“டேய் ஷர்துல் மாடே அடிச்சது போதும் டா”.. TN-க்கு எதிராக சதமடித்த தாக்கூர்! திட்டி பதிவிட்ட அஸ்வின்!

ரஞ்சிக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணிக்காக பந்துவீச்சில் மட்டுமில்லாமல், பேட்டிங்கிலும் கலக்கிவருகிறார் ஷர்துல் தாக்கூர்.
ashwin - shardul
ashwin - shardulweb

2024 ரஞ்சிக்கோப்பை தொடர் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஜனவரி 5ம் தேதி தொடங்கிய 89வது ரஞ்சி சீசன், தற்போது அரையிறுதி போட்டிகளை எட்டியுள்ளது. கோப்பைக்காக 38 அணிகள் மோதிய நிலையில், சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாடு, மும்பை, விதர்பா, மத்திய பிரதேசம்” முதலிய 4 அணிகள் அரைறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளன.

7 ஆண்டுகளாக அரையிறுதிச் சுற்றுக்கு கூட தகுதிபெறாத தமிழ்நாடு அணியை கேப்டன் சாய் கிஷோர் அரையிறுதிச் சுற்றுக்கு அழைத்துச்சென்றுள்ளார். அதேநேரத்தில் 2016ம் ஆண்டுக்கு பிறகு கோப்பையே வெல்லாத மும்பை அணி, 7 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பை வெல்லும் முனைப்பில் களமிறங்கியுள்ளது. முதல் அரையிறுதிப்போட்டியில் விதர்பா மற்றும் மத்திய பிரதேச அணிகள் மோதும் நிலையில், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் மும்பை மற்றும் தமிழ்நாடு அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

ashwin - shardul
”IPL தொடரால் முதல்தர கிரிக்கெட் தேவையில்லை என நினைக்கிறார்கள்”! - BCCI முடிவில் கபில்தேவ் மகிழ்ச்சி!

தமிழ்நாடு அணியை சிதைத்த சிஎஸ்கே பவுலர்கள்!

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் பவுலர்களான ஷர்துல் தாக்கூர் மற்றும் துஷார் தேஷ்பாண்டே இருவரும் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். ஷர்துல் தாக்கூர் சாய் சுதர்சன் மற்றும் விஜய் ஷங்கர் இருவரையும் வெளியேற்ற, தேஷ்பாண்டே பிரதோஸ் பால், பாபா இந்திரஜித் மற்றும் கேப்டன் சாய் கிஷோர் என டாப் ஆர்டர்கள் 5பேரையும் விரைவாகவே வெளியேற்றி அசத்தினர்.

shardul thakur
shardul thakur

விஜய் சங்கர் 44 ரன்கள் எடுக்க, வாசிங்டன் சுந்தர் மட்டும் கடைசி வரை போராடி 138 பந்துகளுக்கு 43 ரன்களுடன் வெளியேற, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தமிழ்நாடு அணி 146 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ashwin - shardul
மஹி-க்கு இதுதான் கடைசி ஐபிஎல்லா? Definitely Not! எதிர்ப்பார்க்காத பதிலை சொன்ன தோனியின் பால்ய நண்பர்!

தனியொரு ஆளாக மும்பையை காப்பாற்றிய ஷர்துல்!

தமிழ்நாடை தொடர்ந்து தங்களுடைய முதல் இன்னிங்ஸை விளையாடிய மும்பை அணியில், பிரித்வி ஷாவை 5 ரன்னில் வெளியேற்றி நல்ல தொடக்கத்தை குல்தீப் சென் கொடுத்தார். உடன் லால்வானியை சாய் கிஷோர் வெளியேற்ற முதல் நாள் முடிவில் 40 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளுடன் முடித்தது மும்பை அணி. எப்படியும் 200 ரன்களுக்குள் சுருட்டிவிட வேண்டும் என்ற நம்பிக்கையில் இரண்டாவது நாள் பந்துவீச்சை சிறப்பாகவே தொடங்கியது தமிழ்நாடு அணி.

அரைசதமடித்து கெத்துக்காட்டிய முஷீர் கானை வெளியேற்றிய சாய் கிஷோர், அடுத்தடுத்து வந்த ரஹானே, ஹர்திக் தமோர், அவஸ்தி, முலானி என தொடர்ச்சியாக விக்கெட் வேட்டை நடத்தினார். சாய் கிஷோரின் அபாரமான பந்துவீச்சால் 106 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது மும்பை அணி. அடுத்த 3 விக்கெட்டுகளை எப்படியும் விரைவாகவே வீழ்த்திவிடலாம், இந்த போட்டியில் தமிழ்நாடு அணி நல்ல இடத்தை பெற்றுவிடும் என நினைத்தபோது தான் ஷர்துல் தாக்கூர் ஆட்டத்தையே தலைகீழாக திருப்பினார்.

8வது விக்கெட்டுக்கு தமோர் உடன் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட ஷர்துல் தாக்கூர், சிக்சர் பவுண்டரிகள் என விரட்டி பாசிட்டாவான கிரிக்கெட்டை விளையாடினார். தாமோர் வெளியேறினாலும் 9வது விக்கெட்டுக்கு தனுஷ் கோடியானுடன் 43 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு விளையாடிவரும் ஷர்துல் சதத்தை நோக்கி எடுத்துச்சென்றார்.

ashwin - shardul
"Hardik-க்கு மட்டும் தனி விதிமுறையா?” இஷான், ஸ்ரேயாஸ் நீக்கம் குறித்து முன்னாள் இந்திய வீரர் கேள்வி!

டேய் ஷர்துல் அடிச்சது போதும் டா! - அஸ்வின்

ஷர்துல் தாக்கூர் தனியொரு ஆளாக தமிழ்நாடு அணியிடம் இருந்து ஆட்டத்தை எடுத்துச்செல்வதை பார்த்த அஸ்வின், டேய் ஷர்துல் அடிச்சதும் போதும் டா என ஜாலியாக பதிவிட்டுள்ளார்.

எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் அஸ்வின், “டேய் லார்ட் மாடே, போதும் டா” என பதிவிட்டுள்ளார். 103 பந்துகளில் 13 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என விளாசியுள்ள ஷர்துல் தாக்கூர், 109 ரன்களுடன் விளையாடி வருகிறார்.

8 விக்கெட் இழப்புக்கு 290 ரன்களுடன் மும்பை அணி விளையாடிவருகிறது. இதன்மூலம் 144 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. சாய் கிஷோர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

ashwin - shardul
"இந்தியாவுக்காக ஒருபோதும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டாம்.."- இஷான் & ஸ்ரேயாஸை விளாசிய கவாஸ்கர்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com