பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் இணையவிருப்பதாகவும், அப்படம் பான் இந்திய படமாக உருவாகவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆமீர்கான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூட மூன்று கான்களும் இணைந்து நடிப்பது பற்றி கேட்கப்பட்ட போது "நாங்கள் மூவரும் இணைந்து நடிப்பதற்கான கதையை கண்டுபிடிப்பது சவாலாக இருக்கிறது" என்றார்.