இடுக்கி மாவட்டத்திற்கு 'ரெட் அலர்ட்' - தேக்கடி, மூணாறு சுற்றுலா தலங்கள் மூடல்
செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்
தமிழக கேரள எல்லையை இணைக்கும் இடுக்கி மாவட்டத்தில் இன்று அதிதீவிர கன மழைக்கான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்து திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு செய்துள்ளது. இதையடுத்து தென்மேற்கு பருவ மழையும் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இடுக்கி மாவட்டத்தில் தேக்கடி, வாகமண், மூணாறு உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களும் ஆட்சியர் விக்னேஷ்வரி உத்தரவுப்படி மூடப்பட்டுள்ளன.
காற்றின் வேகம் அதிகரிப்பால் தேக்கடி ஏரியில் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கேக்கடி உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளுக்கான மகிழ்விப்புத் திட்டங்கள் முழுவதுமாய் ரத்து செய்யப்பட்டுள்ளன. கோடை விடுமுறையின் நிறைவு காலமான தற்போது, மறு அறிவிப்பு வரும் வரை இடுக்கி சுற்றுலா தலங்கள் மூடப்பட்டிருக்கும் என இடுக்கி ஆட்சியர் விக்னேஷ்வரி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.