கார் கண்ணாடியை உடைத்த RCB வீராங்கனை! 198 ரன்கள் குவித்து அபாரம் - தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி!

மகளிர் ஐபிஎல் தொடரில் உ.பி. வாரியர்ஸ் அணிக்கு எதிராக சிக்சர் அடித்த ஆர்சிபி வீராங்கனை எல்லிஸ் பெர்ரி கார் கண்ணாடியை உடைத்தார்.
எல்லிஸ் பெர்ரி
எல்லிஸ் பெர்ரிweb

மகளிருக்கான 2024 ஐபிஎல் தொடரானது கடந்த பிப்ரவரி 23ம் தேதி முதல் நடந்து வருகிறது. கடந்தாண்டு முதல் தொடங்கி நடைபெற்றுவரும் மகளிர் ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் மும்பை அணி கோப்பை கைப்பற்றிய நிலையில், இரண்டாவது சீசனில் கோப்பையை வெல்ல ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜியண்ட்ஸ் முதலிய 5 அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.

இந்நிலையில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ஆர்சிபி மற்றும் உ.பி. வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதல் இரண்டு போட்டிகளில் வென்று முதலிடத்தில் இருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்கு எதிரான அடுத்தடுத்த 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்து 4வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

எல்லிஸ் பெர்ரி
WPL: 67 அரைசதம், 3 சதம்! அதிவேகமாக 9,000 டி20 ரன்கள் குவித்து மெக் லானிங் சாதனை! டெல்லி அணி வெற்றி!

கார் கண்ணாடியை அடித்து உடைத்த எல்லிஸ் பெர்ரி!

முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய மேகனா மற்றும் மந்தனா இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 5 பவுண்டரிகளை விரட்டிய மேகனா 28 ரன்களில் வெளியேற, 10 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய ஸ்மிரிதி மந்தனா 80 ரன்களை குவித்து அசத்தினார்.

smiriti mandhana
smiriti mandhana

மந்தனா தான் அதிரடியில் மிரட்டுகிறார் என்றால் அடுத்து களத்திற்கு வந்த எல்லிஸ் பெர்ரி 4 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் என துவம்சம் செய்து 37 பந்துகளில் 58 ரன்களை குவித்து மிரட்டிவிட்டார். அப்போது 19வது ஓவரில் தீப்தி ஷர்மாவிற்கு எதிராக இறங்கி வந்த எல்லிஸ் லெக் சைடில் சிக்சருக்கு தூக்கி அடிக்க, பந்து நேராக சென்று விளம்பரத்திற்கு வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடியை உடைத்து சிதறடித்தது. அதைப்பார்த்த எல்லிஸ் பெர்ரி ஷாக்காகி தலையில் கைவைத்தார்.

மந்தனா மற்றும் எல்லிஸ் இருவரின் அபாரமான ஆட்டத்தால் 198 ரன்களை குவித்தது ஆர்சிபி அணி. அதற்குபிறகு மிகப்பெரிய இலக்கை நோக்கி விளையாடிய உ.பி. அணி, கேப்டன் அலிஸா அரைசதமடித்து போராடிய போதும் தோல்வியை சந்தித்தது. அவரை தவிர டாப் ஆர்டர் வீரர்கள் யாரும் சோபிக்கவில்லை, மிடில் ஆர்டர் வீரராக களமிறங்கிய தீப்தி ஷர்மா 4 பவுண்டரிகள், 1 சிக்சர் என விளாசினாலும் முக்கியமான தருணத்தில் 33 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். முடிவில் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது உபி அணி. ஆர்சிபி தங்களுடைய 3வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

எல்லிஸ் பெர்ரி
சிஎஸ்கே அணிக்கு புதிய கேப்டன்? தோனியே கொடுத்த சர்ப்ரைஸ் அப்டேட்! யார் மாற்று கேப்டன்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com