இடுக்கி மூணாறில் பயிராகும் ஸ்ட்ராபெர்ரி - விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

இடுக்கி மூணாறில் பயிராகும் ஸ்ட்ராபெர்ரி - விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
இடுக்கி மூணாறில் பயிராகும் ஸ்ட்ராபெர்ரி - விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
இடுக்கி, மூணாறில் விளைவிக்கப்படும் ஸ்ட்ராபெர்ரி பழங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அதிக விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் ஸ்ட்ராபெர்ரி பழங்களை வாங்கிச்செல்கின்றனர்.
ஸ்ட்ராபெர்ரி வெளிநாட்டு பழவகை என்பதால், இன்னமும் இது மேல்தட்டு மக்களிடமும் நகரவாசிகளிடமும் தான் இது அதிக பரிச்சயம். ஆனால் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம்  மூணாறில் தற்போது ஸ்ட்ராபெர்ரி சர்வ சாதாரணம். மலையும் மலை சார்ந்த எப்போதும் குளிர் சீதோஷணம் நிலவும் மூணாறில், ஸ்ட்ராபெர்ரியின் விலையில்லா நாற்றுகளோடு மானியமும் வழங்கி இடுக்கி வேளாண்துறை ஊக்குவித்து வருகிறது. புனேயில் இருந்தும் ஸ்ட்ராபெர்ரி நாற்றுகள் வாங்கி விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
தற்போது இடுக்கி மாவட்டம் மூணாறு, வட்டவடா, மறையூர், காந்தலூர் பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் ஸ்ட்ராபெர்ரி பயிரிடப்பட்டுள்ளது. ரெட் சில்லி, விண்ட்டர் டோன் ஆகிய இரு வகை ஸ்ர்டாபெர்ரி செடிகள் அதிகம் பயிரிடப்பட்டு உள்ளன. மூணாறுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஸ்ட்ராபெர்ரி தோட்டங்களை கண்டு ரசிப்பதோடு பழங்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளாத கொரோனா முடக்கத்தால் மூணாறுக்கு  சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவாக இருந்தது. அப்போதெல்லாம் ஒரு கிலோ ஸ்ட்ராபெரி பழம் 250 ரூபாய்க்கும், 100 கிராம் ஸ்ட்ராபெரி ஜாம் 150 ரூபாய்க்கும் விற்பனையானது.
தற்போது சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் வரத்து அதிகரித்துள்ளதால் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் ஒரு கிலோ ஸ்ட்ராபெர்ரி பழம் கிலோ 400 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. தொடர்ந்து விலை அதிகரிப்பால் ஸ்ட்ராபெர்ரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு பின் கிடைத்த விலை ஏற்றம் மகிழ்ச்சி அளிப்பதாக ஸ்ட்ராபெர்ரி உற்பத்தி செய்யும் மூணாறு விவசாயி சோஜன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com