ரஜினி டு அமீர்கான்.. ‘கூலி’ படக்குழுவினருக்கு வழங்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்திருக்கும் ’கூலி’ படம் இந்த வாரம், அதாவது சுதந்திர தினத்திற்கு ஒருநாள் முன்பாக ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படம், ரஜினிகாந்தின் 171வது படமாகும். இந்த படத்தில் நாகார்ஜுனா, ஸ்ருதி ஹாசன், உபேந்திரா, சௌபின் ஷாஹிர், பூஜா ஹெக்டே மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அமீர் கான் இந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி தொடங்கிய நிலையில், விற்பனையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் சுமார் 6 லட்சம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்த ஒரேநாளில் ரூ.14.12 கோடியை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், இது வரும் நாட்களில் ரூ.20 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்த்
இந்த நிலையில், இப்படத்தில் நடித்த நடிகர்களின் சம்பளம் பற்றிய தகவலும் வெளியாகி உள்ளது. டெக்கான் ஹெரால்டின் அறிக்கையின்படி, நடிகர் ரஜினிகாந்த் இந்தப் படத்திற்காக ரூ.200 கோடி சம்பளத்தைப் பெற்றுள்ளார் என தெரிகிறது. தமிழ்ப் படங்களின் சாதனையை முறியடிக்கும் முன் விற்பனையைத் தொடர்ந்து, அவரது சம்பளமான ரூ.150 கோடியை மாற்றியமைக்க தயாரிப்பாளர்கள் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
நடிகர் அமீர்கான்
’கூலி’ படத்தில் கொடூரமான கேங்ஸ்டர் கேரக்டரில், ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ள பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிர் கானுக்கு, ரூ.20 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நடிகர் நாகார்ஜுனா
’கூலி’ படத்தில் ரஜினிகாந்துடன் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவும் நடித்துள்ளார். சைமன் கேரக்டரில், நடித்துள்ள நாகார்ஜுனாவுக்கு ரூ.10 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நடிகர்கள் சத்யராஜ், நடிகை ஸ்ருதிஹாசன் சம்பளம்
’கூலி’ படத்தில் ராஜசேகர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் சத்யராஜ் மற்றும் கன்னட நட்சத்திரம் உபேந்திராவுக்கு தலா ரூ.5 கோடி சம்பளம் வழங்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. இதே படத்தில் ப்ரீத்தி வேடத்தில் நடித்திருக்கும் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு, ரூ.4 கோடி வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு ரூ.50 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ரஜினிகாந்தின் 2023 ஆம் ஆண்டு வெளியான ஜெயிலர் படத்திற்குப் பிறகு அவருடன் இணைந்த இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் ரூ.15 கோடி சம்பளம் பெற்றதாகக் கூறப்படுகிறது.