில்லன் ரோலில் இயக்குநர் பாலா அறிமுகம் செய்துவைத்தார். அதில் தன்னுடைய சிறப்பான வில்லத்தன நடிப்பால் கவர்ந்த ஆர்.கே.சுரேஷை, “மருது, ஹரஹர மகாதேவகி, இப்படை வெல்லும், காளி, பில்லா பாண்டி, நம்ம வீட்டு பிள்ளை, விருமன்” உள்ளிட்ட படங்களில் இயக்குநர்கள் மெய்ன் கேரக்டர்களில் நடிக்கவைத்தனர்.

அதன்பிறகு மலையாளத்தில் கேரளா ஸ்டேட் விருது வாங்கிய “ஜோசப்” திரைப்படத்தின் ரீமேக்கில் நடித்த ஆர்.கே.சுரேஷ், தற்போது தானே இயக்கி நடிக்கும் “தென் மாவட்டம்” திரைப்படத்தில் நடித்துவருகிறார். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான போது தான் பிரச்னை வெடித்தது.

then mavattam
then mavattam

தென் மாவட்டம் திரைப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக்கில் இசை என்ற இடத்தில் யுவன் சங்கர் ராஜா என்ற பெயர் இடம்பெற்ற நிலையில், ரசிகர்கள் குழப்பமடைந்து நிறைய பதிவுகளையும் கமெண்டுகளையும் போட ஆரம்பித்தனர். ரசிகர்களிடையே ஏற்பட்ட சலசலப்புகளுக்கு இடையே அதை தெளிவுசெய்ய நினைத்த யுவன் சங்கர் ராஜா, அந்த திரைப்படத்திற்கு இசையமைக்கவில்லை என ஒரு பதிவை பதிவிட்டார். இதற்கிடையில் யுவனின் பதிவுக்கு உடனடியாக பதிலளித்திருக்கும் ஆர்.கே. சுரேஷ், நீங்கள் படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிங்க சார் என்று பதிவிட்டதால் பரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆர்கே சுரேஷ் - யுவன் சங்கர் ராஜா
“டேய் ஷர்துல் மாடே அடிச்சது போதும் டா”.. TN-க்கு எதிராக சதமடித்த தாக்கூர்! திட்டி பதிவிட்ட அஸ்வின்!

யுவன் சங்கர் ராஜா மறுப்பும்.. ஆர்.கே. சுரேஷ் பதிலும்!

தென் மாவட்டம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து தெளிவுபடுத்துவதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் யுவன், “ ஊடகம் மற்றும் ரசிகர்களுக்கு ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். தென் மாவட்டம் என்ற படத்தில் நான் இசையமைப்பாளராக கமிட் ஆகவும் இல்லை. யாரும் அது தொடர்பாக என்னிடம் பேசவும் இல்லை” என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் இதற்கு உடனடியாக பதிலளித்திருக்கும் ஆர்.கே. சுரேஷ், “யுவன் சார் நீங்கள் படத்திற்கும், லைவ் கான்சர்ட்டிற்கும் ஒப்பந்தமாகி இருக்கிங்க. ஒப்பந்தத்தை தெளிவாக சரிபார்க்கவும்” என்று பதிவிட்டுள்ளார். யுவன் பதிவால் ஆர்.கே.சுரேஷை விமர்சித்த ரசிகர்கள், தற்போது ஆர்.கே.சுரேஷ் பதிவால் குழப்படைந்துள்ளனர்.

இந்நிலையில் அடுத்தடுத்து யுவனுக்கு கிளியர் செய்யும் விதமாக பதிவுகளை பதிவிட்டுள்ளார் ஆர்.கே.சுரேஷ். அந்த பதிவுகளில், “மாமனிதன் படத்தின் வெளியீட்டின்போது ஏற்பட்ட பிரச்சனையில் உங்களுக்கு பணஉதவி செய்து அந்த சமயத்தில் உங்களுக்கு உற்ற நண்பனாக ஒரே நாளில் பிரச்சினை முடித்தோம். ஒப்பந்தத்தை சரியாக பாருங்கள் சகோதரரே. தென் மாவட்டத்தில் சந்திப்போம், நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

ஆர்கே சுரேஷ் - யுவன் சங்கர் ராஜா
சிஎஸ்கே அணிக்கு புதிய கேப்டன்? தோனியே கொடுத்த சர்ப்ரைஸ் அப்டேட்! யார் மாற்று கேப்டன்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com