கேரளத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் இடுக்கி, கோழிக்கோடு பத்தனம்திட்டா, எர்ணாகுளம் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இடுக்கியில் 'ரெட் அலர்ட் ' முன்னறிவிப்பை தொடர்ந்து தேக்கடி, வாகமண், மூணாறு உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன. தேக்கடி ஏரியில் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.